ஜான்சன் & ஜான்சன் நிறுவனர் பேத்தி மர்ம சாவு

லாஸ் ஏஞ்சலெஸ் ஜான்சன்-ஜான்சன் நிறுவனத்தை நிறுவியர்களில் ஒருவரான முதலாம் ராபர்ட் உட் ஜான்சனின் கொள்ளுப் பேத்தியான கேசி ஜான்சன் தனது வீட்டில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.இறந்து பல நாட்களான நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படுக்கை அறையில் அவர் பிணமாகக் கிடந்ததை வேலைக்காரப் பெண் பார்த்து போலீஸாருக்குத் தெரிவித்த பின்னர்தான் அவரது மரணம் குறித்த தகவல் வெளியானது.30 வயதாகும் கேசி ஜான்சன், ராபர்ட் ஜான்சனின் கொள்ளுப் பேத்திகளில் ஒருவர். ஓரினச் சேர்க்கைப் பழக்கம் உடையவர்.
கடந்த டிசம்பர் மாதம் டிவி நடிகையான டிலா டெக்யூலாவுக்கும், தனக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக அறிவித்தார்.அவருக்கு முன்பு, கர்ட்னி செமல் என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். கர்ட்னிக்கும், கேசிக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மோதல் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கர்ட்னி, கேசியின் தலைமுடிக்குத் தீவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.2006ம் ஆண்டு கேசிக்கும், அவரது உறவினரான எலிசபெத் ராஸ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
எலிசபெத், தனது காதலர் ஜான் டீயை அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார் கேசி.2007ம் ஆண்டு கஸகஸ்தான் நாட்டிலிருந்து ஏவா என்ற குழந்தையை மகளாக தத்தெடுத்தார். அக்குழந்தைக்கு மர்லின் மன்றோ நினைவாக ஏவா மன்றோ என பெயர் சூட்டினார்.கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி திருட்டு வழக்கில் கைதானார் கேசி. முன்னாள் காதலியான கர்ட்னியின் தோழியான ஜாஸ்மின் என்பவரின் நகை, ஷூக்கள், ஆடைகள், ஜட்டிகள் உள்ளிட்டவற்றை திருடியதாக வந்த புகாரின் பேரில் கேசி கைது செய்யப்பட்டார்.
மேலும் ஜாஸ்மின் வீட்டில் பயன்படுத்திய வைப்ரேட்டரை விட்டுச் சென்றதாகவும், கேசி மீது புகார் கூறப்பட்டது. கேசியின் வாழ்க்கை முழுவதும் பரபரப்பானதாகவே இருந்தது. 8 வயதில் அவருக்கு சர்க்கரை வியாதி தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருடைய தந்தை நான்காம் ராபர்ட் உட் ஜான்சன், சர்க்கரை வியாதியை எதிர்த்துப் போராடும் அமைப்பை உருவாக்கினார்.கடந்த டிசம்பர் 29ம் தேதியன்று ட்வீட்டர் மூலம், அனைவருக்கும் இனிய கனவுகள் அமையட்டும், நான் ஒரு புதிய காரை வாங்கியுள்ளேன் என்று மெசேஜ் அனுப்பியிருந்தார் கேசி.
அதன் பின்னர் அவருடனான தொடர்பு இல்லாமல் போனது. காதலி கர்ட்னி, பலமுறை கேசியைத் தொடர்பு கொள்ள முயன்றும் போனில் அவரைப் பிடிக்கவில்லை. இந்த நிலையில்தான் வீட்டு வேலைக்காரப் பெண் கேசி பிணமாகக் கிடந்ததைப் பார்த்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.இது இயற்கை மரணமா அல்லது தற்கொலையா என்பது தெரியவில்லை. ஆனால் கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்

0 comments: