விமானத்தை கடத்தினால் மரண தண்டனை

விமானத்தை கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என மத்திய அமைச்சர்கள் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

விமான போக்குவரத்து பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கடத்தல் தடுப்புக்கு எதிரான சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுதவிர, விமான கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிப்பது குறித்தும் அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தையை தவிர்க்கவும், நடுவானில் விமானம் கடத்தப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய உறுதியான நடவடிக்கை ஆகியவை குறித்தும் அமைச்சர்கள் குழு விவாதித்துள்ளது

0 comments: