நாகை அருகே இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

நாகை மாவட்டம் சந்திரப்பாடி மீனவ கிராமத்தில் இறந்த டால்பின் குட்டி கரை ஒதுங்கியது.

டால்பின் கூட்டத்திலிருந்து பிரிந்து வந்து இது இறந்திருக்கலாம் என மீனவர்கள் கூறினர். டால்பின் குட்டியின் உடலில் எந்தக் காயமும் இல்லை.

கடற்கரைக்கு வந்தபோது நீந்திச் செல்ல முடியாமல் அது இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இது நீண்ட மூக்குடைய டால்பின் வகையைச் சேர்ந்ததாகும். இந்த வகை டால்பின்கள் பசிபிக் பெருங்கடலிலும், மன்னார் வளைகுடாவிலும் அதிகம் காணப்படுகிறது.

இது ஒரு அரிய வகை டால்பின் ஆகும். இதன் காரணமாக மன்னார் வளைகுடாப் பகுதியில் இந்த வகை டால்பின்களைப் பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: