விரும்பிய நெட்வொர்க்கில் ஒரே எண்ணில் பேச இன்னும் லேட்டாகும்

விரும்பிய நெட்வொர்க்கில் ஒரே எண்ணில் பேசும் வசதியை அமலுக்குக் கொண்டுவர மேலும் மூன்று மாதங்கள் தாமதமாகும்.

இப்போதைய நிலவரப்படி வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தத் திட்டத்தை அமலுக்குக் கொண்டு வருவோம் என அரசு அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 31ம் தேதி இந்தத் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக மத்திய தொலைபேசித் துறை அறிவித்திருந்தது. ஆனால் மொபைல் சேவை வழங்கும் சில நிறுவனங்கள், இவ்வசதியை அறிமுகப்படுத்த தேவையான நெட்வொர்க்குகள் தயாராக இல்லை என கைவிரித்துவிட்டன.

இன்னும் சில நிறுவனங்களோ, இப்போதுதான் தங்கள் தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

எனவே, இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான கால கெடுவை வரும் மார்ச் மாதம் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.

இதுகூட சென்னை போன்ற பெருநகரப் பகுதிகளுக்கு மட்டுமே. கிராமப் புறங்களில் இன்னும் லேட்டாகுமாம்.

0 comments: