எச்1பி விசா... விப்ரோ முதலிடம்

அமெரிக்காவில் பணியாற்ற அவசியமான எச்1பி விசா பெற்றதில் 2009-ம் ஆண்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்திய நிறுவனமான விப்ரோ.

இந்த ஒரு ஆண்டில் மட்டும் 1964 எச்1பி விசாவை பெற்று பணியாளர்களை அனுப்பியுள்ளது விப்ரோ. இதன் மூலம் சர்வதேச அளவில் அதிக எச்1பி விசா பெற்றதில் முதலிடம் வகிக்கிறது விப்ரோ.

இதற்கடுத்துதான் மைக்ரோசாப்ட் நிறுவனமே வருகிறது. அந்த நிறுவனம் 1318 விசாக்களைப் பெற்றுள்ளது. இன்டெல் 723 விசாக்களையும், கூகுள் 211 விசாக்களையும் பெற்றுள்ளன.

ஐபிஎம் இந்தியா 695 விசாக்களையும், இன்போஸிஸ் 440 விசாக்களையும், போலாரிஸ் 254 விசாக்களையும், சத்யம் நிறுவனம் 219 விசாக்களையும் பெற்றுள்ளன.

அமெரிக்காவில் எச்1பி விசா பெறுவதில் ஒபாமா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்திய நிறுவனம் ஒன்று டாப் இடத்தைப் பெற்றுள்ளது சாதாரண விஷயமல்ல என்று இ வீக் மீடியா தெரிவித்துள்ளது.

0 comments: