சுவிட்சர்லாந்தில் மாபெரும் பேரணி

காஸா மீதான இஸ்ரேலின் அத்துமீறல் யுத்தத்தின் ஒருவருடப் பூர்த்தியை

ஸ்விட்சர்லாந்தில் மாபெரும் பேரணி

நினைவுகூறுமுகமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.12.2009) நூற்றுக்கணக்கான பலஸ்தீன் ஆதரவாளர்கள் ஸ்விட்சர்லாந்திலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன் ஒன்றுகூடினர்.

இஸ்ரேலிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக 1400 பலூன்கள் ஆகாயத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட இந்நிகழ்வில் ஸ்விட்சர்லாந்தின் கிரீன் கட்சி, சமுதாயக் கட்சி, தொழிலாளர் கட்சி, பிற அமைப்புக்கள், மனித உரிமைகள் குழுக்கள் உள்ளிட்ட நாற்பது அமைப்புக்கள் கலந்துகொண்டன.

இதேவேளை, ஸ்விஸிலிருந்து காஸாவைச் சென்றடைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேலிய அத்துமீறல் யுத்தம் குறித்து அறிக்கையொன்றை வெளியிடவுள்ளனர்.

மேற்படி நிகழ்வின்போது அனைத்து அமைப்புக்கள் சார்பாகவும் ஸ்விட்சர்லாந்தின் வலதுசாரிகள்; வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் காஸாமீது நடைமுறைப்படுத்தியுள்ள முற்றுகை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படல் வேண்டும் என்றும், இஸ்ரேலியப் போர்க் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில், ஜனவரி 7 ஆம் திகதி இஸ்ரேலியப் படையினரால் காஸாவின் ஐ.நா. UNRWA

காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் நிர்மூலமாக்கப்பட்ட ஐ.நா. பாடசாலை

பாடசாலையில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவுதினமாகப் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதோடு, இஸ்ரேலியப் பொருட்களையும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகாரசபைக்கு ஆதரவு வழங்கும் அனைத்துக் கம்பனிகளின் தயாரிப்புக்களையும் பகிஷ்கரிப்புச் செய்யும் போராட்டத்துக்குப் புத்துயிர்ப்பளிப்பதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காஸாவின் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான போர்க்குற்றங்களோடு தொடர்புடைய இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிமொன் பெரஸுக்கு வழங்கப்பட்டுள்ள சமாதானத்துக்கான நோபல் பரிசு இரத்துச் செய்யப்படவேண்டும் என்றும் மேற்படி அமைப்பு கோரியுள்ளது.

நன்றி: PIC

0 comments: