பில்கேட்ஸ்-II இந்தியாவிலிருந்தா... சீனாவிலிருந்தா?

அடுத்த பில்கேட்ஸ் நிச்சயம் அமெரிக்காவிலிருந்து வரமாட்டார்... இந்தியா அல்லது சீனாவிலிருந்தே வருவார் என்கிறது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்று.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸின் வெறும் ஒரு நபருடைய பெயராக மட்டுமல்ல... ஒருநாட்டு வளத்தின், வளர்ச்சியின் குறியீடாக இன்று பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், இதுவரை உலக பொருளாதார வளத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா இருந்தது. இப்போது அந்த இடத்தை நோக்கி வேகமாக சீனா நகர்ந்து வருகிறது. இந்தியாவும் இந்த ரேஸில் ஆரோக்கியமான இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், 'அடுத்த பிலேக்ட்ஸ் எந்த நாட்டிலிருந்து உருவாகலாம்?' என்ற கேள்வியுடன் அமெரிக்கர்களிடையே 'கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன்' என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தவர்களில் 40 விழுக்காட்டினர், அடுத்த பில்கேட்ஸ் இந்தியராகவோ அல்லது சீனாவைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜோக்பி எனும் நிறுவனம் நடத்திய இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 96 சதவிகிதம், வரும் ஆண்டுகளில் அமெரிக்காவில் புதிதாக கண்டுபிடிக்கவோ, அதை வைத்து வளர்ச்சியைச் சாதிக்கவோ வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்.

74 சதவிகித அமெரிக்கர்கள், அடுத்த உலக வல்லரசு நிச்சயம் அமெரிக்கா இல்லை என்றும், இந்தியா, பிரேசில் அல்லது சீனாதான் இந்த பெருமையைப் பெறப் போகின்றன என்றும் கூறியுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் 3779 பேர் பங்கேற்றனர். இவர்களில் 40 சதவிகிதத்தினர், அடுத்த பில்கேட்ஸ் இந்தியா அல்லது சீனாவிலிருந்தான் உருவாகப் போகிறார் என்றனர்.

0 comments: