அல்காயிதா தலைவராக கருதப்படும் உஸாமா பின் லேடனின் புதிய புகைப்படம் என்று கூறி தனது புகைப்படத்தை வெளியிட்டதை எதிர்த்து ஸ்பெயின் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கெதிரான போரின் எதிர்ப்பாளருமான காஸ்பர் லியாமெஸேயர் எஃப்.பி.ஐ யின் தரங்கெட்ட செயலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார்.
எஃப்.பி.ஐ யிடம் நான் விளக்கம் கேட்பேன் இதற்கு போதிய விளக்கம் தராவிட்டால் சட்ட நடவடிக்கைக்கு தயாராவேன் என லியாமெஸேயர் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
52 ஆம் வயதில் உஸாமா எவ்வாறிருப்பார் என்பதை காண்பிப்பதாக கூறி எஃப்.பி.ஐயின் ஃபாரன்சிக் வல்லுநர்கள் உயர்தர தொழிநுட்பத்தை பயன்படுத்தி தயாராக்கியதாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் புகைப்படத்தை வெளியிட்டனர்.
இந்தப் புகைப்படத்தை பார்த்து மிக கவனமாக பரிசோதித்த பிறகு அது தனது புகைப்படத்தை இனையதளத்திலிருந்து எடுத்து சில மாற்றங்கள் செய்து வெளியிட்டிருப்பது லியாமெஸேயருக்கு தெரியவந்தது.
லியாமெஸேயர் கடந்த தேர்தலில் பிரச்சாரத்தில் பயன்படுத்திய புகைப்படத்திலிருந்து நெற்றி, முடி, தாடை ஆகியவற்றை வெட்டி ஒட்டி மாற்றம் ஏற்படுத்திதான் பின்லேடன் புகைப்படத்தை உருவாக்கியதாக எஃப்.பி.ஐ சம்மதித்துள்ளது. எஃப்.பி.ஐ யின் இந்த தரங்கெட்ட செயல் மூலம் தனது பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என லியாமெஸேயர் கூறுகிறார்.
பின்லேடனுக்கு இந்தப் புகைப்படத்தால் எதுவும் நிகழப்போவதில்லை, ஆனால் எனது கதி? லியாமெஸேயர் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறையின் ரிவார்ட் ஃபார் ஜஸ்டிஸ் என்ற இணையதளத்திலிருந்து எஃப்.பி.ஐ அந்த புகைப்படத்தை வாபஸ் பெற்றுள்ளது.
செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்
0 comments:
Post a Comment