உலகின் மிக உயரமான ‘புர்ஜ் துபாய்’ கட்டிடம் இன்று திறப்பு

உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றுள்ள ‘புர்ஜ் துபாய்’ இன்று திறக்கப்படுகிறது. இதன் உயரம் 2,683 அடி என்று கூறப்பட்டாலும், துல்லியமான உயரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தைவானில் உள்ள தைபே-101 கட்டிடம்தான் உலகிலேயே உயரமான கட்டிடம் (1,671 அடி) என்ற பெருமையை பெற்றிருந்தது.

இன்று முதல் புர்ஜ் துபாய் கட்டிடம் அந்தப் பெருமையைப் பெறுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியளவில் அரபு எமிரேட்ஸ் அரசர் மொஹம்மது பின் ரஷித் அல்-மக்டோம், புர்ஜ் துபாய் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.


எமார் கட்டுமான நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் திறப்பு விழாவில் வண்ணமிகு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புர்ஜ் துபாய் கட்டிடத்தின் உயரம் 2,683 அடி இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், அதன் உண்மையான உயரம் 2,700 அடிகளைத் தாண்டும் என அதனை வடிவமைத்த வல்லுனர்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 comments:

Ahamed (doha) said...

Wow... thnx TDN NEWS.