Showing posts with label கைது. Show all posts
Showing posts with label கைது. Show all posts

விநாயகனை கைது செய்து சிறைவைத்த தமிழக காவல்துறையினர்!

மூலக்கடவுளாம், முழு முதற்கடவுளாம், எதையும் விக்னம் இல்லாமல் நிறைவேற்றுப வன் எனக் கூறப்படும். விநாயகன் கடவுள் - சிவ பெருமானின் மூத்த மகன் என்று ஆத்திகர் களால் அழைக்கப்படும் விநாயக கடவுளை கோவை செல்வபுரம் கல்லாமேடு பகுதி காவல்துறையினர் கைது செய்து சிறை வைத்தனர்.


விநாயகனை கூண் டோடு தூக்கும் பொழுது தடுத்த ஆண், பெண், குழந்தைகள் உள்பட 146 பேரையும் காவல் துறை யினர் கைது செய்தனர். இதுபற்றிய செய்தி வரு மாறு:


கோவை செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரி மாரியம்மன் கோவில் பகுதியில், இந்து முன் னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட் டது. மூன்றரை அடி உயர விநாயகர் பொம்மையை நேற்று முன்தினம் வைத் தனர். சதுர்த்தி விழாவை யொட்டி, 20 ஆண்டு களாக அந்த இடத்தில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைப் பது வழக்கமாம். கடந்த ஆண்டு இந்து முன்ன ணியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததால், சிலை வைக்கவில்லையாம்.


இந்த ஆண்டு வழக் கம் போல் சிலை வைப்பதற்கு காவல்துறை யினரிடம் இந்து முன்ன ணியினர் அனுமதி கோரினர். சிலை வைக்கக் கூடாது காவல்துறை எதிர்ப்பு


வேண்டுகோளை நிராகரித்த காவல்துறை யினர் , பிள்ளையார் பொம்மையை வைக்கக் கூடாது என தடை விதித்தனர். இதை ஏற்றுக் கொள்ளாத இந்து முன்னணியினர், பொறுப்பாளர் குணசே கரன் தலைமையில் மூன்றரை அடி விநாயகர் பொம்மையை நேற்று முன்தினம் இரவு அங்கே வைத்தனர். தகவலறிந்த காவல்துறை துணை ஆணையர் நாகராஜன், உதவி ஆணையாளர்கள் குமாரசாமி, பாலாஜி சரவணன் ஆகியோர், "சிலை வைக்கக்கூடாது' என எதிர்ப்பு தெரிவித் தனர். காவல்துறையினரிடம், முறையாக அனுமதி பெறாமல் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது எனக் கூறி, அப்புறப்படுத்த முயன்ற னர். இதை கவனித்த பெண்கள், விநாயகரை சுற்றிவளைத்து அப்புறப் படுத்தவிடாமல் தடுத் தனர்.


இதையடுத்து, காவல் துறையினரால் அங் கிருந்த இந்து முன்னணி தொண்டர்களை கைது செய்து வேனில் ஏற்றி னர். விநாயகரை சுற்றி வளைத்து நின்ற பெண் களை தவிர்த்து, விநாய கர் சிலையை காவல் துறையினரால் கைப் பற்ற முடியவில்லை. விநாயகன் கைது!


அதனால், கடவுள் விநாயகனையும், பெண் களையும் சேர்த்து கைது செய்து காவல்துறை யினர் வேனில் ஏற்றினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று மொத்தம் 146 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்தவர்களை பாது காப்பாக வைக்க கோவை நகரிலுள்ள பல திருமண மண்டபங் களை காவல்துறையினர் தேடி அலைந்தனர். விசேச நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த தால் காலியாக எதுவும் இல்லை. கோவை அண் ணாமலை ஓட்டல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி கைது செய்தவர் களை இறங்க அறிவுறுத் தினர். ஒருவரும் இறங்கா மல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஸ்டேட் பாங்க் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


காவல்துறையினர், கைது செய்தவர்களை காவல் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கைது செய்யப்பட்டவர்களை இறக்கி விட்டனர். விநாயகனையும் இறக்கி வைத்தனர். இதை யடுத்து, கைது செய்யப் பட்டவர்களுக்கு மதிய உணவு காவல்துறையின ரால் வழங்கப்பட்டது. வாங்க மறுத்து அனை வரும் பட்டினிப் போராட் டத்தில் ஈடுபட்டனராம்.


நேற்று காலை நைட்டி அணிந்த நிலையில் கைது செய் யப்பட்ட பெண்கள் பலர் உணவருந்தாமல் காவல் பயிற்சி மைதானத் திலேயே வைக்கப்பட் டனர். இதனிடையே இந்து முன்னணி நிரு வாகிகள் மற்றும் காவல் துறையினருக்குமிடையே சிலை வைப்பது தொடர் பாக பேச்சு வார்த்தை நடந்ததாம். இதில் எந்த முன்னேற்றமும் நேற்று மாலை வரை ஏற்பட வில்லையாம்.

ரூ.1.47 கோடி! மதிப்பிலான கேடமைன் போதைப் பொருள் பறிமுதல் இந்தோனேசியாவுக்கு கடத்த முயன்ற வாலிபர் கைது

Top world news stories and headlines detailசென்னையில் இருந்து இந்தோனேசியாவிற்கு கடத்த இருந்த 1.47 கோடி ரூபாய் மதிப்புள்ள, 14.78 கிலோ எடை கொண்ட கேடமைன் ஹைட்ரோ குளோரைடு என்ற போதைப் பொருளை சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட் டுள்ளார்.சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம் பூருக்கு புறப்பட இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளை, சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்காணித்தனர்.இந்த விமானத்தின் மூலம் மலேசியா சென்று, அங்கிருந்து இந்தோனேசியா செல்வதற்காக சென்னையைச் சேர்ந்த மணி விஜயகுமார்(32) என்பவர், விமான நிலையத்திற்கு வந்தார்.


அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், அவருடைய பேக்கேஜ் களை சோதனையிட்டனர். அதில் சூட்கேஸ் ஒன்றில், சில ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஜார்கள் இருந்தன.விசாரணையில், அவற்றை விற்பனைக்காக எடுத்துச் செல்வதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதில் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்த நிலையில், ஐஸ்கிரீம் தயாரிப்பு ஜார்களை உடைத்துப் பார்த் தனர்.அப்போது, ஜார் களின் பக்கவாட்டு பகுதிகளில், 14.78 கிலோ எடை அளவுள்ள கேடமைன் ஹைட்ரோ குளோரைடு என்ற போதைப் பொருள், பிளாஸ்டிக் கவர்களில் பதுக்கி வைக்கப்பட் டிருந்தது தெரியவந்தது.


சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 1.47 கோடி ரூபாய். போதைப் பொருளை கைப்பற்றிய கஸ்டம்ஸ் அதிகாரிகள், மணி விஜயகுமாரை கைது செய்து விசாரித்தனர்.இக்கடத்தல் சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் கமிஷனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை விமான நிலையத்தில், கேடமைன் போதைப் பொருள் குறித்து தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனை மற்றும் கைது சம்பவத்தை தொடர்ந்து கடந்த பல மாதங்களாக சென்னை வழியாக நடந்து வந்த கேடமைன் போதைப் பொருள் கடத்தல் தடைபட்டது.சென்னையில் இருந்த கெடுபிடி காரணமாக கேடமைன் போதை மருந்து கடத்தல்காரர்கள் கோவை மற்றும் டில்லி ஆகிய விமான நிலையங்கள் மூலம் கடத்தல் தொழிலை செய்து வந்தனர்.நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது சென்னை வழியாக கேடமைன் கடத்த முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது.சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்து, பறிமுதல் செய்துள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


வேலையில்லாத கொடுமை: தமிழகத்தில், படித்து முடித்து வேலையின்றி திரியும் இளைஞர் களை குறிவைத்துள்ள சமூகவிரோத கும்பல், அவர் களை மூளைச் சலவை செய்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடுத்தி வருவது மணி விஜயகுமா ரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.வேலையில்லாமல் இருந்த மணி விஜயகுமார், பல ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு, சதிக் கும்பலின் வலையில் வீழ்ந் துள்ளது குறிப்பிடத்தக்கது.சென்னை மட்டுமல் லாமல், தமிழகத்தின் பல் வேறு நகரங்களில் இருந்தும் படித்த இளை ஞர்கள் பலர், வெளிநாடுகளில் இருந்து கடத்தல் பொருட்களை கொண்டு வர ஈடுபட்டு வருகின் றனர்.

வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி: வாலிபர் கைது

பிரபல நிறுவனம் ஒன்றிலும், திருவேற்காடு நகராட்சியிலும் வேலை வாங்கித் தருவதாக கூறி, 20 பேரிடம் நான்கு லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


வேலூர் ஆணையபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் மோகன் (எ) ராபர்ட் (26). இவர், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், வேலப்பன் சாவடியில் உள்ள டி.வி.எஸ்., நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட்டாக பணிபுரிந்து வந்தார். அப்போது, பிரபல, நிறுவனத்தில் துணை கான்ட் ராக்ட் எடுத்து பணிபுரியும் ஆனந்தனுடன் மோகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆனந்தனுக்கு கீழ் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஆரம்பத்தில் ஆனந்தனுக்கு சில கூலியாட்களை மோகன் அனுப்பி வந்தார். நாளடைவில் வேலைக்கு அனுப்பும் தொழிலாளர் களிடம், மோகன் பணம் வாங்கிக் கொண்டு வேலையில் சேர்த்துவிட்டார்.


இதையறிந்த, நிறுவனம், அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டது. இதனால், அவர் வேலையில்லாமல் சுற்றி திரிந்தார். மோகனின் மாமா முனுசாமி, ராணுவத்தில் பிளம்பராக பணிபுரிந்து வருகிறார். அவரிடம், 'டி.வி.எஸ்., நிறுவனம் மற்றும் திருவேற்காடு நகராட்சியில் வேலைக்கு பலர் தேவைப் படுகின்றனர். யாராவது தெரிந்தால் கூறுங்கள்' என்று மோகன் கூறினார். இது உண்மையென நம்பிய மோகனின் மாமா முனுசாமி, ஆவடியில் சமூக தொண்டு செய்து வரும் ஏகவள்ளியிடம் மோகனை அறிமுகப்படுத்தினார். 'திருவேற்காடு நகராட்சியில் துப்புரவு பணிகளுக்கு பெண்களும், டி.வி.எஸ்., நிறுவனத்திற்கு படித்த பட்டதாரிகளும் தேவைப் படுகின்றனர்,' என ஏகவள்ளியிடம் மோகன் ஆசை வார்த்தை கூறினார். இதில், மயங்கிய ஏகவள்ளி தனக்கு தெரிந்த ஆவடியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 20 பேரை மோகனிடம் அனுப்பினார். அவர்கள் ஒவ்வொருவரிடமும், ஐந்தாயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை மோகன் பெற்றுக் கொண் டார்.


பணம் கொடுத்ததற்கு அத்தாட்சியாக, டி.வி.எஸ்., நிறுவனம் மற்றும் திருவேற்காடு நகராட்சி பெயர் அச்சிட்ட உத்தரவாத சான்று களையும் கொடுத்துள்ளார். மேலும், புகைப்படத் துடன் கூடிய அடை யாள அட்டையையும் மோகன் கொடுத்து அசத்தியுள்ளார். இதனால், வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் நம் பிக்கையாக இருந்தனர். பல நாட்களாகியும், அந்நிறுவனத்திலிருந்து வேலைக்கான அழைப்பு எதுவும் வரவில்லை. இதில், சந்தேகமடைந்து மோகனிடம் விசாரித்தனர். 'ஐந்து அல்லது ஆறு பேரை கூட்டாக அழைத்து வாருங் கள். அப்போதுதான் அந் நிறுவனத்தில் வேலைக்கு எடுப்பார்கள்' என்று மோகன் வற்புறுத்தினார். ஆட்களை மொத்தமாக அழைத்து வர முடியாத நிலையில், பணம் கொடுத் தவர்கள் தவித்தனர். இதற் கிடையே, வீட்டிலிருந்து மோகன் மாயமாகிவிட்டார்.


இது குறித்து, ஆவடி சத்தியவாணிமுத்து நகரை சேர்ந்த லோகேஷ், சுப்பிரமணி உள்ளிட்ட பலர், புறநகர் கமிஷனர் ஜாங்கிட் டிடம் புகார் அளித்தனர். கமிஷனர் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் தெய்வேந் திரன் தலைமையில் தனிப் படை அமைத்து, மோகனை தேடி வந்தனர். வேலப்பன்சாவடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண் டிருந்த மோகனை, தனிப் படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், வேலை வாங்கித் தருவதாக 20 பேரிடம் நான்கு லட்சம் ரூபாய் வரை மோகன் ஏமாற்றியதை ஒப்புக் கொண்டான். கைதான மோகனிடமிருந்து, பிரபல நிறுவனம் மற்றும் திருவேற்காடு நகராட்சியின் போலி ஆவணங் கள் பறிமுதல் செய்யப்பட்டன. மோகனை போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர். சிறப்பாக புலன்விசாரணை செய்து, குற்றவாளியை கைது செய்த போலீசாரை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் பாராட்டினார்.

பூந்தமல்லி இரட்டை கொலை வழக்கில் முக்கிய ரவுடி உட்பட நான்கு பேர் கைது

பூந்தமல்லி கோர்ட்டிற்கு வந்த போது பிரபல ரவுடி சின்னா மற்றும் அவரது வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்ற வாளியான பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மூவரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:


சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந் தவர் சின்னா(41). பிரபல ரவுடியான இவர், கடந்த மாதம் 30ம் தேதி வெடிகுண்டு வீசிய வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பூந்தமல்லி கோர்ட்டிற்கு வந்தார். மதிய உணவு அருந்துவதற்காக தனது வக்கீலுடன் குமணன்சாவடி சென்ற சின்னாவை, 20 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த தாக்குதலில் ஜூனியர் வக்கீல் பகவத் சிங்கும் இறந்தார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின்படி இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, கடந்த 6ம் தேதி கூலிப் படையைச் சேர்ந்த நான்கு பேரையும், 8ம் தேதி இருவரையும் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான ஆற்காடு சுரேஷ், சீசிங் ராஜா மற்றும் கூலிப்படையினர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர்.


கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவான ரவுடிகள் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஆற்காடு சுரேஷ், தனது கூட்டாளிகளுடன் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு விரைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கொலைக்கு பயன் படுத்திய டாடா சுமோ காரில் (டி.என்.01, கே.4147) வந்த ஆற்காடு சுரேஷ்(32), உதயகுமார்(23), குபேந்திரன்(23), ஜெயராமன்(24) ஆகிய நால்வரையும் குயின்ஸ்லாண்டு எதிரே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்த பட்டா கத்தி, அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீசிங் ராஜா உட்பட சிலரை மட்டுமே இன்னும் கைது செய்ய வேண்டும். அவர்களும் விரைவில் சிக்குவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

கர்நாடக மாஜி மந்திரி கைது

Top world news stories and headlines detail

கற்பழிப்பு புகாரில் சிக்கிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹாலப்பா, ஷிமோகா எஸ்.பி., முன்னிலையில் நேற்று சரணடைந்தார்; இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.கர்நாடக உணவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா. சில மாதங்களுக்கு முன், ஷிமோகா மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது, தன் நண்பர் வெங்கடேச மூர்த்தி வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, தன் நண்பரின் மனைவி சந்திராவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஹாலப்பா மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஹாலப்பா, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கை சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.


இந்நிலையில், ஹாலப்பா திடீரென தலைமறைவானார். தலைமறைவாக உள்ள ஹாலப்பாவை நேரில் ஆஜராகும்படி பெங்களூரு பசவேஸ்வர நகர் வீடு, கர்நாடக சட்டசபை எம்.எல்.ஏ., விடுதி, சொரபா, ஹர்த்தாலில் உள்ள வீட்டிற்கு சி.ஐ.டி., போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இந்த நோட்டீஸ் பிரதிகள் ஹாலப்பா வீடுகளின் கதவுகளில் ஒட்டப்பட்டன.தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் கோரி ஷிமோகா கோர்ட்டில் ஹாலப்பா தாக்கல் செய்திருந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. சி.ஐ.டி., போலீசார் விதித்திருந்த கெடு இன்றுடன் முடிகிறது.இந்நிலையில், தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹாலப்பா, ஷிமோகாவிலுள்ள எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., முருகன் முன்னிலையில் நேற்று சரணடைந்தார்.அரசு மருத்துவமனையில் ஹாலப் பாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின், ஹாலப்பாவை போலீசார் கைது செய்தனர்.


இதற்கிடையே, வெங்கடேசமூர்த்தி, சந்திராவதி தம்பதியினர் ஷிமோகா வினோபா நகரில் தங்கள் குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு குடிசென்றனர். ஹாலப்பா மீதான விவகாரம் வெளியான நாளிலிருந்து தன்னையும், தன் மனைவி, பிள்ளைகளை போனில் மிரட்டுவதால் வேறு வீட்டிற்கு செல்வதாக வெங்கடேசமூர்த்தி தெரிவித்தார்.சம்பவம் நடந்த பிறகு ஹாலப்பாவின் உதவியாளர் கிரிஷ், வெங்கடேசமூர்த்தியிடம், 'வழக்கு எதுவும் வேண்டாம்; சமாதானமாக செல்லலாம்; நடந்தவைகளை மறந்து விடலாம்' என்று கூறியுள்ளார். வெங்கடேசமூர்த்தி ஒப்புக் கொள்ளாததால் கிரிஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது.இதை வெங்கடேசமூர்த்தி, மொபைல் போனில் பதிவு செய்து போலீசிடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக கிரிஷ், ஷிமோகா எஸ்.பி., முன் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


மருத்துவமனையில் ஹாலப்பா அனுமதி : கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹாலப்பாவை சிறையில் அடைக்க நீதிபதி சீனிவாசா கவுடா உத்தரவிட்டார். சிறைக்கு சென்ற பின், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஹாலப்பா கூறியதால், ஷிமோகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விவசாயத்துக்கு 12 மணி நேரம் மின்சாரம் வழங்க வலியுறுத்தல்முற்றுகை நடத்திய விவசாயிகள் 66 பேர் கைது

விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி தஞ்சை மாவட்டத்தில் மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் 66 பேரை போலீசார் கைது செய்தனர்.விவசாயத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின் உற்பத்திக்கான திட்டங்களின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், புதிய மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க வேண்டும், பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் தொடர்ச்சியாக முன்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகைப்


போராட்டம் நடந்தது. தஞ்சையில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சாமிநடராஜன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கருப்பையன், வைத்தியநாதசாமி, ஆரோக்கியதாஸ் உட்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர். கும்பகோணத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர். இதே கோரிக்கைகளை வலியு றுத்தி பட்டுக்கோட்டையில் பொருளாளர் கோவிந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேன்ஷனில் தங்கியிருந்த 13 காஷ்மீர் இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை யில் புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டசபைக் கட்டடம் திறக்கப்படவுள்ள நிலையில், சட்டசபைக் கட்டடத்திற்கு அருகில் உள்ள திருவல்லிக்கேணியில் மேன்ஷனில் தங்கியிருந்த 13 ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டசபை கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா வருகிற 13ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வருகின்றனர்.

இதையடுத்து இலங்கைத் தமிழ் அகதிகள் 3 நாட்களுக்கு வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டசபை வளாகத்திற்கு அருகில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷன்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பகுதி மேன்ஷன்களின் சொர்க்கபுரியாகும். ஏகப்பட்ட மேன்ஷன்கள் இங்கு உள்ளன.

வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் இளைஞர்கள் இங்குதான் தங்கியிருந்து வேலைக்குப் போய் வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த மேன்ஷன்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேன்ஷன்கள் தவிர இப்பகுதியில் உள்ள லாட்ஜுகளிலும், போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று ஒரு மேன்ஷனில் சோதனை நடத்திய போது ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த ஷா நவாப்கான் (22), பிலால் அகமது (20), ரியாஸ் அகமது (24), அர்ஷத்லோனா (25). ஷபீர்பாத் (23), மகராஜ்தார் (25), முகமது அல்பாப்தார் (24), நபிபாத் (24), ஹபீர் அகமது (24), பிலால் அகமது (24), முஸ்தபா அகமது (22), தஸ்தூர் உசேன் (24), குலாம் முகமது (24) ஆகியோர் தங்கியிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த 13 பேரும் கடந்த நான்கு நாட்களாக இங்கு தங்கியுள்ளனர். சுடிதார், போர்வை விற்கும் தொழில் செய்வதாகவும், கடந்த 6 மாதமாக சென்னையில் தங்கி இருந்து விற்பனை செய்வதாகவும் அவர்கள் கூறினர்.

ஆனால் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் இருப்பதால், அனைவரின் கைரேகைகளை பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சமீபத்தில் ராயபுரம் பகுதியில் 2 பிச்சைக்காரர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரிடமும், ரூ.36ஆயிரம் பணமும் இருந்தது.

இந்த நிலையில் தற்போது மேன்ஷனில் 13 பேர் தங்கியிருந்த விதம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.

வெடிபொருள்கள் பறிமுதல்; முன்னாள் இராணுவ வீரர் கைது!

முன்னாள் இராணுவ வீரர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உத்திரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தின் லால்கஞ்ச் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் முன்னாள் இராணுவ வீரர் ஆவார். ஷ்யாம் சுந்தர் பட்டேல் என்ற அந்த இராணுவ வீரரும் ராம்ஜி பட்டேல் என்பவரும் மத்தியப் பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களிடமிருந்து சுமார் 4,000 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 4,000 எலெக்ட்ரானிக் டெடனேட்டர் ஆகியவை மிர்சாபூர் மாவட்டத்தில கைப்பற்றப்பட்டன. இந்தப் பொருள்கள் 9 சாக்குப் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் தகவல்கள் கூறுகின்றன..

ஈரானில் அமெரிக்க உளவுத் துறையினர் கைது

ஈராக் எல்லையில் அமெரிக்க உளவுத் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈராக் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட மூன்று அமெரிக்க குடிமகன்களின் நோக்கம் உளவு வேலைப்பார்ப்பதுதான் என்று ஈரான் அதிகாரிகள் கூறினர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஷைன் போவர், ஸாரா சுர்த், ஜோஷ் பட்டல் ஆகியோர் ஈரான் போலீசிடம் சிக்கினர். கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று விட்டுத்தான் இம்மூவரும் ஈரான் வந்துள்ளனர்.

உளவு பார்ப்பதற்காகத்தான் இவர்கள் ஈரான் வந்துள்ளதாக ஈரானின் அரசு தரப்பு வழக்கறிஞர் அப்பாஸ் ஜஃபரி தவுலத்தாபாதி கூறினார். விசாரணை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், "இவர்கள் நிரபராதிகள். தெரியாமல் ஈரான் எல்லையில் வந்து மாட்டியுள்ளனர். எனவே அவர்களே விடுவிக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.

சாமியாரை கைது செய்ய வேண்டும்

தேனாம்பேட்டையை சேர்ந்த ஹேமலதா என்பவர், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கொடுத்த மனுவில், ‘எனக்கு வேலை தருவதாக கூறி, காபியில் மயக்க மருந்து கொடுத்து நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் சாமியார் ஈஸ்வர் ஸ்ரீகுமார் பலாத்காரம் செய்து விட்டார்’ என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரிக்க சாமியாரை போலீசார் அழைத்தனர்.

ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார்.கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வந்த ஹேமலதா, நிருபர்களிடம் கூறியதாவது: கோர்ட் உத்தரவுபடி 18, 19ம் தேதிகளில் எனக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 10 நாட்களுக்கு பிறகுதான் முடிவு தெரியும். உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, படிப்படியாக விசாரணை நடத்தி வருவதாக கூறுகிறார். போலீசார் என்னிடம் உடனே விசாரணை நடத்தினர்.

ஆனால் சாமியாரிடம் இன்னும் விசாரணை நடத்தவில்லை. இந்த வழக்கை திசை திருப்ப சாமியார் முயற்சிக்கிறார். அவரை பிடித்து விரைவில் விசாரணை நடத்தி, கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு ஹேமலதா கூறினார்.

ஈரானில் பின்லேடன் மனைவி, குழந்தைகள் கைது

ஈரானில் பதுங்கியிருந்த சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லேடனின் மனைவி மற்றும் குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்லேடனுக்கு பல மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.அவர்களில் ஒரு மனைவியும், சில குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் முன்பு ஆப்கானிஸ்தானில் பின்லேடனுடன் வசித்து வந்தனர்.நியூயார்க் இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கியதும் அவர்கள் அங்கு இருந்து தப்பி, ஈரான் நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர்.இந்நிலையில் ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் தெஹ்ரானில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை ஈரான் அரசு கைது செய்து, ரகசிய இடத்தில் வீட்டுக்காவலில் வைத்து இருப்பதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

மதானி மனைவி சோஃபியா கைது

2005ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பஸ் எரிப்பு சம்பவம் தொடர்பாக பிடிபி தலைவர் அப்துல் நசீர் மதானியின் மனைவி சோஃபியா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வழக்கு தொடர்பாக சோஃபியா, கொச்சி கோர்ட்டில் பெயில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று கேரள ஐகோர்ட்டில் நடைபெற்றது. இதில் சோஃபியாவின் பெயில் மனுவை தள்ளுபடி செய்த கேரள ஐகோர்ட், அவரை கைது செய்யவும் உத்தரவிட்டது.

சீமான் சென்னை திரும்பினார்

மரணம் அடைந்த விடுதலைப்புலிகளின் நினைவாக நேற்று மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. கனடாவில் நேற்று மாவீரர் தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு பேசுவதற்காக டைரக்டர் சீமான் கனடா சென்றிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு முந்தைய நாளில் இளைஞர் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் சட்ட விரோதமாக பேசியதாக கூறி கனடா போலீசார் சீமானை கைது செய்தனர். அவரை குடியுரிமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள். இன்று அதிகாலை டைரக்டர் சீமான் விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் பிரபாகரன் படத்துடன் திரண்டனர். அவர்கள் ஈழத்துக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் போட்டனர்.


பிரபாகரனுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் டைரக்டர் சீமான் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. அதில் நான் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வருகிறேன். இந்த ஆண்டு கனடாவில் மாவீரர் தின நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்தேன். கனடா நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நான் தங்கி இருந்தபோது அந்த நாட்டு போலீசார் எனது அறைக்கு வந்தனர். என்னை கைது செய்வதாக தெரிவித்தனர். மேலும் மாவீரர் தின கூட்டத்தில் நான் பேசக்கூடாது என்றும் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் என்றும் கூறி என்னை விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.


விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக கூறிக் கொள்பவர்கள் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுப்பது ஏன்? இலங்கையில் இன்னும் தமிழர்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முள்வேலி முகாமில் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களை உடனடியாக முகாம்களில் இருந்து விடுவித்து சொந்த ஊர்களில் குடியமர்த்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர் கூறினார்.

முஷாரப்பை கைது செய்ய தயார்

பலூசிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டால், முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்ய தயாராக உள்ளோம் என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அதிபராக முஷாரப் இருந்த போது, பலூசிஸ்தான் மாகாணத்திற்கு அதிக அதிகாரம் கோரி, அக்பர் பக்டி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இதற்கு சில பிரிவினைவாதிகளும் ஆதரவளித்தனர். இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக, 2006ம் ஆண்டு முஷாரப் உத்தரவின் பேரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் அக்பர் பக்டி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் தலைவர் அக்பர் பக்டியை கொலை செய்ய உத்தரவிட்ட முஷாரப் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரி, பக்டியின் பேரன் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முஷாரப்புக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.



இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் குறிப்பிடுகையில்,

"பக்டி குடும்பத்தினரின் புகாரை பரிசீலித்து வருகிறோம். இருப்பினும் பலூசிஸ்தான் மாகாண அரசு முறைப்படி முஷாரப்பை கைது செய்யக்கோரினால், அவரை கைது செய்யத் தயாராக உள்ளோம்' என்றார்.

காவலாளி கைது

நில‌ப்‌பிர‌ச்சனை தொட‌ர்பாக ‌சிவபாலனை தா‌க்‌கிய வழ‌க்‌கி‌ல் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா‌வி‌ன் ப‌ண்ணை ‌வீ‌ட்டு காவலா‌ளியை ‌சி.‌பி.‌சி.ஐ.டி காவ‌ல்துறை‌‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர். முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கும், கல்லாங்குத்து தோட்டம் சிவபாலனுக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோப‌ர் 21ஆம் தேதி நள்ளிரவு காஞ்சிகோயில் பண்ணை வீட்டில் இருந்த தன்னையும் மனைவி உமா மகேஸ்வரியையும் சிவபாலன் அரிவாளால் வெட்டியதாக ராஜாவும், தன்னை தாக்கியதாக சிவபாலனும் புகார் தெரிவித்தனர். இ‌ந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட பிறகு, ராஜாவின் உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் தலைமறைவாக இருந்த, பண்ணை வீட்டு காவலாளி காளியப்பனை (55) சி.பி.சி.ஐ.டி காவ‌ல்துறை‌யின‌ர் நே‌ற்று கைது செய்தனர். ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காளியப்பனை, 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பிரபாவதி உத்தரவிட்டார். இதை‌த் தொட‌ர்‌ந்து அவர் கோவை சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர். தலைமறைவாக உள்ள ராஜாவும், உமாமகேஸ்வரியும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, அவ‌ர்களது கடவு‌சீ‌ட்டை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜாவின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்யுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி சாம்பசிவம் தெரிவித்தார்.