Showing posts with label ஜமாபந்தி. Show all posts
Showing posts with label ஜமாபந்தி. Show all posts

தாலுகாக்களில் ஜமாபந்தி: 13ம்தேதி தொடக்கம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவி லும் வரும் 13ம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்கவுள்ளதாக கலெக்டர் சண்முகம் தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் 1419ம் பசலிக்கான ஜமாபந்தி வரும் 13ம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ம்தேதி முடிய விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் நடைபெறவுள்ளது.வரும் 13ம்தேதி தொடங்கி 27ம்தேதி வரை கலெக்டர் தலைமையில் திருவையாறு தாலுகாவிலும், வரும் 25ம்தேதி வரை டி.ஆர்.ஓ., தலைமையில் தஞ்சை தாலுகாவிலும் நடக்கிறது. கும்பகோணம் தாலுகாவில் ஜூன் 1ம்தேதி வரை தனித்துணை கலெக்டர் தலைமையிலும், வரும் 31ம் தேதி வரை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் பட்டுக்கோட்டையிலும் நடக்கிறது. 27ம்தேதி வரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் திருவிடைமருதூர் தாலுகாவிலும், வரும் 1ம்தேதி தஞ்சை ஆர்.டி.ஓ., தலைமையில் ஒரத்தநாட்டிலும், கும்பகோணம் ஆர்.டி.ஓ., தலைமையில் பாபநாசம் தாலுகாவிலும், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ தலைமையில் பேராவூரணி தாலுகாவிலும் நடக்கிறது.ஜமாபந்தி நடக்கும் நாட்களில் நில உடமையாளர்கள் பட்டா மாறுதல், பட்டா நிலங்கள் குறித்த எல்லை பிரச்னை, பொதுமக்கள் வீட்டு மனை, சாகுபடி நில ஒப்படைப்பு, முதியோர் உதவித்தொகை பெறுதல் ஆகிய கோரிக்கை குறித்து சம்பந்தபட்ட அலுவலரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.