பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவி முதலிடம் பிடித்து அபாரம்


பத்து லட்சம் மாணவர்கள் பங்கேற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், பெரும்பான்மையாக எட்டு லட்சம் மாணவர்கள் பங்கேற்ற எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 82.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு நெல்லை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜாஸ்மின், 495 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து அபார சாதனை படைத்தார்.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. பள்ளிகள் மூலம் நான்கு லட்சத்து 12 ஆயிரத்து 761 மாணவர்கள், நான்கு லட்சத்து 31 ஆயிரத்து 519 மாணவியர் என, எட்டு லட்சத்து 44 ஆயிரத்து 280 பேர், மெட்ரிக் தேர்வை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 145 பேர், ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,674 பேர், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை 1,548 பேர் எழுதினர். இதன் முடிவுகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி நேற்று காலை வெளியிட்டார். 82.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட 0.9 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. தேர்வெழுதிய மாணவர்களில் மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 764 பேரும், மாணவியரில் மூன்று லட்சத்து 68 ஆயிரத்து 940 பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 79.4 சதவீத தேர்ச்சியும், மாணவியர் 85.5. சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.


வழக்கம்போல, மாணவியர் 6 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனைபடைத்துள்ளனர். ஓ.எஸ்.எல்.சி., தேர்வில் 88.2 சதவீதம் பேரும், மெட்ரிக் தேர்வில் 94.7 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சத்தியமங்கலம், பண்ணாரியம்மன் வித்யாலயா மெட்ரிக்., பள்ளி மாணவி பவித்ரா 495 மார்க் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இந்த தேர்விலும் மாணவர்களை விட, மாணவியர் 3 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.2 சதவீதம் பேரும், மாணவியர் 96.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலோ இந்தியன் தேர்வில் 96.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மாநில பாடத்திட்டத்தில் நெல்லை மாவட்ட மாணவி முதலிடமும், நீலகிரி, கரூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இரண்டாம் இடமும், மூன்றாம் இடத்தை பத்து மாணவர்களும் பிடித்துள்ளனர். 15 மாணவர்களில் நான்கு மாணவர்கள் தவிர, மற்ற 11 மாணவர்களும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மாநில ரேங்க்கில், புதுச்சேரிக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் தலா ஒரு இடத்தை பிடித்துள்ளன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த 15 மாணவர்களில் ஜாஸ்மின் தவிர, மற்ற 14 மாணவர்களும், அரசு நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சாதிக்க பிரபலமான பள்ளி தேவையில்லை: நிரூபித்தார் மாநகராட்சி பள்ளி மாணவி: பிரபலமான பள்ளியில் படித்தால் தான் சாதிக்க முடியும்; அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை கருத்தை, நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்த்தெறிந்து, மாபெரும் சாதனை படைத்துள்ளார். தனியார் பள்ளிகள் மீது, பொதுமக்களுக்கு மோகம் அதிகமாக இருக்கிறது. அந்த பள்ளிகளில் மட்டுமே, குறிப்பாக மிகப்பெரிய பள்ளிகளில் மட்டுமே, தரமான கல்வி வழங்கப்படுகிறது. அந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால் தான், எதிர்காலம் சிறப்பாக இருக்குமென்ற கருத்து, பொது மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது. இதனால், அவரவர் வசதிகேற்ப தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர். பெரும்பாலான பள்ளிகள் தரமான கல்வியை வழங்கினாலும், மக்களிடமுள்ள மோகத்தை பயன்படுத்தி, காசு பார்க்கும் பள்ளிகள் அதிகம் இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.


நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், மாநில அளவிலான ரேங்க்குகளையும், பாட வாரியான ரேங்க்குகளையும், அதிகம் பெற்றவர்கள் கிராமப்புற மாணவர்கள் தான். நகர்ப்புறங்களிலுள்ள மாணவர்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை. பெரிய பள்ளி என்று படையெடுப்பவர்களின் கண்களை திறக்கும் வகையில், சாதிப்பதற்கு பள்ளி முக்கியமல்ல; உழைப்பு தான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார், நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், இவர் 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.


பெரிய தனியார் பள்ளிகளிலுள்ள கட்டமைப்பு வசதிகள், உயர்ந்த கல்வித்தரம் கொண்ட ஆசிரியர்கள், பல்வேறு வகையான கற்பிப்பு முறைகள் ஆகியவை மாநகராட்சி பள்ளிகளில் இருக்குமென கூற முடியாது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், ஓரளவுக்கு தான் வசதிகள் இருக்கும். முக்கியமாக, படிப்பில் சுமாரான மாணவர்கள் தான், அரசு பள்ளிகளில் சேர்கின்றனர். இந்த மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகள் அட்மிஷன் கொடுப்பதில்லை. மாறாக, மிக நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அட்மிஷன் கொடுத்து, அவர்கள் சாதனையை, தங்கள் சாதனையாக பள்ளிகள் பறைசாற்றி கொள்கின்றன. இதற்கு மத்தியில், சாதாரண பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும், அதற்கு ஈடுபாடும், முழுமையான உழைப்பும் மட்டுமே தேவை என்பதை எடுத்து காட்டியுள்ளார் ஜாஸ்மின்.


மிகவும் ஏழ்மை நிலையில் அபார சாதனை: தந்தை பெருமிதம்: மிகவும் ஏழ்மை நிலையில், மாநில அளவில் சாதனை படைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாநில முதல் ரேங்க் பெற்ற மாணவியின் தந்தை தோவூது கூறினார். சாதனை மாணவியின் தந்தை தோவூது ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தனது மகளின் சாதனை குறித்து தோவூது கூறியதாவது: நான் மோட்டார் சைக்கிளில் ஊர், ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். விற்பனையை பொறுத்துதான் லாபம் ஏதாவது கிடைக்கும். குறைந்தது மாதத்திற்கு ஏழு அல்லது எட்டாயிரம் ரூபாய் கிடைக்கும். இந்த வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்தி வருகிறேன். எனது மகள் மாநில அளவில் முதலாவது ரேங்க் பெற்றார் என்ற தகவல் கிடைத்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.


ஒரு தந்தையாக அவளது கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து வந்தேன். ஐந்தாம் வகுப்பு வரை ஜாஸ்மின் வேறு பள்ளியில் படித்தார். 6ம் வகுப்பு முதல் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். ஆரம்பம் முதலே பள்ளியில் நன்கு படித்து முதல் ரேங்க் பெறுவார். தொடர்ந்து நன்கு படித்து, தற்போது மாநில அளவில் முதலாவது ரேங்க்கை பெற்றுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் நடராஜன், ஆசிரிய, ஆசிரியைகள் மிகவும் உறுதுணையாகவும், ஊக்கமும் அளித்தனர். எனவே, தொடர்ந்து இதே பள்ளியிலேயே படிக்க வைப்பேன். வேறு எந்த பள்ளியிலும் சேர்க்க மாட்டேன். எனது மகளின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், அனைத்து ஊக்கத்தையும் அளிப்பேன். இவ்வாறு சாதனை மாணவியின் தந்தை கூறினார்.

வாகைச்சூடிய சகோதரி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி எம்.பி.எல்., அரசுப்பள்ளியை சேர்ந்தவர்.இரவு ஒரு மணி வரை படித்தேன் மாணவி ஜாஸ்மின் பேட்டி : முதலிடம் பெற்ற ஜவுளி வியாபாரி மகள் பேட்டி: தான் இரவு ஒரு மணி வரை கண்விழித்து படித்தேன் என மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மின் நிருபர்களிடம் கூறினார். டவுண் அருகே உள்ள கல்லணையில் படித்த இந்த மாணவியின் தந்தை சேக்தாவூது. இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தாயார் நூர்ஜகான். ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஜாஸ்மின் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் இரவு 1 மணி வரை படித்தேன் . காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்கத்துவங்குவேன். டியூஷன் படித்தது கிடையாது. படித்ததை எழுதிபார்த்தது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எனது வெற்றிக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உறு துணையாக இருந்தனர். நான் 498 மார்க்குள் வரும் என எதிர்பார்த்தேன். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படிப்பதே எனது இலட்சியம். இவ்வாறு ஜாஸ்மின் கூறினார்
ADIRAIDAILYNEWS

தனது மேல்படிப்பு தொடர ............................

பிளஸ் 2வில் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த காயல்பட்டணம் பள்ளி ஏழை மாணவி பாத்திமுத்து, தனது மேல்படிப்பு தொடர யாராவது பணஉதவி செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்செந்தூர்அடுத்த காயல்பட்டணம் பரிமார் தெருவைச் சேர்ந்தவர் பாத்திமுத்து.
அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர், பிளஸ் 2வில் உளவியல் பாடத்தில் 200க்கு 172 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவரது தந்தை அபுமுகமது, சென்னையில் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பால் அமீனா, ஆறு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
பாடவாரியாகஇவர் பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் -123,
ஆங்கிலம் -92,
மனை இயல் -125,
உளவியல் -172,
எழுத்து மற்றும் செய்முறை தேர்வு - 366. மொத்தம் - 878/1200.
முகவரி: பாத்திமுத்து, பா/ கா . நாகூர் முத்து , 49 பள்ளிமார்தெரு, காயல்பட்டணம், தூத்துக்குடி மாவட்டம் ,
மொபைல் எண்: 9698386885

திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு

காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.

கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.


மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார்.

இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக தங்கபாலு, இளங்கோவன், சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு.

இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

சீர்காழி விவேகானந்தா பள்ளி 99 சதம் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சீர்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 171 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 169 பேர் தேர்ச்சி பெற்றனர். சீர்காழி தாலுகா அளவில் இப்பள்ளி மாணவிகள் 3 பேர் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். இதில் மாணவி ஆர்த்திபிரியங்கா 1165 மதிப்பெண் பெற்று நாகை மாவட்ட அளவில் 3ம் இடம், தாலுகா அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கல்பனா 1164 பெற்று தாலுகா அளவில் 2ம் இடம், சூரியலட்சுமி 1158 மதிப்பெண் பெற்று தாலுகா அளவில் 3ம் இடம் பெற்றுள்ளனர்.1100 மதிப்பெண்ணுக்கு மேல் 22 மாணவர்கள் பெற்றுள்ளனர். 1000 மதிப்பெண்ணுக்கு மேல் 71 மாணவர்கள் பெற்றுள்ளனர். முதல் வகுப்பில் 169 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் மணிவண்ணன் கணிதத்தில் 200 மதிப்பெண் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும் தாளாளர்கள் ராதாகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர்கள் ஜோஸ்வா பிரபாகரசிங், சரோஜா, துணை முதல்வர் ஆபிரஹாம் யோனோக், மேலாளர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

நாகையில் 9 பள்ளிகள் 100 சதவீதம்

நாகை மாவட்டத்தில் ஒரு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, 8 மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி என பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
நாகை மாவட்டத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வில் மயிலாடுதுறை கல்வி மாவட்டம் தரங்கம்பாடி (அரசு உதவி பெறும்) தூய தெரசாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நீடூர் நசுருல் முஸ்லிம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, வடகரை ஹாஜா சாரா அம்மாள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, கொள்ளிடம் சரஸ்வதி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பொறையார் சர்மிளா காடஸ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பழைய கூடலூர் ஜி.எஸ். கல்யாணசுந்தரம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
நாகை கல்வி மாவட்டத்தில் வேதாரண்யம் புனித அந்தோணியார் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, தோப்புத்துறை காயிதே மில்லத் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, நாகூர் கிரசன்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 9 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

பட்டுக்கோட்டை மாணவர் பாரதிராஜா மாவட்டத்தில் முதலிடம்

தியானத்தால் லட்சியத்தை அடைந்தேன் என்று பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவர் பாரதிராஜா கூறினார்.பட்டுக்கோட்டை பள்ளிகொண்டான் லாரால் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் பாரதிராஜா தமிழில் 193, ஆங்கிலத்தில் 188, இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் தலா 199, உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் தலா 200 என்று மொத்தமாக ஆயிரத்து 179 மதிப்பெண் பெற்று தஞ்சை வருவாய் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.\

இந்த மாணவர் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் மாநில அளவில் 2ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். இவர் பட்டுக்கோட்டை ஆர்.வி நகரில் வசிக்கிறார்.இவரது தந்தை பழனிவேலு வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். தாய் சாரதா காதர்மொய்தீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.தனது சாதனை குறித்து மாணவர் பாரதிராஜா கூறியதாவது:


10ம் வகுப்பில் படைத்த சாதனையை விட பிளஸ் 2 தேர்வில் கூடுதல் சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக பெற்றோர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றி வந்தேன். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்குவது இல்லை. தினமும் தியானம் செய்து வந்தேன். எனது லட்சியத்தை அடைய தியானம் முழுமையாக உதவியது. எதிர்காலத்தில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


மாணவி பவித்ரா மாவட்டத்தில் 2ம் இடம்: பட்டுக்கோட்டை புனித இசபெல்லா பள்ளியில் படித்தவர் பவித்ரா. இவர் பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடத்தில் 191, இயற்பியலில் 198, வேதியியலில் 200, உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் 199 என்று மொத்தம் ஆயிரத்து 178 மதிப்பெண் பெற்று தஞ்சை வருவாய் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.


இவரது தாய் சித்ரா பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இவரது தந்தை வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார். இதனால் பவித்ரா தனது சித்தி விமலாவுடன் வசித்து வருகிறார். பவித்ராவின் சாதனையை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இமானுவேல்ராஜ், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டினார்.


சாதனை குறித்து மாணவி பவித்ரா கூறியதாவது:நான் சிறு வயது முதல் நன்றாக படிப்பேன். எனது தாயின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக இரவு, பகல் என்று பார்க்காமல் படித்து வந்ததால் லட்சியத்தை அடைய முடிந்தது. தாய் இறந்த பின்னர் தாத்தா, பாட்டி, சித்தி ஆகியோர் எனது படிப்புக்கு முழு ஊக்கம் கொடுத்தனர். தலைமை ஆசிரியர் முதல், வகுப்பு ஆசிரியர் வரை கொடுத்த ஊக்கம் நான் மாவட்ட அளவில் இடம் பெற உதவியது.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியாரை ரோல்மாடலாக கொண்டு ஏழைகளுக்கு சேவை செய்ய உள்ளேன். இதற்காக எதிர்காலத்தில் டாக்டர் படிப்பை தேர்வு செய்து படிக்க இருக்கிறேன். இவ்வாறு மாணவி பவித்ரா கூறினார்.


மாணவி ஜனனி மாவட்டத்தில் 3ம் இடம்: பட்டுக்கோட்டை இசபெல்லா மேல்நிலைப் பள்ளி மாணவி ஜனனி தமிழில் 183, ஆங்கிலத்தில் 192, இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 200, கம்ப்யூட்டர் அறிவியலில் 197 என்று மொத்தம் ஆயிரத்து 172 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.இவரது தந்தை மதுக்கூர் இந்தியன் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார்.


தாய் சொர்ணலதா குடும்ப பெண்மணி. ஜனனி 6ம் வகுப்பு முதல் எல்லா தேர்வுகளிலும் முதல் இடத்தை பிடித்துள்ளார். நான் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் டி.வி, போன்ற பொழுது போக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்த்தனர். இதனால் நான் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடிந்தது. எனது பெற்றோரின் தியாகம் மாவட்ட அளவில் இடம் பெற முடிந்தது.நான் எதிர்காலத்தில் இன்ஜினியர் ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.சாதனை படைத்த மாணவி ஜனனியை தலைமை ஆசிரியர் ஜெயராணி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இமானுவேல்ராஜ், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டினார்.


மாவட்ட அளவில் மாணவிராகிலாபர்வீன் 3ம் இடம்தஞ்சை ஆக்ஸீலியம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ராகிலாபர்வீன் தமிழில் 191, ஆங்கிலம் 189, இயற்பியல் 195, வேதியியல் 199, கம்ப்யூட்டர் அறிவியல் 198, கணிதம் 200 என்று ஆயிரத்து 172 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றார். இவரது தந்தை முகமது இஸ்மாயில், தாய் பரிதாபேகம்.


நான் பிளஸ் 1 தேர்வில் மாவட்ட அளவில் இடம் பிடித்துள்ளேன். அதே போல் பிளஸ் 2 தேர்வில் இடம் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்ததால் சாதனை படைக்க முடிந்தது. எதிர்காலத்தில் பொறியாளர் ஆவதே எனது லட்சியம் என மாணவி ராகிலாபர்வீன் கூறினார்.

பேராவூரணி அரசு மகளிர் பள்ளி சாதனை

நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் தஞ்சை மாவட்ட அரசுப் பள்ளிகளில் பேராவூரணி மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி புவனேஸ்வரி 1,153 மதிப்பெண் பெற்று அரசு பள்ளிகளில் தஞ்சை மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி பவித்ரா 1,057 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும், மாணவர் சூர்யா 1,052 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்வெழுதிய 465 பேரில் 457 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் சந்திரசேகரன், பெற் றோர் ஆசிரியர் கழக கோவிந்தராசு மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர். ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி: பேராவூரணி ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி கவிநயா 1,148 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் ஜெயசீலன் 1,139 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் அருண்குமார் 1,137 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.


ஜெயசீலன், ராதிகா, அருண் குமார் ஆகியோர் கணிதத்தில் 200 மதிப் பெண், கவிநயா, ஜெயசீலன் ஆகியோர் வேதியியலில் 200 மதிப்பெண், மாணவி நிவேதா தமிழில் 191 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளித் தாளாளர் ஸ்ரீதர், அறங்காவலர்கள் கணபதி, ராமு, பிரியதர்ஷினி மற்றும் ஆசிரியர் கள் பாராட்டினர். திருச் சிற்றம்பலம் கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.


வெற்றிப் பெற்ற மாணவர்களை தாளாளர் வேதநாயகி மற்றும் இயக்குனர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர். பேராவூரணி மூவேந்தர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளது. வெற்றிப் பெற்றவர்களை பள்ளித் தாளாளர் வக்கீல் சாமியப்பன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாராட்டினர். பேராவூரணி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சதீஷ் 1,017 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் சந்தோஷ்முருகன் 1,007 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் கண்ணதாசன் 987 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.


பெருமகளூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவி விஜி 854 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி சித்ரா 823 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் பிரசன்னா 796 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் சண்முகம் பாராட்டி பரிசளித்தார்.தஞ்சை மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் தஞ்சை முதன்மைக் கல்வி அலுவலர் குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதையடுத்து முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளை முதன்மைக் கல்வி அலுவலர் குமார் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்.

வெற்றி பெற்றோரை கலெக்டர் சண்முகம் பாராட்டினார். தேனா வங்கி பரிசுதஞ்சை தேனா வங்கி சார்பில் கிளை மேலாளர் தமிழ்மணி மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் முதலிடம் பெற்ற பாரதிராஜாவுக்கு ரூபாய் 5 ஆயிரம், 2ம் இடம் பெற்ற பவித்ராவுக்கு ரூபாய் 3 ஆயிரம், 3ம் இடம் பெற்ற ஜனனி மற்றும் ராகிலாபிரவீன் ஆகியோருக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் பரிசு வழங்கினர்.


இந்த ரொக்கப் பரிசை கலெக்டர் சண்முகம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இதையடுத்து அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றவருக்கு 3 ஆயிரம், 2ம் இடம் பெற்றவருக்கு ரூபாய் 2 ஆயிரம், 3ம் இடம் பெற்றவருக்கு ரூபாய் ஆயிரம் வங்கி சார்பில் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோரும் திரளாக கலந்து கொண்டனர்.

தினமும் யோகா செய்தால் பாடம் மனதில் பதியும் சொல்கிறார் வணிகவியலில் முதலிடம் பெற்ற மாணவி

'பள்ளியில் தினமும் அரைமணி நேரம் யோகாவிற்கு பிறகு தான், வகுப்புகள் தொடங்கும். அந்த 'மெடிடேசன்' தான், படித்த பாடங்களை நினைவில் வைத்து கொள்ள உதவியாக இருந்தது' என, மாநில அளவில் வணிகவியலில் முதலிடம் பெற்ற மாணவி ஏக்ன பிரியா கூறினார்.சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏக்ன பிரியா. இவர், பிளஸ் 2 தேர்வில் 1,183 மதிப்பெண்கள் பெற்றார். வணிகவியல் பாடப்பிரிவில் 200 மதிப்பெண்கள் பெற்ற அவர், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.அவரது மதிப்பெண் விவரம்:பிரெஞ்சு 192, ஆங்கிலம் 192, பொருளியல் 199, வணிகவியல் 200, கணக்கு பதிவியல் 200, வணிக கணிதம் 200.இதுகுறித்து அவர் கூறியதாவது:பள்ளிக்கு காலையில் சென்றவுடன், தினமும் அரைமணி நேரம் யோகா பயிற்சி கொடுக்கப்படும்.படித்த பாடங்களை மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ள, அப்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருந்தது.

புரிந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்மாவட்டத்தில் 2ம் இடம் பிடித்த மாணவி பேட்டி

''பாடங்களை புரிந்து கொண்டு படித்தாலே அதிக மதிப்பெண்கள் பெறலாம்'' என்றுபிளஸ் 2 தேர்வில் சென்னை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிபத்மினி தெரிவித்தார்.வேப்பேரி, அகர்வால் வித்யாலயா மேல் நிலைப் பள்ளிமாணவி பத்மினி. பிளஸ் 2 தேர்வில் இவர் ஆயிரத்து 177 மதிப்பெண்கள் பெற்றுமாவட்ட அளவில் இரண்டாவது இடம் பிடித்தார்.இவர் தமிழ்-187, ஆங்கிலம்-192, வணிகவியல்-200, கணக்கு பதிவியல்- 200, கணிதம்- 200 மற்றும்பொருளாதாரத்தில்- 198 என மதிப் பெண்கள் பெற்றுள்ளார்.இது குறித்து பத்மினிகூறுகையில்,'டியூஷன் வைத்துக் கொள்ளாமல் சுயமாக படித்தாலே அதிகமதிப்பெண்கள் பெறலாம். தினமும் அதிகாலை 4 மணி முதல் படிப்பேன். தேர்வுநேரத் தில் நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் படிப்பேன்.பிளஸ் 2 வந்தவுடன் 'டிவி' பார்ப்பதை நிறுத்தி விட்டேன். எனது படிப்பிற்கு ஆசிரியர்களும், பெற்றோரும்பெரும் உதவி செய்தனர். எனது பெற்றோர் அதிகம் படிக்காதவர்கள். எனவே, நான்படிப்பில் சிறந்து விளங்கவேண்டும் என தனி அக்கறை எடுத்துக் கொண்டனர். பாடங் களை புரிந்து கொண்டு படித்தாலே அதிக மதிப் பெண்கள்பெறலாம்,'என்றார்.
மாணவி பத்மினியை பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி மற்றும் ஆசிரியர்கள்வாழ்த்தினர்.

மைக்கேல் ஹசி அதிரடி: பைனலில் ஆஸி., *கடைசி ஓவரில் கோட்டைவிட்டது பாக்.,


"டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதியில் கடைசி ஓவரில் மைக்கேல் ஹசி "சிக்சர் மழை பொழிய, ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வெற்றி வாய்ப்பை வீணாக பறிகொடுத்த "நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி பரிதாபமாக வெளியேறியது.
வெஸ்ட் இண்டீசில் "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று செயின்ட்லூசியாவில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் "நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
துவக்கம் தாமதம்:
மழை காரணமாக மைதானத்தின் பெரும்பாலான பகுதி ஈரமாக இருந்ததால், போட்டி துவங்குவதில் அரைமணி நேரம் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், பீல்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
சூப்பர் ஜோடி:
முதல் ஓவரை நானஸ் "மெய்டனாக வீசினார். இதற்கு பின் கம்ரான் அக்மல், சல்மான் பட் இணைந்து பாகிஸ்தானுக்கு அசத்தல் துவக்கம் தந்தனர். இருவரும் பவுண்டரி மழை பொழிய, ஆஸ்திரேலிய பவுலர்களை பார்க்கவே பாவமாக இருந்தது. டெய்ட் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. ஸ்மித் சுழலில் கம்ரான் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். வாட்சன் வீசிய 9வது ஓவரில் சிக்சர் மற்றும் 2 பவுண்டரி அடித்த கம்ரான், 32 பந்துகளில் அரைசதம் எட்டினார். இது சர்வதேச "டுவென்டி-20 போட்டிகளில் இவரது 5வது அரைசதம். பின் ஜான்சன் பந்தை விரட்டிய கம்ரான்(50), வார்னரின் சூப்பர் "கேட்ச்சில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு கம்ரான்-சல்மான் 82 ரன்கள் சேர்த்தனர். சிறிது நேரத்தில் ஸ்மித் சுழலில் சல்மான்(32) சிக்கினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அப்ரிதி(8) ஏமாற்றினார்.
உமர் அரைசதம்:
பின் அண்ணன் கம்ரான் வழியில், அவரது தம்பி உமர் அக்மல் கடைசி கட்டத்தில் கலக்கினார். ஜான்சன் வீசிய 18வது ஓவரில் 3 சிக்சர்கள் விளாசிய இவர், அரைசதம் அடித்தார். லத்திப் 13, ரசாக் 12 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. <உமர்(56) அவுட்டாகாமல் இருந்தார். ஆமர் மிரட்டல்: சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரிலேயே ஆட்டம் கண்டது. முகமது ஆமர் வேகத்தில் வார்னர் "டக் அவுட்டானார். சிறிது நேரம் அதிரடி காட்டிய வாட்சனும்(16), ஆமர் பந்தில் வீழ்ந்தார். இரண்டு ஐ.பி.எல்., நட்சத்திரங்களும் விரைவில் வெளியேற, சிக்கல் ஏற்பட்டது. ஹாடின்(25) அதிக நேரம் நீடிக்கவில்லை. அப்ரிதி வலையில் கேப்டன் மைக்கேல் கிளார்க்(17) வெளியேற, 4 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
பின் கேமரான் ஒயிட், டேவிட் ஹசி இணைந்து போராடினர். ஹபீஸ் ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். தொடர்ந்து சுழலில் மிரட்டிய அப்துர் ரஹ்மான், டேவிட் ஹசியை(13) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார்.
"திரில் வெற்றி:
கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. படுமோசமாக பந்துவீசிய சயீத் அஜ்மல், பாகிஸ்தானின் வில்லனாக மாறினார். முதல் பந்தில் ஜான்சன் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் மைக்கேல் ஹசி "சிக்சர் அடித்தார். அடுத்த பந்தும் "சிக்சருக்கு பறக்க "டென்ஷன் எகிறியது. நான்காவது பந்தில் "பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் இன்னொரு இமாலய சிக்சர் அடித்த மைக்கேல் ஹசி அணிக்கு "திரில் வெற்றி தேடி தந்தார். ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து, "திரில் வெற்றி பெற்றது.
முதல் முறை:
இதன் மூலம் "டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முதல் முறையாக முன்னேறியது. 24 பந்துகளில் 60 ரன்கள்(3 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசிய மைக்கேல் ஹசி, ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
நாளை நடக்கும் பைனலில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஸ்கோர் போர்டு
பாகிஸ்தான்
கம்ரான்(கே)வார்னர்(ப)ஜான்சன் 50(34)
சல்மான்(கே)வார்னர்(ப)ஸ்மித் 32(30)
உமர் அக்மல்-அவுட் இல்லை- 56(35)
அப்ரிதி(கே)ஹாடின்(ப)டேவிட் ஹசி 8(9)
லத்திப்(கே)வார்னர்(ப)நானஸ் 13(6)
ரசாக்-ரன் அவுட்-(ஹாடின்/டெய்ட்) 12(7)
மிஸ்பா-ரன் அவுட்-(டெய்ட்) 0(0)
உதிரிகள் 20
மொத்தம்(20 ஓவரில் 6 விக்.,) 191
விக்கெட் வீழ்ச்சி: 1-82(கம்ரான்), 2-89(சல்மான்), 3-114(அப்ரிதி), 4-145(லத்திப்), 5-189(ரசாக்), 6-191(மிஸ்பா).
பந்துவீச்சு: நானஸ் 4-1-32-1, டெய்ட் 4-0-25-0, ஜான்சன் 4-0-37-1, வாட்சன் 2-0-26-0, ஸ்மித் 2-0-23-1, டேவிட் ஹசி 3-0-24-1, மைக்கேல் கிளார்க் 1-0-13-0.
ஆஸ்திரேலியா
வார்னர்(கே)உமர்(ப) ஆமர் 0(2)
வாட்சன்(கே)ரஹ்மான்(ப)ஆமர் 16(9)
ஹாடின்(ஸ்டம்)கம்ரான்(ப)ரஹ்மான் 25(20)
கிளார்க்(ஸ்டம்)கம்ரான்(ப)அப்ரிதி 17(19)
டேவிட் ஹசி(கே)+(ப)ரஹ்மான் 13(9)
ஒயிட்(கே)ஹபீஸ்(ப)ஆமெர் 43(31)
மைக்கேல் ஹசி-அவுட் இல்லை- 60(24)
ஸ்மித்(ஸ்டம்)கம்ரான்(ப)அஜ்மல் 5(4)
ஜான்சன்-அவுட் இல்லை- 5(3)
உதிரிகள் 13
மொத்தம் (19.5 ஓவரில் 7 விக்.,) 197
விக்கெட் வீழ்ச்சி: 1-1(வார்னர்), 2-26(வாட்சன்), 3-58(ஹாடின்), 4-62(கிளார்க்), 5-105(டேவிட் ஹசி), 6-139(ஒயிட்), 7-144(ஸ்மித்).
பந்துவீச்சு: ஆமர் 4-0-35-3, ரசாக் 2-0-22-0, ரஹ்மான் 4-0-33-2, அஜ்மல் 3.5-0-46-1, அப்ரிதி 4-0-34-1, ஹபீஸ் 2-0-20-0.

பிளஸ் 2 தேர்வில் 85.2 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி : மாணவிகள் அசத்தல்

Front page news and headlines today

ஆவலுடன் எதிர்பார்த்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கடந்த ஆண்டைவிட 2.2 சதவீதம் அதிகரித்து, 85.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், மாணவர்கள் 81.9 சதவீதம் பேரும், மாணவியர் 88 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருந்தாலும், முக்கியப் பாடமான கணிதத்தில் கடந்த ஆண்டைவிட 50 சதவீதத்திற்கும் குறைவாக, 'சென்டம்' சரிந்திருப்பது மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வை, ஆறு லட்சத்து 82 ஆயிரத்து 607 மாணவர்கள் எழுதினர். இதில், மாணவர்கள் மூன்று லட்சத்து 18 ஆயிரத்து 931 பேர்; மாணவியர் மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 471 பேர். இதன் முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய மாணவர்களில் 85.2 சதவீத மாணவர்கள் (ஐந்து லட்சத்து 81 ஆயிரத்து 251பேர்) தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 83 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 2.2. சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.மாணவர்களில் 81.9 சதவீதம் பேரும், மாணவியரில் 88 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல், மாணவர்களை விட இந்த ஆண்டும் மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு மூன்று லட்சத்து 83 ஆயிரத்து 762 மாணவர்கள், 60 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்களை பெற்றனர். இது, இந்த ஆண்டு மூன்று லட்சத்து 92 ஆயிரத்து 747ஆக அதிகரித்துள்ளது.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு கணிதத் தேர்வு கடினமான முறையில் இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதனால், எதிர்பார்த்ததை விட மதிப்பெண்கள் சரியலாம் என்றும், 'சென்டம்' வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.அவர்கள் கூறியதுபோலவே, முக்கிய பாடமான கணிதத்தில், 'சென்டம்' வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 4,060 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த ஆண்டு 1,762 பேர் மட்டுமே, 200க்கு 200 பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்திலும், 'சென்டம்' குறைந்துள்ளது. மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளில் சேர, இந்தப் பாடங்களின் மதிப்பெண்கள் முக்கியமாக இருக்கும் நிலையில், 'சென்டம்' கணிசமாக சரிந்திருப்பது, மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மாநில அளவிலான முதலிடம், வழக்கம்போல் இந்த ஆண்டும் தென் மாவட்டத்திற்கு சென்றது.கடந்த ஆண்டு தென்காசி அருகில் உள்ள இலஞ்சியைச் சேர்ந்த ரமேஷ், முதலிடம் பெற்றார். இந்த ஆண்டு, தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா பள்ளி மாணவர் பாண்டியன், 1,187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். மூன்றாவது இடம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது. தலைநகர் சென்னையில் இருந்து ஒரு மாணவர் கூட, 'ஸ்டேட் ரேங்க்'கில் இடம்பெறவில்லை.

பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு ; தூத்துக்குடி மாணவன் முதலிடம் ; ‌கலெக்டராவதே இலட்சியம்

மாநிலம் முழுவதும் மாணவ- மாணவிகள் எதிர்பார்த்த பிளஸ் 2 ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. கலெக்டராக மாறி மக்களுக்கு தொண்டு ஆற்றுவேன் என முதலிட‌த்தை பிடித்த மாணவன் பாண்டியன் கூறியுள்ளார். ரிசல்ட்டுக்கு பின்னர் மாணவ, மாணவிகளின் வருங்கால, கனவு எண்ணத்திற்கு விளக்கம் தரும் கல்வியாளர்களின் நேரடி ‌ஒளிபரப்பு தினமலர் இணையதளம் ஏற்பாடு செய்திருந்தது. லைவ் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் ஆர்வமாக கண்டுகளித்தனர்.

தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பாண்டியன் என்ற மாணவன் 1187 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். 1186 மார்க்குகள் பெற்று 3 மாணவர்கள் 2 வது இடத்தை பிடித்துள்ளனர். இதில் சந்தியா ( விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி பண்டமங்கலம் நாமக்கல் ) காருண்யா ( எஸ்.வி., மந்திர் மேல்நிலைப்பள்ளி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி) , தினேஷ் ( எஸ்.வி., மந்திர் மேல்நிலைப்பள்ளி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி) ஆகிய 3 பேர் 2 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.



3 வது இடத்தை பிடித்தவர்கள் யார் ? யார் ? :



3 வது இடத்தை 5 மாணவ, மாணவிகள் 3 வது இடத்தை பிடித்துள்ளனர் . பிரவக்சனா ( சி.வி.பி.,ஏ.சி.ஆர்.ஆர்.,மெட்., பள்ளி ) , மனோசித்ரா ( குறிஞ்சி மெட்., மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) அபிநயா( பி.வி.பி.,மெட்ரிக்பள்ளி திண்டல் ஈரோடு ) , செங்கல்பட்டு ஸ்ரீவித்யா ( பிரின்ஸ் மெட்., மேல் நிலைப்பள்ளி மடிப்பாக்கம் செங்கல்பட்டு ) , அரியலூர் அண்டோ நசீரின் ( அரசு நகர் மேல்நிலைப்பள்ளி மெட்., மேல்நிலைப்பள்ளி அரியலூர் ) ஆகியோர் 1185 மார்க்குகள் பெற்று 5 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. 6 ,லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 85 .2 சத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முடிவுகள் வெளியானதும் மாணவ, மாணவிகள் தத்தம் பள்ளிகளில் குவிந்திருந்தனர்.



மணப்பாடம் செய்வது தனக்கு கைவந்த கலை முதலிடம் பிடித்த மாணவன் பளீச் பேட்டி : பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாணவன் பாண்டியனின் தந்தை ராஜூ., இவர் நெடுஞ்சாலைத் துறையில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். தாயார் சாந்தி அரசு பள்ளியில் ஆசிரியை. அண்ணா பல்ககலைக்கழகத்தில் இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார் சகோதரர் ரவி சங்கர். மாணவன் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது : எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி நாட்டுக்காக பணி புரிய வேண்டும் என்பதை லட்சியம். இந்த வெற்றி தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். தன்னை எப்போதும் பெற்றோர்கள் படி என்று நிர்பந்திப்பதில்லை , படிப்பு மட்டும் இல்லாமல் பொழுதுபோக்குக்கும் திட்டமிட்டு நேரம் ஒதுக்குவேன். மணப்பாடம் செய்வது தனக்கு கைவந்த கலை என்றும் அப்படி படித்தது தேர்வில் மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார். பாண்டியனின் பாடவாரியான மதிப்பெண்கள் பின்வருமாறு : தமிழ் : 194, ஆங்கிலம் : 193, கணிதம் : 200, இயற்பியல் : 200, வேதியியல் : 200, கம்ப்யூட்டர் சயின்ஸ் : 200.



இதில் மாணவர்கள் , மாணவிகள் . பள்ளிகள் மூலமும், இணையதளம் மூலம் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை கொண்ட தினமலர் நாளிதழ் தேர்தல் முடிவுகளை தினமலர் இணையதளம் கல்விமலர்.காம் மூலம் உடனடியாக வெளியிட்டுள்ளது. தினமலர் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கு ரிசல்ட் வெளியான உடன் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ் ., மற்றும் இ மெயில் மூலமும் பறந்தன. கடந்த தேர்வை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகும்.



பாட வாரியாக முதலிடம் பிடித்த மாணவ- மாணவிகள் : பிளஸ் 2 தேர்வில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி.ஜி. மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா, தமிழில் 197 மதி்பபெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். திருப்பத்தூர் மேட்டுக்குளம் வேலூர் சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் எம்.வெங்கடேஷ் ஆங்கிலத்தில் 196 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன், இயற்பியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார்.




தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன், வேதியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். கிருஷ்ணகிரி, உத்தங்கரை எஸ்.வி.மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.தினேஷ், உயிரியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். தக்கலை, மடத்துவிளை செயின்ட் லாரன்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி வி.ஜெனிஷா, தாவர இயல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.



குழித்துறை, மார்த்தாண்டம் கிறிஸ்துவ ராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனிதா எட்வின், விலங்கியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார். தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன், கணிதத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். கரூர் எம்.பி.எல்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.கார்த்திகா, வரலாற்று பாடத்தில் 199 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார்.



பொருளாதாரப் பாடத்தில் பாண்‌டிச்சேரி குளூனி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்வப்னா சாரா குருவில்லா, 200 மதிப்பெற் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். வர்த்தகம் பாட்த்தில் பெரம்பலூர் டி.எஸ்.மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.ஜெயலட்சுமி, 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். சிறப்பு தமிழ்ப் பாடத்தில் திருவாரூர் ஸ்ரீ ஜி.ஆர்.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.கீர்த்தி பிரியா 191 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.



கணித பாடத்தில் 1762 பேர் 200க்கு 200 : கணித பாடத்தில் 1762 பேர் 200க்கும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணித பாடத்தில் 4060 ‌பேர் 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த ஆண்டு கணிதப் பாடம் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.



உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சி: நேரடி ஒளிபரப்பு : உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சி, 'தினமலர்' இணையதளத்தில் இன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை முன்னிட்டு , 'தினமலர்' நாளிதழ் தங்கள் வாசகர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை வழங்கியது. இணையதளத்தில், இன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்தது. இதில், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, சென்னை செயின்ட் ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளி நிர்வாக இயக்குனர் கிஷோர் குமார், சியோன் பள்ளி நிறுவனங்களின் தாளாளர் விஜயன் ஆகியோர் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். மாணவர்கள் பலர் தங்களுடைய சந்தேகங்களை போன் மூலம் கேட்டு பயன்பெற்றனர்.

வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'

Top world news stories and headlines detail 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் படுதோல்விக்கு ஐ.பி.எல்., நள்ளிரவு 'பார்ட்டிகளே' காரணம் என கேப்டன் தோனியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். உண்மையில் இந்த 'பார்ட்டிகளில்' அரங்கேறிய சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. விரும்பிய பெண்ணுடன் உற்சாகம், மதுபானத்தில் மிதப்பது, போதை பொருட்களை பயன்படுத்துவது என வீரர்கள் மிகுந்த உல்லாசமாக இருந்துள்ளனர். அதிகாலை 4 மணி வரை ஆட்டம் நீடித்ததால், உடல் அளவில் சோர்ந்து போயுள்ளனர்.


இந்தியாவில் மூன்றாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் நடந்தது. இதில் ஒவ்வொரு போட்டி முடிந்ததும் நள்ளிரவு 'பார்ட்டிகள்' நடந்தன. முன்னணி வீரர்களும் பங்கேற்று, இரவு நேரத்தை உற்சாகமாக கழித்தனர். 'பேஷன் ÷ஷா', வெளிநாட்டு மாடல்கள், நடனப் பெண்கள் என கவர்ச்சி அம்சங்கள் ஏராளமாக அரங்கேறின. மதுவும் தாராளமாக பரிமாறப்பட்டது. 'இப்பார்ட்டியில்' பங்கேற்க விரும்பும் ரசிகர்களிடம் இருந்து ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை வசூலிக்கப்பட்டது. இத்தகைய 'பார்ட்டிகள்' தான் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


அதிகாலை 4 மணி: ஐ.பி.எல்., 'பார்ட்டிகள்' வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டல்களில் தான் நடந்தன. இதனால், 'பார்ட்டிகளை' அவர்களால் தவிர்க்க முடியவில்லை. 'ரூமில்' சும்மா இருந்தால் கூட கீழே போய் 'ஜாலியாக' இருக்க வேண்டியது தானே என கூறுவார்களாம். சரி ஒரு அரைமணி நேரம் பொழுதை கழிக்கலாம் என 'ரூமை' விட்டு வெளியேறும் வீரர்கள், 'பார்ட்டி' மயக்கத்தில் அதிகாலை 4 மணி வரை மூழ்கி விடுவார்களாம்.


முதலில் பேஷன் ஷோ சுமார் 45 நிமிடங்கள் நடக்குமாம். இதில் பங்கேற்ற மாடல்கள், பின் வீரர்களுடன் கலந்து சகஜமாக பேசுவர். இவர்களை தவிர, எதற்கும் 'துணிந்த' சில பெண்களும் கலந்து கொள்வார்கள். இவர்களுடன் சேர்ந்து குடித்து விட்டு உல்லாசமாக இருப்பார்களாம். சிகரெட், உயர் ரக மதுபானம், சில நேரங்களில் போதை மருந்துகள் என அனைத்துமே இலவசமாக கிடைக்கும். இந்த 'பார்ட்டியில்' இருந்து மீள்வதற்கு நீண்ட நேரம் ஆகும். அடுத்து போட்டிகள் இருந்ததால், வீரர்கள் சோர்ந்து போயினர். இதே களைப்புடன் யுவராஜ், காம்பிர், தினேஷ் கார்த்திக், ஹர்பஜன், பியுஸ் சாவ்லா போன்ற வீரர்கள் உலக கோப்பை தொடருக்கும் சென்றதால், மிகுந்த ஏமாற்றம் அளித்தனர்.

பொதுதேர்வு முடிவுகள்அறிய

பிளஸ்2 பொதுதேர்வு முடிவுகள் மதிப்பெண் பட்டியலுடன் அறிய இனையதளங்கள்

http://www.dge1.tn.nic.in/

http://www.pallikalvi.com/

http://www.tnresults.nic.in/

http://www.malaimalar.com/

இடஒதுக்கீட்டில் தாமதம் ஏன்? கொந்தளிக்கும் புதுவை முஸ்லிம்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவையில் இடஒதுக்கீடு தொடர்பாக போராடியது தொடர்பான ரிப்போர்டரின் கட்டுரை.


நன்றி : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

நாகூர் தர்கா மினராக்களில் கொடிமரம் ஏற்றம்

நாகூர் ஆண்டவர் தர்கா 453ம் ஆண்டு கந்தூரி விழா தொடக்கமாக நேற்று காலை 5.15 மணியளவில் தர்காவின் 5 மினராக்களில் பாய்மரம் எனும் கொடி மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நாகூர் ஆண்டவர் தர்கா மிகவும் புகழ்பெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மற்þறும் அனைத்து சமுதாய மக்களுக்கும் வந்து ஆண்டவர் தர்காவில் வழிபாடு செய்கின்றனர்.இங்கு ஆண்டுதோறும் கந்தூரி திருவிழா நடந்தது. இந்தாண்டு விழா நாளை (15ம் தேதி) இரவு 8.30 மணிக்கு புனித கொடியேற்றத்துடன் தொடங்கி 28ம் தேதி வரை நடக்கிறது.

இதை ஒட்டி நாளை இரவு 8.30 மணிக்கு 5 மனோராக்களில் புனித கொடியேற்றம், 22ம் தேதி இரவு வாணவேடிக்கை, 23ம் தேதி இரவு 10 மணிக்கு பீர் வைக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 24ம் தேதி இரவு தாபூத்து எனும் சந்தனக்கூடு நாகையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மறுநாள் 25ம் தேதி அதிகாலை ஹஜரத்து ஆண்டவர் ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் 26ம் தேதி மாலை 5 மணிக்கு பீர் ஏகுதல், 28ம் தேதி இரவு 8.30 மணிக்கு குர் ஆன்ஷரீபு ஹதியா செய்து கந்தூரி விழா கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதை ஒட்டி நேற்று காலை 5.15 மணிக்கு தர்காவின் 5 மினராக்களில் பாய்மரம் எனும் கொடிமரம் ஏற்றப்பட்டது.இதில் தர்கா பரம்பரை டிரஸ்டி முகமது கலிபா சாகிப் மற்றும் தர்கா அறங்காவலர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்பு பேரவை மாநிலத்தலைவர் சச்சா முபாரக், பரம்பரை நாட்டாண்மைக்காரர்களான போர்டு ஆப் டிரஸ்டிகள் கலந்து கொண்டனர்.

ஓமன் நாட்டிலிருந்து 2,600 டன் யூரியா கும்பகோணம் வரவழைப்பு

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கோடை மற்றும் குறுவை சாகுபடிக்காக ஓமன் நாட்டில் இருந்து 2 ஆயிரத்து 600 டன் யூரியா ரயில் மூலம் வரவழைக் கப்பட்டுள்ளது.தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தற்போது நிலத்தடி நீரை கொண்டு கோடை நெல் சாகுபடி நடந்து வருகிறது. அதேபோல குறுவை சாகுபடிக்கென நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.கோடை மற்றும் குறுவை நெல் சாகுபடி தேவைக்கென ஓமன் நாட்டில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு 2 ஆயிரத்து 640 டன் யூரியா வரவழைக்கப் பட்டது. பின்னர் 42 ரயில் வேகன்கள் மூலம் கும்பகோணம் வந்தடைந்தது.யூரியா மூட்டைகளை தஞ்சை மாவட்ட கூட்டுறவு விற்பனை இணைய மண்டல அலுவலர் சேகர் மற்றும் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். பின்னர் கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் தாலுகாக்களில் உள்ள 120 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 170 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தகராறு: தஞ்சையில் தந்தை, மகன் தற்கொலை

தஞ்சையில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை, மகன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர்.இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:தஞ்சை மருத்துவக் கல்லூரி ரோடு அபிராமபுரம் தேவன் நகரைச் சேர்ந்தவர் சிவசங்கர்(45). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வேலை செய்தார். இவரது மனைவி மகேஷ்வரி (38). தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் செவிலியர் பயிற்சி ஆசிரியராக உள்ளார். இவர்களது மகன் கார்த்திகேயன் (14). தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 8ம் வகுப்பிற்கு செல்ல உள்ளார். சிவசங்கர் சரியாக வேலைக்கு செல்லாததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் மகேஷ்வரி கடந்த சில மாதங்களாக தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். மீண்டும் தின தினங்களுக்கு முன்பு மகேஷ்வரி அபிராமபுரத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்தார்.இந்நிலையில் நேற்று (13ம்தேதி) மகேஷ்வரி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பணிக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது கணவர் சிவசங்கர், மகன் கார்த்திகேயன் ஆகிய 2 பேரும் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.இது குறித்து மகேஷ்வரி தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சையில் இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சை வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 23 ஆயிரம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (14ம்தேதி) தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் வெளியிடப்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:கடந்த மார்ச் மாதம் முதல் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வு 22ம்தேதி வரை நடந்தது. இதில் தஞ்சை வருவாய் மாவட்டத்தில் 59 தேர்வு மையங்களில் 23 ஆயிரத்து 985 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (14ம்தேதி) காலை 9 மணிக்கு தஞ்சை தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் வெளியிடப்படும்.மேலும் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விளம்பர பலகையில் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.1.47 கோடி! மதிப்பிலான கேடமைன் போதைப் பொருள் பறிமுதல் இந்தோனேசியாவுக்கு கடத்த முயன்ற வாலிபர் கைது

Top world news stories and headlines detailசென்னையில் இருந்து இந்தோனேசியாவிற்கு கடத்த இருந்த 1.47 கோடி ரூபாய் மதிப்புள்ள, 14.78 கிலோ எடை கொண்ட கேடமைன் ஹைட்ரோ குளோரைடு என்ற போதைப் பொருளை சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட் டுள்ளார்.சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம் பூருக்கு புறப்பட இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளை, சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்காணித்தனர்.இந்த விமானத்தின் மூலம் மலேசியா சென்று, அங்கிருந்து இந்தோனேசியா செல்வதற்காக சென்னையைச் சேர்ந்த மணி விஜயகுமார்(32) என்பவர், விமான நிலையத்திற்கு வந்தார்.


அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், அவருடைய பேக்கேஜ் களை சோதனையிட்டனர். அதில் சூட்கேஸ் ஒன்றில், சில ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஜார்கள் இருந்தன.விசாரணையில், அவற்றை விற்பனைக்காக எடுத்துச் செல்வதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதில் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்த நிலையில், ஐஸ்கிரீம் தயாரிப்பு ஜார்களை உடைத்துப் பார்த் தனர்.அப்போது, ஜார் களின் பக்கவாட்டு பகுதிகளில், 14.78 கிலோ எடை அளவுள்ள கேடமைன் ஹைட்ரோ குளோரைடு என்ற போதைப் பொருள், பிளாஸ்டிக் கவர்களில் பதுக்கி வைக்கப்பட் டிருந்தது தெரியவந்தது.


சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 1.47 கோடி ரூபாய். போதைப் பொருளை கைப்பற்றிய கஸ்டம்ஸ் அதிகாரிகள், மணி விஜயகுமாரை கைது செய்து விசாரித்தனர்.இக்கடத்தல் சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் கமிஷனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை விமான நிலையத்தில், கேடமைன் போதைப் பொருள் குறித்து தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனை மற்றும் கைது சம்பவத்தை தொடர்ந்து கடந்த பல மாதங்களாக சென்னை வழியாக நடந்து வந்த கேடமைன் போதைப் பொருள் கடத்தல் தடைபட்டது.சென்னையில் இருந்த கெடுபிடி காரணமாக கேடமைன் போதை மருந்து கடத்தல்காரர்கள் கோவை மற்றும் டில்லி ஆகிய விமான நிலையங்கள் மூலம் கடத்தல் தொழிலை செய்து வந்தனர்.நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது சென்னை வழியாக கேடமைன் கடத்த முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது.சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்து, பறிமுதல் செய்துள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


வேலையில்லாத கொடுமை: தமிழகத்தில், படித்து முடித்து வேலையின்றி திரியும் இளைஞர் களை குறிவைத்துள்ள சமூகவிரோத கும்பல், அவர் களை மூளைச் சலவை செய்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடுத்தி வருவது மணி விஜயகுமா ரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.வேலையில்லாமல் இருந்த மணி விஜயகுமார், பல ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு, சதிக் கும்பலின் வலையில் வீழ்ந் துள்ளது குறிப்பிடத்தக்கது.சென்னை மட்டுமல் லாமல், தமிழகத்தின் பல் வேறு நகரங்களில் இருந்தும் படித்த இளை ஞர்கள் பலர், வெளிநாடுகளில் இருந்து கடத்தல் பொருட்களை கொண்டு வர ஈடுபட்டு வருகின் றனர்.

அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு 'சீல்'

தி.நகர், உஸ்மான் சாலையில், வீடு கட்ட அனுமதி பெற்று முறைகேடாக கட்டப்பட்டிருந்த வணிக வளாகத்திற்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.

சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையில், வாகனம் நிறுத்தும் தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டு வதற்காக கலந்தர் என் பவர், 2008ம் ஆண்டு திட்ட அனுமதி கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் திடம் (சி.எம்.டி.ஏ.,) விண்ணப்பித்தார்.சி.எம்.டி.ஏ.,வும் அனுமதி அளித்தது. ஆனால், தரைதளம், மேல் இருதளங்கள், மூன்றாம் தளம் கொண்ட வணிக உபயோகத்திற்கான கட்டடத்தை கட்டி, கலந்தர் மதீனா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடையை நடத்தி வந்தார்.அத்துடன், தற்போதுள்ள கட்டடத்தை முறைப் படுத்தக் கோரி, திட்ட அனுமதிக்கும் சி.எம்.டி.ஏ., விடம் விண்ணப்பித்தார். ஆனால், சி.எம்.டி.ஏ., அனுமதி மறுத்தது.


இந்த கட்டடமானது வணிக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுவதால், கட்டட உபயோகத்தை நிறுத்தி, அதில் உள்ள பொருட்களை காலி செய்யும்படி சி.எம்.டி.ஏ., கட்டட உரிமையாளருக்கு கடிதம் மூலம் அறிவித்தது.இதற்கு பதிலளித்த அவர், 30 நாட்களில் வணிகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதாகவும், தரைதளத்தில் பக்கச்சுவர் களை இடித்து கட்டடத்தை மீண்டும் வாகனம் நிறுத்தும் தளம் மற்றும் இரண்டு தளங்களாக மாற்றுவதாகவும் உறுதியளித்திருந்தார்.ஆனால், அவ்வாறு செய்யாமல் தொடர்ந்து வணிக உபயோகம் நடந்து கொண்டிருந்தது.இந்நிலையில், நேற்று காலை சி.எம்.டி.ஏ., சீனி யர் பிளானர் பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் குழு வணிக வளாகத்தை பூட்டி சீல் வைத்தது.இக்கட்டட உரிமையாளர் குடியிருப்பு கட்டடத் திற்கு அனுமதி பெற்று அதை வணிக உபயோகத் திற்கு மாற்றியதுடன், கூடுதல் தளம், பக்க இடைவெளியின்மை, கட்டட உபயோகம் மாற்றம், அதிகமான தரைதள பரப்பு மற்றும் வாகனம் நிறுத்துமிடத்தில் விதிமீறல்கள் செய்யப்பட்டுள்ளதாக சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை?

Front page news and headlines today

இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்களில் நடித்து கோடிகளை குவிக்கின்றனர். இதனால் தான் உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் நாட்டுக்காக விளையாடுவதில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். எனவே, அணியில் அறிமுகமாகி 5 ஆண்டுகள் வரை விளம்பரங்களில் நடிப்பதற்கு வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., உடனடியாக தடை விதிக்க வேண்டும்.


வெஸ்ட் இண்டீசில் நடந்த மூன்றாவது உலக கோப்பை 'டுவென்டி-20' தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு வீரர்களின் விளம்பர மோகம் முக்கிய காரணம். இந்திய அணியில் அறிமுகமாகி சில போட்டிகளில் பிரகாசித்து விட்டால், சம்பந்தப்பட்ட வீரர்களை விளம்பர நிறுவனங்கள் மொய்க் கின்றன. பல்வேறு பொருட்களுக்கு விளம்பர 'மாடலாக' தோன்றும் இவர்கள் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக மாறி விடுகின்றனர். இதற்கு பின் இவர்களுக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் சுத்தமாக போய் விடுகிறது.


அணியில் பெயரளவுக்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றனர். தற்போது ஐ.பி.எல்., மூலமாகவும் பெருமளவு சம்பாதிக் கின்றனர். வீரர்கள் நாட்டுக்காக விளை யாடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு வீரரும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாட வேண்டும். இதற்கு பின் தான் விளம்பர படங்களில் நடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


யுவராஜுக்கு தேவை 'பிரேக்': அடிக்கடி காயத்தால் அவதிப்படும் யுவராஜ் சிங், தொடர்ந்து போட்டிகளில் சொதப்புகிறார். இவருக்கு நீண்ட 'பிரேக்' அளிப்பது தான் ஒரே தீர்வாக அமையும். இவரை போல படுமட்டமாக ஆடும் ரவிந்திர ஜடேஜா போன்றவர்களுக்கும் வாய்ப்பு மறுக்க வேண்டும்.


'பார்ட்டிக்கு' போகச் சொன்னது யார்? உலக கோப்பை தோல்விக்கு ஐ.பி.எல்., 'பார்ட்டிகள்' தான் காரணம் என்று கேப்டன் தோனி சொன்னார். உண்மையில் ஐ.பி.எல்., 'பார்ட்டிகளில்' கலந்து கொள்ள வேண்டும் என்று எந்த ஒரு வீரரும் நிர்ப்பந்திக்கப்படவில்லை. நடனப் பெண்கள், உயர்ரக மதுபானம் என உல்லாசமாக பொழுதை போக்கவே வீரர்கள் பங்கேற்றனர். சச்சின் போன்ற ஒரு சிலர் மட்டுமே துணிச்சலாக கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பெங்களூரு வீரர் உத்தப்பா கூறுகையில்,''பார்ட்டிகளில் பங்கேற்பது தனிப்பட்ட வீரர்களின் விருப்பம். நான் 2 பார்ட்டியில் தான் கலந்து கொண்டேன்,''என்றார். வரும் ஐ.பி.எல்., தொடரில் 'பார்ட்டிகளுக்கு' தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த முறை இந்த காரணத்தை தோனி சொல்லமுடியாது.

உயர் நிலை வகுப்புகளுக்கு புதிய கல்வி முறை : வரும் கல்வியாண்டில் அறிமுகம்

மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம் படுத்தும் வகையில், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் உயர்நிலை வகுப்புகளுக்கு 'படைப்பாற்றல் பிளஸ்' என்ற புதிய கல்வி முறை, வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


மத்திய அரசு சார்பில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு செயல்முறை கல்வி திட்டத்தின் கீழும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையில் படைப்பாற்றல் கல்வி திட்டத்தின் கீழும் பாடம் கற்பிக்கப்படுகிறது. தொடர்ந்து, உயர்நிலை வகுப்புகளுக்கு புகுத்த திட்டமிடப்பட்டு; கடந்தாண்டு தேசிய அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


இத்திட்டத்தின் கீழ் பள்ளிகள் மேம்பாடு செய்யப்படவுள்ளது. இதில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் 'படைபாற்றல் பிளஸ்' என்ற புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


இக்கல்வி முறையின் கீழ் கடந்தாண்டு ஆசிரியர்களுக்கு, இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் பாடம் சார்ந்த இப்பயிற்சி வழங்கப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டு, நடப்பாண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படவுள்ளது.


மேலும், உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சார்ந்த கல்வியும், ஆய்வக பயிற்சியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் ஆய்வகம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு; ஆய்வக உபகரணங்கள் வாங்க, பள்ளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் பள்ளி திறந்தவுடன், ஆய்வக உபகரணங்கள் வாங்குவதற்கும், நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் நாளிதழ்கள் வாங்குவதற்கும், இதர செலவுகளுக்காகவும் பள்ளிக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.


புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 'படைப்பாற்றல் பிளஸ்' கல்வி முறையின் கீழ் ஜூலை மாதம் முதல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கழிப்பறையுடன் போலீசாருக்கு குளிரூட்டப்பட்ட நிழற்குடை : மதுரையில் அறிமுகம்

Tamilnadu special news update

இந்தியாவிலேயே முதன்முறையாக, மதுரை நகர் போலீசாருக்கு 3.50 லட்சம் ரூபாய் செலவில், கழிப்பறை வசதியுடன் குளிரூட்டப்பட்ட நிழற்குடை நேற்று திறக்கப்பட்டது. தீயணைப்பு கருவி, முதலுதவிக்கான மருந்துகள் இருப்பதுடன், ரயில், விமான நேரங்கள் மற்றும் மதுரை குறித்த தகவல்களும் இங்கு தெரிவிக்கப்படுகிறது. மதுரை ஆவின் சந்திப்பில், போலீஸ் கமிஷனர் பாலசுப்ரமணியன் திறந்து வைத்தார். உயர் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். 'ஸ்பான்சர்' மூலம் அமைக்கப்பட்ட இந்த நிழற்குடையின் மதிப்பு 3.50 லட்சம் ரூபாய். மின் மற்றும் தண்ணீருக்கான மாத பராமரிப்பு செலவையும் 'ஸ்பான்சர்' ஏற்கின்றனர். பழமையான மதுரை குறித்த படங்கள் மற்றும் போலீஸ் பணி குறித்த படங்கள் வைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை நிழற்குடை திறந்திருக்கும். இங்குள்ள போலீசாரிடம் பொதுமக்கள் புகார் கூறினால், வாக்கிடாக்கி மூலம் கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவிப்பர்.


கமிஷனர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ''போக்குவரத்து போலீசார் மட்டுமில்லாமல், அனைத்து பிரிவு போலீசாரும் இதை பயன்படுத்துவர். நான் உட்பட உயர் அதிகாரிகளும் அவ்வப்போது இங்கு 'விசிட்' செய்வோம். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் மையமாக இது செயல்படும்,'' என்றார்.

கல்பாக்கம் வேக ஈணுலையில் வெப்பத் தணிப்பான் பொருத்தம் : விஞ்ஞானிகள், இன்ஜினியர்கள் சாதனை

Tamilnadu special news update

சென்னை: கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் முன்மாதிரி வேக ஈணுலையில், பிரமாண்டமான வெப்பத் தணிப்பான் நேற்று பொருத்தப்பட்டது. இந்தியாவின் எரிசக்தித் தேவையை ஈடுகட்டும் வகையில், கல்பாக்கத்தில் 500 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈணுலை (பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்) அமைக்கப்பட்டு வருகிறது. இதில், வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு பாகமாக பொருத்தப்பட்டு வருகிறது. இந்த ஈணுலையின் வெப்பத் தணிப்பானாக சோடியம் பயன்படுத்தப்படுகிறது. மையத்தில் உள்ள மற்றும் முதன்மையான சோடியம் சர்க்கியூட் உட்பட, இந்த ஈணுலையின் மொத்த பாகங்களும் பிரதான கொள்கலன் (மெயின் வெஸ்சல்) எனப்படும் ஒரே கொள்கலனுக்குள் அடங்குகின்றன.


இந்த ஈணுலையில், வெப்பத் தணிப்பானை நிறுவும் மிக முக்கியமான பணி, நேற்று மேற்கொள்ளப்பட்டது. பகல் 12.30 மணிக்குத் துவங்கிய இந்தப் பணி ஒரு மணி நேரம் நீடித்தது. தணிப்பான் நிறுவப்பட்டுவிட்டாலும், அவற்றை மற்ற பாகங்களோடு பொருத்தும் பணி முடிக்க 15 நாட்கள் தேவைப்படும்.
இந்த வெப்பத் தணிப்பான், இரண்டு பிரமாண்டமான இணை சிலிண்டர்களைக் கொண்டது. 'எஸ்எஸ் 316எல்என்' எனப்படும், பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உலோகத்தினாலான இந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றும் ஐந்து மீட்டர் உயரம் கொண்டவை. உள்சிலிண்டர் 12.44 மீட்டர் விட்டமும், வெளிசிலிண்டர் 12.67 மீட்டர் விட்டமும் கொண்டது. சுற்றளவு 40 மீட்டர். இவற்றின் மொத்த எடை 70 டன்.


சிலிண்டர்களும், அவற்றுக்குள் இறங்கி பணிபுரிவதற்கான அமைப்புகளும், பிரேம்களும் சேர்த்து மொத்தமாக இந்த சிலிண்டர்களை பொருத்திய போது, அதன் எடை 170 டன்.


இதைப் பொருத்துவதற்காக, நாட்டிலேயே மிகப் பெரிய கிரேன் பயன்படுத்தப்பட்டது. கிரேனின் அடிப்பகுதியில் இருந்தபடி, 170 டன் எடை கொண்ட வெப்பத் தணிப்பானை, தரையிலிருந்து 28 மீட்டர் உயரம் கொண்ட கட்டடத்துக்குள் இறக்கி, தரைக்குள் 30 மீட்டர் பள்ளம் கொண்ட ஈணுலைக்குள் பொருத்தப்பட்டது.


சிலிண்டர்களின் எந்தப் பக்கத்திலும் கொக்கிகளை பொருத்த முடியாது என்பதால், அதற்காகவே பிரத்தியேகமான பிரேம்கள் செய்யப்பட்டிருந்தன. மொத்தமாக 170 டன் எடை கொண்ட இந்த தணிப்பானை, கொள்கலனோடு பொருத்தியாக வேண்டும். ஒரு சிறு கீறல் விழுந்தாலும், மொத்தமும் பாழ் என்ற நிலையில், மிக மிகக் கவனமாக, திட்ட இயக்குனர் பிரபாத் குமாரின் நேரடி மேற்பார்வையில், இப்பணி மேற்கொள்ளப்பட்டது. எந்தக் கோளாறையும் சரி செய்ய முடியாது என்ற அபாயகரமான நிலையில், இந்தத் தணிப்பானை பொருத்தும் பணி உள்ளிட்ட அனைத்தும், ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்ட பிறகே மேற்கொள்ளப்பட்டது.


இந்த வெப்பத் தணிப்பானின் முக்கிய செயல்பாடு, பிரதான கொள்கலனை குளிர்விப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சோடியத்தை, வளையங்களாலான பாதை மூலம் அனுப்புவதே. குளிர்விக்கப்பட்ட சோடியம் மூலம், ஈணுலையில் உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு, 450 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக்கப்படுகிறது. வெப்பத் தணிப்பான், அளவிலும் எடையிலும் மிகப் பிரமாண்டமானது என்பதால், ரயில் மூலமோ, தரை வழியாகவோ கொண்டு வருவது சாத்தியமில்லாதது. இதனால், இந்தத் தணிப்பானை, 'பெல்' நிறுவனம், கல்பாக்கத்தில் வைத்தே பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுத்தது. இந்த மொத்தத் திட்டமும் தேசத்தின் பெருமை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஸ்பென்சருக்கு எதிராக கடை உரிமையாளர்கள் போராட்டம்

ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் உள்ள கடைகளுக்கு மின்சாரம் வழங்குவதில் ஸ்பென்சர் நிர்வாகம் மோசடி செய்வதாக கூறி ஸ்பென்சர் பிளாசாவில் கடை வைத்துள்ளவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணாசாலையில் ஸ்பென்சர் பிளாசா வணிகவளாகம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் இங்கு கடை பரப்பியுள்ளன.

இந்த நிலையில் ஸ்பென்சரின் 2வது பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். அண்ணாசாலைக்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் உடனடியாக விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தனர்.அங்கு கடை உரிமையாளர்கள் போராட்டம்நடத்தினர். கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் காமராஜ் இது குறித்துக் கூறுகையில், தமிழக அரசு எங்களுக்காக வழங்கும் மின்சாரத்தை எங்களுக்குத் தராமல், பன்னாட்டு நிறுவனங்களுக்கே மோசடியாக கொடுத்து வருகிறது ஸ்பென்சர் நிர்வாகம்.
இதனால் எங்களது கடைகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்படுகிறது. ஏசியைக் கூட போட முடியவில்லை. இதனால் பெருமளவிலான வாடிக்கையாளர்கள் மாறி விட்டனர்.இதனால் எங்களது தொழில் பாதித்துள்ளது. 50 ஆயிரம் ஊழியர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.

இந்தப் போராட்டத்தால் அண்ணா சாலையில் பரபரப்பு நிலவியது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

கலந்தர் மதீனா கடைக்கு சீல் வைப்பு

வீடு கட்டுவதற்கான அனுமதியை வாங்கி விட்டு பிரமாண்டமான ஜவுளிக் கடையை கட்டிய சென்னை கலந்தர் மதீனா ஜவுளிக் கடைக்கு இன்று சென்னை பெருநகரவளர்ச்சிக் குழும அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.

சென்னை தி.நகரில் கலந்தர் மதீனா ஜவுளிக்கடை உள்ளது. திறந்த வேகத்தில் பிரபலமாகி விட்ட இந்த கடைக்கு பெருமளவிலான வாடிக்கையாளர்கள் வந்து கொண்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை இங்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.

அதன் பின்னர் ஜவுளிக்கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது.இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட இடத்தில் வீடு கட்டுவதற்காகவே அனுமதி வாங்கப்பட்டிருந்தது.

ஆனால் வீடு கட்டாமல் பிரமாண்ட ஜவுளிக் கடையை கட்டியுள்ளனர். இதனால்தான் கடை சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.வீடு கட்ட அனுமதி வாங்கி விட்டு பிரமாண்ட கடை எழுப்பப்பட்ட விவகாரம் தி.நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 சிறுவர்களால் கற்பழிக்கப்பட்ட மூதாட்டி பரிதாப சாவு

திருவனந்தபுரம் அருகே 2 சிறுவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.திருவனந்தபுரம் மாவட்டம் அரியநாடு பகுதியை சேர்ந்தவர் மல்லிகா.
அங்குள்ள மார்க்கெட்டில் குடிசை போட்டு தனியாக வசித்து வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மல்லிகா குடிசையில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து அறிந்ததும் போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பரிசோதனையில் அவரை பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுக்கும் குறைவான 2 பேர் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த மல்லிகா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரை பலாத்காரம் செய்த 2 சிறுவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
http://www.adiraidailynews.blogspot.com

பேராவூரணியில் இடிந்த ஆற்றுப்பால கரையை சீரமைக்க கோரிக்கை

பேராவூரணி நகரின் மையப்பகுதியில் உள்ள இடிந்து விழுந்த ஆற்றுப்பாலத்தின் கரையை உடன் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர். பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் நகரின் மையப்பகுதியில் கல்லணைக் கால்வாய் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் மூலம் நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல், மாவடுகுறிச்சி, பொன்னாங் கன்னிக்காடு, பழையநகரம் உட்பட பல கிராமங்கள் வழியாக சென்று 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாய நிலங்களின் சாகுபடிக்காக பயன்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கனமழையால் பட்டுக் கோட்டை-பேராவூரணி சாலையில் வெள்ளம் புகுந்தது. இதனால் போக்குவரத்து தடைபட்டது. வெள்ளப்பெருக்கின் போது ஒருபக்க பாலச் சுவர் இடிந்து விழுந்தது. பொதுப்பணித்துறையினர் இடிந்த பகுதியின் ஓரத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு ஏற்படுத்தியதோடு சரி. இந்த சாலையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கோட் டைப்பட்டினம், கறம்பக்குடி, அதிராம் பட்டினம் வழித்தடங்களில் கனரக வாகனங்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் அதிகமாக சென்று வருகிறது. மேலும் தேவதாஸ் சாலை, ஜவகர் சாலை சந்திப்பு சாலையாகவும், பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடமாகவும் இப்பகுதி உள்ளது.


இந்நிலையில் பாலம் இடிந்த பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளும் கரைந்து போனதால் வாகனங்கள் பாலத்திற்குள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளை கேட்டபோது நெடுஞ் சாலைத்துறையினர் தான் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களோ பேராவூரணி பேரூராட்சியில் சம்பந்தப்பட்ட பகுதியில் இருவழிச் சாலையாக அமைப்பதற்கான திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. வந்ததும் உடனடியாக பாலப்பணி முடிக்கப்பட்டு விடும் என்கின்றனர். எனவே விபத்தை தடுக்கும் வகையில் உடன் பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கணினி தமிழ் முன்னோடி உமர் தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் அளிக்க வேண்டும் தமுமுக கோரிக்கை


உமர் தம்பி
ஓலைச் சுவடிகளில் உறைந்து கிடந்த தமிழ், பின் படிப்படியாக புத்தகங்களாக, பின்னர் கணினி மூலம் உலகெங்கும் வியாபித்திருக்கிறது. அதற்காக உழைத்த உமர் தம்பிக்காக இக்கோரிக்கை இக்கடிதம்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராமப்பட்டிணத்தில் ஜீன் 15, 1953ல் அப்துல் ஹமீது, ரொக்கையாவுக்கு மகனாய் பிறந்தவர் உமர் தம்பி.

முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார். 2001 ஆம் ஆண்டு துபாயில் இருந்து பணியில் விருப்ப ஓய்வு பெற்று தாயகம் வந்தார். தமிழகம் வந்து மென்பொருட்கள் தயாரித்துக் கொடுக்கும் பணியை செய்தார். பின்னர் தமிழ் கூறும் நல்லுலகம் கணினியிலும் தடம் பதிக்க ஆரம்பித்த அக்காலத்தில் தன்னையும் அதனுடன் இணைத்துக் கொண்டார்.

தேனீ இயங்கு எழுத்துரு

உலாவிகளில் ((Browser) செயல்படும் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பமான (WEFT) வெஃப்ட்-ஐ முதன் முதலாகத் தமிழில் அறிமுகம் செய்தார். அதைக் கொண்டு, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத போதும் கூடத் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களால் அமைந்த இணையத்தளங்களை மைக்ரோசாஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை ஏற்படுத்த முடிந்தது.

தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றி பல்வேறு இணையத் தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் அனேகம் பேர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.

உதாரணத்திற்கு www.murasoli.in முரசொலி இணையதளத்தை கணிணியில் வாசிப்பதென்றால் முரசொலி இணையதளத்தில் நிறுவப்பட்டிருக்கும் (Tamil Font) தமிழ் எழுத்துருவை பதிவிறக்கம் செய்த பின்னரே வாசிக்க முடியும். ஆனால் உமருடைய தேனி தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி எந்த இணையதளமாக இருந்தாலும் தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்தாமல் வாசிக்கலாம்.

தமிழ் இணைய அகராதி

கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து தமிழ் இணைய அகராதியைக் கொண்டு வந்தார் உமர் தம்பி.

உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும் கருவிகளும் :
1. AWC Phonetic Unicode Writer
2. Online RSS creator – can be used in offline as well
3. RSS செய்தியோடை உருவாக்கி
4. எண்களாக தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி
5. தமிழை ASCII வடிவில் டேட்டாபேஸில் சேமிக்கும் கருவி
6. எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி
7. ஒருங்குறி மாற்றி
8. க்னூ (Linex) பொதுமக்கள் உரிம அடிப்படையில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள்
9. தேனீ ஒருங்குறி எழுத்துரு
10. வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு
11. வைகை இயங்கு எழுத்துரு
12. தமிழ் மின்னஞ்சல்
13. தமிழ் ஒருங்குறி Toolbar for உலாவி
14. Uniwriter (உலாவியில் Tools மெனுவில் சேர்க்கப்படும்)
15. தமிழா-எ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.

உமருக்கு ஏன் அங்கீகாரம்

சொற்ப பலன்களைக் கொண்ட மென்பொருள் நிரலிகளை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் யுனிகோட் எழுத்துருக்களும், பல மென்பொருள் நிரலிகளையும் உருவாக்கி எவ்வித பொருளாதார எதிர்ப்பார்ப்புமின்றி பொதுப் பயன்பாட்டுக்கு வைத்தவர் உமர் தம்பி. இளம் வயதிலிருந்து தம் தாய்மொழி தமிழ் மீது நல்ல பற்றுள்ளவராக இருந்து வந்துள்ளார் உமர். உமர் மறைந்தது, 2006 ஆம் ஆண்டு ஜூலை 12. மண்ணில் மறைந்தாலும் தமிழ்க் கணினி உலகம் இருக்கும் வரை பெருங்கொடையினை அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார், உமர்.

இணையத்தில் விரைவாக தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று உமர் எடுத்த முதல் முயற்சி தான் இன்று பல வகையான தமிழ் வலைப்பூ பதிவுகளுக்கும், தமிழ் கணினி தொழில் நுட்பத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை இணையப் பயன்பாட்டாளர்களாலும் தமிழ் இணைய அறிஞர்களாலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

கணினியில் தமிழ் மொழி அதிவிரைவில் வளர்ச்சியடைவதற்கு உமர் தம்பி போன்றவர்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது. அதுபோல் உமரின் எழுத்துருக்கள், செயலிகள், கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றங்கள், அறிவுரைகள் அன்றும் இன்றும் தமிழ் இணையப் பயனார்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.

உமருக்கு உரிய அங்கீகாரம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கிடைக்கப் பெற்றால் முதலில் மகிழ்ச்சி அடையப் போவது இணையத் தமிழ் மக்கள் தான்.

உமருக்கு அங்கீகாரம் கிடைக்கப்பட்டால், அது கணினித் தமிழில் சாதனைப் படைக்க எந்த அரசாங்கத்தின் உதவியின்றி தமிழுக்காக தன்னலமற்ற சேவைகள் செய்துவரும், செய்ய துடிக்கும் எத்தனையோ உமர் தம்பிகளை இவ்வுலகம் காணும். தமிழ் இணையத்தில் தனக்கேன்று தனித்துவத்துடன் திகழும், மென்மேலும் வளர்ச்சியடையும்.

நம் தாய்மொழி தமிழ்ச் செம்மொழியாக மட்டும் இல்லாமல், அதற்கு மேலும் இவ்வுலகில் பல அங்கீகாரங்களை பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

அரசு உதவியின்றி தம் தாய்மொழி தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்ட உமர் தம்பி போன்ற எண்ணற்ற தன்னார்வத் தமிழ் கணினி தொண்டர்களை கண்டறியப்பட வேண்டும், அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

உமர் தம்பி பெயரில் விருதோ அல்லது உமர் தம்பி பெயரில் தமிழில் கணினி ஆய்வு செய்வோருக்கு கல்வி உதவித் தொகையோ அல்லது கணினித் தமிழ் ஆராய்ச்சி குழுவுக்கு பெயரோ அல்லது தமிழ்க் கணினி சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு துறைக்கு உமரின் பெயரையோ சூட்டினால், அது அவருக்கு செய்யும் கௌரவமாக இருக்கும்.

கோவையில் ஜீன் 23 முதல் தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடைபெறவுள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் உமர் தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க செய்ய முத்தமிழறிர் ஆகிய நீங்கள் ஆணை பிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இணையக்கடலில் தமிழை மிகச் சுலபமாக பயணம் செய்ய உதவியவர்களில் முன்னணியில் இருந்த உமர் தம்பிக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகாரம் தர வேண்டும் என்பதே இன்று இணையத் தமிழர்களின் விலை மதிக்க முடியாத விருப்பமாக உள்ளது.

அப்படி ஓர் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றால், பெருமையடையப் போவது உமர் தம்பியல்ல... இணையத் தமிழே! இச்சாதனைக்கு வழிவகுத்திடுமாறு மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேற்கண்டவாறு தமுமுக தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி : தமுமுக

அரசுக்கு முதுகெலும்பு இல்லை-ஜுனியர் விகடனில் தமுமுக தலைவர் அளித்த பேட்டி

உயர்நீதிமன்றம் நோக்கி கோரிக்கை பேரணி தொடர்பாக தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஜுனியர் விகடனில் அளித்த பேட்டி.


நன்றி : தமுமுக

கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை மெட்ரோ ரயில்: 3 ஆண்டுகளில் நிறைவேற்ற திட்டம்

''வரும் 2013ம் ஆண்டிற்குள் கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நிறைவேறும்,'' என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.


வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறிவரும் சென்னை மாநகரின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பெருகிக் கொண்டே வருகிறது. எனவே, ரயில்பாதை போக்குவரத்து திட்டம் ஒன்றின் தேவையை உணர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அந்த வகையில், மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டு வழித் தடங்கள் அமைக்கப்படுகிறது. முதல் வழித்தடத்தில் வண்ணாரப் பேட்டையிலிருந்து, விமான நிலையம் வரை 23.1 கி.மீ., தூரத்திற்கும், இரண்டாம் வழித் தடத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 22 கி.மீ., தூரத் திற்கும் ரயில் பாதை அமைக்கப்படுகிறது.


முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டையிலிருந்து சைதாப் பேட்டை வரை 14.3 கி.மீ., தூரம் சுரங்கப் பாதையாகவும், மீதமுள்ள பகுதி உயர்த்தப் பட்ட பாதையாகவும் இருக்கும். இரண்டாவது வழித்தடத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணாநகர் இரண்டாவது நிழற் சாலை வரை 9.7 கி.மீ., தூரம் சுரங்கப்பாதையாகவும், மீதமுள்ள பகுதி உயர்த்தப்பட்ட பகுதியாகவும் அமைக்கப்படவுள்ளன.


இந்த திட்டத்திற்கான அடிப் படை செலவுத்தொகை 14 ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப் பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவில் 41 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் கூட்டாகப் பகிர்ந்து கொள்கிறது.
மீதி செலவுத் தொகை, ஜப்பானின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப் பிடம் இருந்து கடனாகப் பெறப்படும். ஜப்பானின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப்பு, இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்தது. அதற்கான ஒப்பந்தம் டோக்கியோ நகரில் கையெழுத்தானது.


சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கான பொது ஆலோசகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஈஜிஸ் ரயில் என்ற நிறுவனத்தின் தலைமையில் ஐந்து நிறுவனங் களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பு, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பொது ஆலோசர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில், உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.


கூட்டம் முடிந்த பின், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: நடப்பு ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 2,000 கோடி ரூபாய் செலவிடப் படுகிறது. மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு வழித்தடங் களில் அமைக்கப்படுகிறது. இத் திட்டப் பணிகள் நடக்கும் போது வெளியூர்களிலிருந்து வரும் விரைவுப் பஸ்கள் சென்னை மாநகருக்குள் மாற்றுப்பாதை மூலமாக இயக்கப்படும். இப்பணிகளை முடித்துக் கொடுப்பதற்கு மூன்று ஒப்பந்தக் காரர்களிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது. இன்னொரு ஒப்பந்தக் காரரிடமும் பணிகள் கொடுக்கப் படவுள்ளது.


மெட்ரோ ரயில் செல்லும் தண்டவாளம் அகலமாகவும், குறுகியதாகவும் இருக்காது. இரண்டுக்கும் இடைப்பட்ட அகலத்தில் நிலையானதாக தண்டவாளம் அமைக்கப்படும். வரும் 2015ம் ஆண்டிற்குள் கோயம்பேடு முதல் பரங்கி மலை வரை முதல்கட்டப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அதிநவீன தொழில்நுட்பத்துடன் பணிகள் விரைவாக நடக்கும் போது, வரும் 2013ம் ஆண்டிற் குள் இத்திட்டம் நிறைவுபெறும். தனியாரிடமிருந்து ஏழு எக்டேர் நிலப்பரப்பு ஆர்ஜிதம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆர் ஜிதம் செய்யப்படும் நில உரிமை யாளர்களுக்கு மார்க்கெட் மதிப் புடன் இழப்பீடு வழங்கப்படும். வாகனங்கள் பார்க்கிங் வசதியும் செய்து கொடுக்கப்படும். கோயம் பேட்டில் ரயில் பெட்டிகள் நிறுத்துவதற்கு பணிமனையும் அமைக்கப்படும். இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார். நிர்வாக இயக்குனர் சோமநாதன் உடனிருந்தார்.

வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி: வாலிபர் கைது

பிரபல நிறுவனம் ஒன்றிலும், திருவேற்காடு நகராட்சியிலும் வேலை வாங்கித் தருவதாக கூறி, 20 பேரிடம் நான்கு லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


வேலூர் ஆணையபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் மோகன் (எ) ராபர்ட் (26). இவர், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், வேலப்பன் சாவடியில் உள்ள டி.வி.எஸ்., நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட்டாக பணிபுரிந்து வந்தார். அப்போது, பிரபல, நிறுவனத்தில் துணை கான்ட் ராக்ட் எடுத்து பணிபுரியும் ஆனந்தனுடன் மோகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆனந்தனுக்கு கீழ் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஆரம்பத்தில் ஆனந்தனுக்கு சில கூலியாட்களை மோகன் அனுப்பி வந்தார். நாளடைவில் வேலைக்கு அனுப்பும் தொழிலாளர் களிடம், மோகன் பணம் வாங்கிக் கொண்டு வேலையில் சேர்த்துவிட்டார்.


இதையறிந்த, நிறுவனம், அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டது. இதனால், அவர் வேலையில்லாமல் சுற்றி திரிந்தார். மோகனின் மாமா முனுசாமி, ராணுவத்தில் பிளம்பராக பணிபுரிந்து வருகிறார். அவரிடம், 'டி.வி.எஸ்., நிறுவனம் மற்றும் திருவேற்காடு நகராட்சியில் வேலைக்கு பலர் தேவைப் படுகின்றனர். யாராவது தெரிந்தால் கூறுங்கள்' என்று மோகன் கூறினார். இது உண்மையென நம்பிய மோகனின் மாமா முனுசாமி, ஆவடியில் சமூக தொண்டு செய்து வரும் ஏகவள்ளியிடம் மோகனை அறிமுகப்படுத்தினார். 'திருவேற்காடு நகராட்சியில் துப்புரவு பணிகளுக்கு பெண்களும், டி.வி.எஸ்., நிறுவனத்திற்கு படித்த பட்டதாரிகளும் தேவைப் படுகின்றனர்,' என ஏகவள்ளியிடம் மோகன் ஆசை வார்த்தை கூறினார். இதில், மயங்கிய ஏகவள்ளி தனக்கு தெரிந்த ஆவடியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 20 பேரை மோகனிடம் அனுப்பினார். அவர்கள் ஒவ்வொருவரிடமும், ஐந்தாயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை மோகன் பெற்றுக் கொண் டார்.


பணம் கொடுத்ததற்கு அத்தாட்சியாக, டி.வி.எஸ்., நிறுவனம் மற்றும் திருவேற்காடு நகராட்சி பெயர் அச்சிட்ட உத்தரவாத சான்று களையும் கொடுத்துள்ளார். மேலும், புகைப்படத் துடன் கூடிய அடை யாள அட்டையையும் மோகன் கொடுத்து அசத்தியுள்ளார். இதனால், வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் நம் பிக்கையாக இருந்தனர். பல நாட்களாகியும், அந்நிறுவனத்திலிருந்து வேலைக்கான அழைப்பு எதுவும் வரவில்லை. இதில், சந்தேகமடைந்து மோகனிடம் விசாரித்தனர். 'ஐந்து அல்லது ஆறு பேரை கூட்டாக அழைத்து வாருங் கள். அப்போதுதான் அந் நிறுவனத்தில் வேலைக்கு எடுப்பார்கள்' என்று மோகன் வற்புறுத்தினார். ஆட்களை மொத்தமாக அழைத்து வர முடியாத நிலையில், பணம் கொடுத் தவர்கள் தவித்தனர். இதற் கிடையே, வீட்டிலிருந்து மோகன் மாயமாகிவிட்டார்.


இது குறித்து, ஆவடி சத்தியவாணிமுத்து நகரை சேர்ந்த லோகேஷ், சுப்பிரமணி உள்ளிட்ட பலர், புறநகர் கமிஷனர் ஜாங்கிட் டிடம் புகார் அளித்தனர். கமிஷனர் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் தெய்வேந் திரன் தலைமையில் தனிப் படை அமைத்து, மோகனை தேடி வந்தனர். வேலப்பன்சாவடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண் டிருந்த மோகனை, தனிப் படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், வேலை வாங்கித் தருவதாக 20 பேரிடம் நான்கு லட்சம் ரூபாய் வரை மோகன் ஏமாற்றியதை ஒப்புக் கொண்டான். கைதான மோகனிடமிருந்து, பிரபல நிறுவனம் மற்றும் திருவேற்காடு நகராட்சியின் போலி ஆவணங் கள் பறிமுதல் செய்யப்பட்டன. மோகனை போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர். சிறப்பாக புலன்விசாரணை செய்து, குற்றவாளியை கைது செய்த போலீசாரை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் பாராட்டினார்.

அரவாணிகளுக்கு ரேஷன்கார்டு

'தமிழகத்தில் 991 அரவாணிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது' என அமைச்சர் வேலு தெரிவித்தார். சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர்கள் அளித்த பதிலுரை: செங்குட்டுவன் - தி.மு.க.,: கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு புதிய ரேஷன்கார்டுகள் வழங்க அரசு ஆவன செய்யுமா?


அமைச்சர் வேலு: கணவனால் கைவிடப்பட்டவர்கள் தங்களது கணவர் வசிக்கும் முகவரியை தெரிவித்தால், அந்த ரேஷன்கார்டிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டு, தனி ரேஷன்கார்டு வழங்கப்படும். விவகாரத்து பெற்றவர்கள் கோர்ட் ஆணையை கொடுத்தால் அதன்படி, ரேஷன்கார்டு வழங்கப்படுகிறது.


ராஜேந்திரன் - தி.மு.க.,: தமிழகத்தில் எத்தனை அரவாணிகளுக்கு ரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது?


வேலு: தமிழகத்தில் 991 அரவாணிகளுக்கு ரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது. 15 பேருக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது. ஒன்பது பேருக்கு பரிசீலனையில் உள்ளது.

ராஜேந்திரன்: கலப்புத் திருமணம் செய்தவர்கள், காதல் திருமணம் செய்தவர்களுக்கு எந்த அடிப்படையில் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

வேலு: கலப்புத் திருமணம், மதம் மாறி திருமணம் செய்தவர்கள், காதல் திருமணம் செய்தவர்களில் ஆண்கள் 21 வயதும், பெண்கள் 18 வயதும் நிறைவு செய்திருக்க வேண்டும். இவர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் கேட்டு, பெயர் நீக்கம் செய்ய முடியாது. எனவே, இவர்களுக்கு பெயர் நீக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

லிபியாவில் விமானம் வெடித்து சிதறி 103 பேர் பலி! எட்டு வயது சிறுவன் மட்டும் தப்பினான்

தென் ஆப்ரிக்காவிலிருந்து லிபியா நாட்டுக்கு சென்ற விமானம் தரையிறங்கும் போது வெடித்து சிதறியதில் 103 பேர் பலியாயினர். எட்டு வயது சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.


தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரிலிருந்து அபிரிகுயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ-330 ரக விமானம், 93 பயணிகள் மற்றும் 11 ஊழியர்களுடன் லிபியாவின் டிரிபோலி நகருக்குச் சென்றது. டிரிபோலியில் இந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதை அருகே வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 61 பேர் பலியாயினர். இதுதவிர ஆப்ரிக்கா, லிபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 42 பேர் இறந்தனர். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான் என, டிரிபோலி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.


விபத்து தொடர்பாக லிபியா போக்குவரத்து அமைச்சர் முகமது அலி ஜிடன் கூறுகையில், ''விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், இந்த விபத்துக்கு பயங்கரவாதிகள் யாரும் காரணமல்ல. ''விபத்தில் உயிர் தப்பிய சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இருந்தாலும், அவனின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை,'' என்றார்.


லிபியாவை சேர்ந்த அபிரிகுயா ஏர்லைன்ஸ் நிறுவனம் பாரிசில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்திடம் கடந்த 2007ம் ஆண்டு ஐந்து விமானங்களை குத்தகைக்கு எடுத்திருந்தது. அதில் ஒன்று தான் நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வரை 96 சடலங்கள் மீட்கப்பட்டன. விமானத்தின் கருப்பு பெட்டி தேடப்பட்டு வருகிறது. கருப்பு பெட்டி கிடைத்தால் விபத்துக்கான காரணம் தெரியவரும். விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததாகவும், சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.

நாக்கு நுனியில் நாடுகளின் பெயர் : அசத்தும் சிறுவன்

உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளை காண்பித்து, அவற்றின் பெயர்களையும் உச்சரிப்பு மாறாமல் கடகடவென சொல்கிறான் ஆறுவயது மாணவன் எஸ்.ஏ. முகமது ஆசிக். மதுரை நாய்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யு.கே.ஜி., முடித்த இம்மாணவன், இந்தாண்டு தான் ஒன்றாம் வகுப்பு சேர்கிறான். எந்தநாடு எங்கிருக்கிறது எனக் கேட்டாலும் வரைபடத்தில் அழகாய் சுட்டிகாட்டுகிறான். அதே போல வரை
படத்தைப் பார்க்காமலேயே இந்தியா அருகிலுள்ள நாடுகளைக் கேட்டாலும் சொல்கிறான். பள்ளி முதல்வர் நிர்மலா கூறுகையில், ''கடந்தாண்டு இம்மாணவர் 194 உலக நாடுகளின் பெயர்களை சரியாக சொன்னான். வரைபடத்தில் நாடுகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது பெயர் இல்லாமலேயே, எந்த நாடு
எங்கிருக்கிறது என சரியாக சொல்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

பச்சிளம் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் ஆபத்து

மதுரை அரசு மருத்துவமனையில், நிதியுதவி பெற பச்சிளம் குழந்தை களுடன் பல மணி நேரம் பெண்கள் காத்து கிடப்பதால், குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் 'ஜனனி சுரஷ்கா யோஜனா' திட்டத்தின்கீழ், இங்கு குழந்தை பெற்றவர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ், 12,000 ரூபாய் ஆண்டுவருமானம் உள்ள, நகரில் வசிப்போருக்கு 600 ரூபாயும், புறநகரில் வசிப்போருக்கு 700 ரூபாயும் வழங்கப்படுகிறது.


கடந்த பிப்ரவரியில் நிதி ஒதுக்கப்படாததால், 400 பேர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தினமலர் மதுரை இணைப்பில் மார்ச் 2ல் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து உடனுக்குடன் நிதி வழங்கப்படுகிறது. இப்
பணம் பெற, பச்சிளம் குழந்தைகளுடன் பெண்கள் பல மணி நேரம் டீன் அறை அருகே, 100ம் நம்பர் அறை முன், காலை முதல் மதியம் வரை காத்து கிடக்கின்றனர். இவ்வழியே பெரும்பாலான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு எளிதாக தொற்றுநோய் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதுஎன்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்.


பெண்களிடம் கேட்டபோது, 'குழந்தையுடன் வந்தால்தான் பணம் தருகிறார்கள். குழந்தையுடன் வராவிட்டால், 'நீதான் பிள்ளையை பெற்றாயா என்பதற்கு என்ன ஆதாரம்' என்று கேட்கின்றனர். இதனால் வேறுவழியில்லாமல் குழந்தையுடன் வரவேண்டியுள்ளது' என்றனர். மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது : குழந்தையுடன் வரவேண்டிய அவசியமும் இல்லை. 'மாலை 3 மணிக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்' என்று அறிவிப்பு ஒட்டியிருந்தாலும், காலையிலேயே வந்து காத்து கிடக்கின்றனர். அவர் களை காக்க வைக்கக்கூடாது என்பதற்காக, ஒருமணி நேரத்திற்குள் பணத்தை கொடுத்து அனுப்பி வைக்கிறோம், என்றனர்.

நாளை மறுதினம் பிளஸ்டூ தேர்வு முடிவுகள்-

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வெளியாகின்றன.அன்றைய தினம் காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை பிளஸ்-2 தேர்வு நடந்தன. இந்தத் தேர்வை 7.5 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.தேர்வு முடிந்ததும் 44 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றன.
அதன் பின்னர் மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டன. பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்றது.
கடந்த ஆண்டு மே 14ம் தேதி தான் பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியானது. அதேதேதியில்இந்தஆண்டும்வெளியாகிறதுhttp://www.adiraidailynews.blogspot.com/

இங்கிலாந்து பிரதமராகிறார் டேவிட் கேமரூன்

பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரெளன் நேற்றிரவு தனது பதவியை ராஜிநாமா செய்தார்.கடந்த 6ம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்தது.இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் எதிர்க் கட்சியான கன்சர்வேடிங் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது.

கார்டன் பிரவுன் தலைமையிலான தொழிலாளர் கட்சி இரண்டாவது இடத்தையும், லிபரல் ஜனநாயகக் கட்சி 3வது இடத்தையும் பிடித்துள்ளன.இதையடுத்து லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைக்க கார்டன் பிரவுன் முயன்றார்.

ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.இதைத் தொடர்ந்து கார்டன் பிரவுன் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அரசியலில் இருந்தே ஓய்வு பெறப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.இதையடுத்து கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் ஜனநாயகக் கட்சியும் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கின்றன.கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டேவிட் கேமரூன் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
இதன் மூலம் அக்கட்சியின் 13 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது.கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் ஜனநாயகக் கட்சியும் இணைந்து ஆட்சியை அமைக்கின்றன. ஆனால், இந்தக் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியபோது முக்கிய அமைச்சர் பதவிகளுக்கு இவர்களிடையே கடும் மோதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
http://WWW.ADIRAIDAILYNEWS.BLOGSPOT.COM

திருவாரூரில் 99 பள்ளிகளுக்கு கட்டண நிர்ணய உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் 99 பள்ளிகளுக்கு கட்டண நிர்ணய உத்தரவு வழங்கப்பட்டது.
நர்சரி முதல் பிளஸ் 2 வரையில் சுயநிதி அடிப்படையில் இயங்கும் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் உயர்நிலைக்குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழு பரிந்துரையின் படி கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் நர்சரி, மெட்ரிக் மற்றும் உயர், மேல்நிலைப்பள்ளிகள் என 99 பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்யப்பட்ட உத்தரவு வழங்கப்பட்டது. இந்த உத்தரவை முதன்மைக்கல்வி அலுவலர் கலைவாணி பள்ளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது: விண்ணப்பித்த 99 பள்ளிகளுக்கு கட்டண நிர்ணய ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பள்ளிகள் பெற்றோர்களிடம் கட்டணத்தை வசூலிக்கவேண்டும். இதை பள்ளிகளில் விளம்பரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஓரிரு நாளில் இணையதளத்திலும் ஒவ்வொரு பள்ளிகளுக்கான கட்டண விபரம் வெளியிடப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண நிர்ணயித்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதாக கருதினால் 15 நாட்களுக்குள் கட்டண குழுவிடம் முறையீடு செய்து கொள்ளலாம். திருவாரூர் மாவட்டத்தில் மீதமுள்ள பள்ளிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்றார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) அருள்மணி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சாரதா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பஞ்சநாதன், ராஜமாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

பேராவூரணியில் போலீசார் தாக்கியதாக கண்டித்து வர்த்தகர்கள் போராட்டம் நடத்த முடிவு

பேராவூரணியில் வர்த்தகர்கள், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கண்டித்து காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வர்த்தகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.பேராவூரணி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெஞ்சமின், ஏட்டுக்கள் பத்மநாதன், மாரிமுத்து ஆகிய மூவரும் கடந்த 10ம்தேதி இரவு 11 மணியளவில் அரசு ஆஸ்பத்திரி முன்பு டீக்கடை வைத்திருந்த பிரபு என்பவரை தாக்கியதோடு, அவரது ஊழியர் ஷேக் என்பவரையும் கடுமையாக தாக்கி கடையிலுள்ள டியூப்லைட் மற்றும் கண்ணாடி ஜாடியை உடைத்தனராம்.இதேபோல மெயின் ரோட்டில் உள்ள ஓட்டல் ஊழியர் சுப்பையன் என்பவரை தாக்கியதில் அவரது வலதுகை மணிக்கட்டு உடைந்தது. இச்சம்பவத்தின் போது போலீசார் மூவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.இரவு 11 மணிக்குமேல் கடைகளை மூட வேண்டுமென்ற எந்தவித முன் அறிவிப்புமின்றி போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாக கண்டித்து வர்த்தகர் கழக அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.சங்கத் தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் அசோக்குமார், சங்க முன்னாள் தலைவர்கள் சுப்பிரமணியன், லத்தீப், கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர் கந்தப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வர்த்தகர்களை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் கடையடைப்பு, சாலை மறியல் போராட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. சங்க துணைத் தலைவர் தீபம் நல்லசாமி, பொருளாளர் அப்துல்லா, சுப்பிரமணியன், ராஜரத்தினம், தேவதாஸ் மற்றும் ஏராளமான வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.இதுபற்றி அறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., நாராயணசாமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுப்பையன், சேட்டு (எ) ஷேக் அலாவுதீன், பிரபு ஆகியோரை பார்வையிட்டார். பின்னர் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுபற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என கூறியதன் பேரில் வர்த்தகர்கள் தற்காலிகமாக போராட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.

சீர்காழியில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை : டி.ஆர்.ஓ. தகவல்

சீர்காழியில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டிஆர்ஓ., அண்ணாதுரை தெரிவித்தார்.
சீர்காழி டிஆர்ஓ., அண்ணாதுரை தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


மாதந்தோறும் 2வது சனிக்கிழமை உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் எரிவாயு முகவர்கள், எரிவாயு நிறுவனத்தினர் ஆகியோர் இணைந்து குறைகளை நிவர்த்தி செய்ய ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சீர்காழி பகுதியில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடின்றி வழங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் திருமுல்லைவாசல் காஸ் ஏஜன்சி கம்ப்யூட்டர் மென்பொருள் பழுதானதால் பதிவு செய்யப்பட்ட அனைத்து எண்களும் அழிந்து விட்டன. மீண்டும் மென்பொருள் சரி செய்யப்பட்டு பதிவு எண்களை கண்டறிந்து காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் சீர்காழியில் காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் சட்டவிரோதமாக வீடுகளுக்கு உபயயோகப்படுத்தும் காஸ் சிலிண்டர்களை கடைகள் மற்றும் ஓட்டல்களில் பயன்படுத்தக்கூடாது. மீறி கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார். தாசில்தார் பாலச்சந்திரன், துணை தாசில்தார் பொன்பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

பூந்தமல்லி இரட்டை கொலை வழக்கில் முக்கிய ரவுடி உட்பட நான்கு பேர் கைது

பூந்தமல்லி கோர்ட்டிற்கு வந்த போது பிரபல ரவுடி சின்னா மற்றும் அவரது வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்ற வாளியான பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மூவரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:


சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந் தவர் சின்னா(41). பிரபல ரவுடியான இவர், கடந்த மாதம் 30ம் தேதி வெடிகுண்டு வீசிய வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பூந்தமல்லி கோர்ட்டிற்கு வந்தார். மதிய உணவு அருந்துவதற்காக தனது வக்கீலுடன் குமணன்சாவடி சென்ற சின்னாவை, 20 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த தாக்குதலில் ஜூனியர் வக்கீல் பகவத் சிங்கும் இறந்தார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின்படி இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, கடந்த 6ம் தேதி கூலிப் படையைச் சேர்ந்த நான்கு பேரையும், 8ம் தேதி இருவரையும் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான ஆற்காடு சுரேஷ், சீசிங் ராஜா மற்றும் கூலிப்படையினர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர்.


கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவான ரவுடிகள் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஆற்காடு சுரேஷ், தனது கூட்டாளிகளுடன் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு விரைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கொலைக்கு பயன் படுத்திய டாடா சுமோ காரில் (டி.என்.01, கே.4147) வந்த ஆற்காடு சுரேஷ்(32), உதயகுமார்(23), குபேந்திரன்(23), ஜெயராமன்(24) ஆகிய நால்வரையும் குயின்ஸ்லாண்டு எதிரே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்த பட்டா கத்தி, அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீசிங் ராஜா உட்பட சிலரை மட்டுமே இன்னும் கைது செய்ய வேண்டும். அவர்களும் விரைவில் சிக்குவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

காரில் எடுத்து வந்த வங்கி பணம் ரூ.ஒரு கோடி 'லபக்': புதுச்சேரி டிராவல்ஸ் கார் டிரைவருக்கு போலீஸ் வலை

ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கியின், புதுச்சேரி கிளையில் இருந்து, சென்னையில் உள்ள வங்கியின் தலைமையகத்திற்கு கார் மூலம் எடுத்து வந்த ஒரு கோடி ரூபாயை நூதன முறையில் கொள்ளையடித்த டிராவல்ஸ் கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் என்ற வங்கியின் கிளை புதுச்சேரியில் உள்ளது. இங்கு, கடப்பாக்கத்தைச் சேர்ந்த முருகன் (32), புதுச்சேரி மணக்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பக்கிரி (52) ஆகியோர் பணிபுரிகின்றனர். இவர்கள் இருவரிடமும் வங்கிப் பணம் ஒரு கோடி ரூபாயை கொடுத்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் தலைமையகத்தில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப் பட்டது. அதன்படி, நேற்று காலை புதுச் சேரியில் உள்ள பாலா டிராவல்சில் ஒரு காரை வாடகைக்கு எடுத்தனர். வங்கி ஊழியர்கள் முருகனும், பக்கிரியும் ஒரு கோடி ரூபாயை ஒரு சூட் கேசில் வைத்து எடுத்துக் கொண்டு காரில் ஏறி சென்னை புறப்பட் டனர். காரை டிரைவர் முத்துக்குமார் என்பவர் ஓட்டி வந்தார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக கார் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.


பனையூர் போலீஸ் சோதனை சாவடி அருகே 'ஸ்பீட் பிரேக்' மீது கார் ஏறி இறங்கியதும் திடீரென இன்ஜின் 'ஆப்' ஆகிவிட்டது. காரை 'ஸ்டார்ட்' செய்ய டிரைவர் முத்துக் குமார் முயன்றார். ஆனால், கார் ஸ்டார்ட் ஆகவில்லை.
'கீழே இறங்கி தள்ளிவிடுங்கள். கார் ஸ்டார்ட் ஆகிவிடும்' என, காரில் அமர்ந்திருந்த வங்கி ஊழியர்கள் முருகன் மற்றும் பக்கிரியிடம் டிரைவர் முத்துக்குமார் கூறினார். இதைத் தொடர்ந்து, முருகன் மட்டும் இறங்கி காரை தள்ளினார். அப்படியும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. அப்போது, 'நீங்கள் இருவரும் ஒன்றுசேர தள்ளுங்கள்; அப்போது தான் கார் ஸ்டார்ட் ஆகும்' என்றார் முத்துக்குமார். இதையடுத்து, ஒரு கோடி ரூபாய் பணமுள்ள சூட்கேசை காரிலேயே வைத்துவிட்டு, முருகனுடன் சேர்ந்து காரை தள்ள, பக்கிரியும் இறங்கினார்.


இருவரும் சேர்ந்து காரை தள்ளியதும், கார், 'ஸ்டார்ட்' ஆகி, வேகமாக ஓடத் துவங் கியது. முருகனும், பக்கிரியும் காரை பின்தொடர்ந்து ஓடினர். ஆனால், கார் மின்னல் வேகத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்துடன் மாயமானது.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் முருகனும், பக்கிரியும் ஆட்டோ மூலம் காரை பின் தொடர்ந்தனர். நீண்ட தூரம் விரட்டிச் சென்றும், பணத்துடன் சென்ற கார் எங்கு போனது என கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினர். பின், பனையூர் போலீஸ் சோதனை சாவடியில், பணம் கொள்ளையடிக்கப்பட்ட தகவலை தெரிவித்தனர். இதையடுத்து, நீலாங்கரை உதவி கமிஷனர் முரளி தலைமையில், போலீஸ் தனிப்படை அமைக்கப் பட்டது. ஒரு கோடி ரூபாய் பணத் துடன் மாயமான காரின் எண், உடனடியாக ஒயர்லெஸ் மூலம் அனைத்து போலீஸ் ஸ்டேஷன் கள் மற்றும் செக்போஸ்ட்களுக்கு அறிவிக்கப்பட்டது. பல மணிநேரம் தீவிர தேடுதல் வேட்டைக்குபின், டிராவல்ஸ் கார் குறுகிய சந்துகளில் நுழைந்து, மாயமாகியது தெரியவந்தது. பணம் கொள்ளைபோனது குறித்து வங்கி ஊழியர்கள் முருகன், பக்கிரி ஆகியோர் புதுச்சேரியில் உள்ள வங்கி கிளைக்கு தகவல் கொடுத்தனர். நீலாங்கரை போலீசார் மாயமான டிரைவரை தேடி வருகின்றனர். டிரைவரை விரைவில் பிடித்து விடுவோம்:


இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: காலை 11.15 மணிக்கு அக்கரை செக்போஸ்ட் அருகில் தான் காருடன் பணம் கடத்தப்பட்டுள்ளது. அடுத்த 15 நிமிடங்களில் எங்களுக்கு தகவல் தரப்பட்டதால் போக்குவரத்து போலீசார் மூலம் அனைத்து பகுதிகளிலும் செக்போஸ்ட் அமைத்தோம்.


இதனால், டிரைவர் முத்துக்குமார் காரை வேறு எங்கும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து அவன், சக்திநகர் பகுதியில் வண்டியை நிறுத்திவிட்டு, அதிலிருந்த பணப்பெட்டியில் போடப் பட்டிருந்த சிறிய பூட்டை உடைத்து, 20 லட்சம் ரூபாயை மட்டும், வங்கி கேஷியர் விட்டுச் சென்ற சாப்பாடு வைக்கும் பையில் வைத்து எடுத்துச் சென்றுள்ளான். இதனால், அவன் வேறு எங்கும் செல்லமுடியாது. விரைவில் நாங்கள் பிடித்து விடுவோம். வங்கியில் இருந்து, பணப்பெட்டியை எடுத்து வருபவர்கள் புதுச்சேரி போலீசாரையாவது அழைத்து வந்திருக்கலாம். ஏற்கனவே, இதே டிரைவர் முத்துக் குமார் இவர்களுடன் சென்னைக்கு பணம் கொண்டு வந்துள்ள தகவலும் கிடைத்துள்ளது. இன்று கொண்டு வரும் போது, ஏற்கனவே கல்பாக்கத்தில் வாகனத்தை டீ சாப்பிட நிறுத்த முயற்சித்து முடியாமல் போகவே, வாகனம் பழுதானது போன்று பாசாங்கு செய்து கடத்தியுள்ளான். வங்கிகளில் பணம் கொண்டுவரும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து வலியுறுத்தப் படும். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.


ஒரு கோடி ரூபாய் கார் கண்டுபிடிப்பு : ஒரு கோடி ரூபாயுடன் மாயமான டிராவல்ஸ் கார், துரைப்பாக்கம் காந்திநகரில் அனாதையாகக் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ஒரு கோடி ரூபாய் பணம் இருந்த சூட்கேஸ் சிறிய பூட்டு பூட்டியதால் எளிதாக உடைத்து, அதிலிருந்து 20 லட்சம் ரூபாய் மட்டும் கார் டிரைவர் முத்துக்குமார் திருடிக்கொண்டு தலைமறைவானார். மீதி பணம் அப்படியே இருந்ததால் போலீசார் நிம்மதியடைந்தனர்.
அனாதையாகக் கிடந்த காரை மோப்பம் பிடித்த 'தண்டர்' நாய், பிரேக் டவுனான இடம் வரை சென்று நின்றுவிட்டது. கடந்த முறை பணத்தை காரில் சென்னைக்கு எடுத்து வந்தபோது நோட்டமிட்ட முத்துக்குமார், இம்முறை திட்டமிட்டு பணத்தை கொள்ளை அடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.