நன்றாக தூங்கினால் நூறாண்டு வாழலாம்

Top  global news update

பீஜிங்:தினமும் பத்து மணி நேரம் நன்றாக தூங்கினால், நூறாண்டு காலம் வாழ முடியும், என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சீனாவில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 15 ஆயிரத்து 638 முதியவர் களிடம், ஒரு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட்டுமே இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 90 முதல் 99 வயது உடைய, 3,927 பேரும், நூறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2,794 பேரிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நூறு வயதில் வாழ்ந்து வரும் முதியவர்களிடம் கேட்டதில் அவர் கள் தூக்கத்துக்கு குறையே வைப்பதில்லை என, தெரிந்தது. தினமும் 10 மணி நேரம் நன்றாக தூங்குவதாக இவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக ஆண்கள் தான், கவலையில்லாமல் தூங்கி அதிக அளவில் 'செஞ்சுரி' அடித்துள்ளதும், இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.நன்றாக தூங்குவதால், உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன, உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன, நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது என, இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

0 comments: