கசாப்பிற்கு விதித்த தண்டனையால் இந்தியா - பாக்., பேச்சில் பாதிப்பு

Top  global news update

''மும்பை தாக்குதல் வழக்கில் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால், இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த பாதிப்பும் ஏற்படாது,'' என, பாக்., வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி கூறியுள்ளார்.


அவர் கூறியதாவது:கசாப்பிற்கு எதிராக இந்திய கோர்ட் அளித்த தீர்ப்பு விவரங்களை பாகிஸ்தான் சட்ட நிபுணர்கள் பரிசீலித்து வருகின்றனர். அதன்பின்னர், தீர்ப்பு குறித்து கருத்து வெளியிடப்படும். கசாப்பிற்கு இந்திய கோர்ட் மரண தண்டனை அளித்துள்ளதால், இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.எந்த தேதியில் இரு நாட்டு அமைச்சர்களும் சந்தித்துப் பேசுவது என்பது விரைவில் முடிவு செய்யப்படும். மும்பை தாக்குதல் ஒரு துயர சம்பவம். அது போன்ற தாக்குதல் நிகழ்ந்திருக்கவே கூடாது.இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 60 ஆண்டுகளாக அவநம்பிக்கை நிலவுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம், என்றார்.

0 comments: