100 சதம் வாக்காளர் சரிபார்ப்பு பணி: மக்கள் ஒத்துழைக்க கலெக்டர் கோரிக்கை

'அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதுபற்றி அரியலூர் கலெக்டர் ஆபிரகாம் விடுத்த அறிக்கை: அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் சரிபார்க்கும் பணி முடிவு பெற்று, அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம் ஆகியவற்றுக்கான படிவங்களுடன், தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள 347 களப்பணியாளர்கள், அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும், கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் சென்று செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.


இப்பணியை வருகிற 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, சென்னையிலுள்ள தலைமை தேர்தல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் ஆகியவற்றுக்கு தொடர்புடைய வாக்காளர்கள், தங்களது பிறந்த தேதிக்கான ஆதாரம், ஃபோட்டோ இரண்டு காப்பிகள், இருப்பிட முகவரிக்கான ஆதாரம் ஆகியவற்றை களப்பணியாளர்களிடம் அளித்தும், உரிய படிவங்களில் கையெழுத்து போட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: