ராமநாதபுரம்: உண்பதையே முழுநேர தொழிலாக செய்து வரும் முள் அட்டைகள், மற்ற கடல்வாழ் உயிரினங்களிலிருந்து வேறு படுகின்றன. மன்னார் வளைகுடாவில் உள்ள எண்ணற்ற உயிரினங்களில் அரிய வகையாக கருதப்படுபவை அட்டைகள். முத்தோலிகள் வகுப்பை சேர்ந்த இவற்றை 'பீச் டீ மெர்' என்றும் மலேசியாவில் 'ட்ரபாங்' என்றும் அழைக்கின்றனர். சீனாவின் சுவைமிகு உணவான இவற்றை , இந்தியாவில் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவில் நூல், முள், கருப்பு, வெள்ளை, ராஜ அட்டைகள் காணப்படுகின்றன. முள் அட்டைகளுக்கு விசேஷ தன்மைகள் உண்டு.
இவை ஆழம் குறைந்த கடற்பகுதி, உப்பங்கழிகளில் காணப்படுகின்றன. இடம் பெயர 'டியூப் பீட்' எனப்படும் குழாய் கால்களை பயன்படுத்துகின்றன. இவற்றின் வயிற்றை சுற்றிலும் 20 சிறிய உணர் நீட்சி உறுப்புகள் உள்ளன. உணவை தேடவும், உண்ணவும் இவ்வுறுப்புகள் அவற்றுக்கு பயன்படுகிறது. இவற்றின் ஆசன வாயானது சாம்பல், வெள்ளை, கருப்பு என பல்வேறு நிறங்களில் இருக்கும். பல்வேறு வகையான உணவை உண்பதால், அனைத்துண்ணிகள் எனவும் அழைக்கப்படுகிறது. தேவையான அளவு மணல் மற்றும் கரிமப்பொருட்களை இவை தாமாகவே சேகரித்துக்கொள்ளும். இதன் சுருள் குடலானது , தமக்கு தேவையான உணவை மணலில் இருந்து பிரித்து சீரணிக்கும் சக்தியை தருகிறது. திண்றுகொண்டிருப்பது இவற்றின் முழு நேர வேலையாகும். செரிமானமாகாத உணவை பின்புற தூவாரம் வழியாக உடனடியாக வெளியேற்றுகின்றன. ஆண், பெண் என இவை பிரிந்து கிடப்பதால், இவற்றை வித்தியாசப்படுத்துவது சிரமமாகும்.
இவற்றின் இனப்பெருக்கமானது மார்ச்-ஏப்., செப்.,-அக்., என இருபிரிவாக நடக்கிறது. பாலின முறையிலும், இல்லாமலும் இனப்பெருக்கம் செய்வது இவற்றின் தனிச்சிறப்பாகும். மன்னார் வளைகுடாவில் குறைந்து வரும் உயிரினங்களில் இவை முக்கிய இடம் பிடிப்பதால், இவற்றை சேகரிப்பதை தவிர்ப்பது அவசியமானதாகும்.
0 comments:
Post a Comment