தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பாண்டியன் என்ற மாணவன் 1187 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். 1186 மார்க்குகள் பெற்று 3 மாணவர்கள் 2 வது இடத்தை பிடித்துள்ளனர். இதில் சந்தியா ( விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி பண்டமங்கலம் நாமக்கல் ) காருண்யா ( எஸ்.வி., மந்திர் மேல்நிலைப்பள்ளி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி) , தினேஷ் ( எஸ்.வி., மந்திர் மேல்நிலைப்பள்ளி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி) ஆகிய 3 பேர் 2 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
3 வது இடத்தை பிடித்தவர்கள் யார் ? யார் ? :
3 வது இடத்தை 5 மாணவ, மாணவிகள் 3 வது இடத்தை பிடித்துள்ளனர் . பிரவக்சனா ( சி.வி.பி.,ஏ.சி.ஆர்.ஆர்.,மெட்., பள்ளி ) , மனோசித்ரா ( குறிஞ்சி மெட்., மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) அபிநயா( பி.வி.பி.,மெட்ரிக்பள்ளி திண்டல் ஈரோடு ) , செங்கல்பட்டு ஸ்ரீவித்யா ( பிரின்ஸ் மெட்., மேல் நிலைப்பள்ளி மடிப்பாக்கம் செங்கல்பட்டு ) , அரியலூர் அண்டோ நசீரின் ( அரசு நகர் மேல்நிலைப்பள்ளி மெட்., மேல்நிலைப்பள்ளி அரியலூர் ) ஆகியோர் 1185 மார்க்குகள் பெற்று 5 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. 6 ,லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 85 .2 சத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முடிவுகள் வெளியானதும் மாணவ, மாணவிகள் தத்தம் பள்ளிகளில் குவிந்திருந்தனர்.
மணப்பாடம் செய்வது தனக்கு கைவந்த கலை முதலிடம் பிடித்த மாணவன் பளீச் பேட்டி : பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாணவன் பாண்டியனின் தந்தை ராஜூ., இவர் நெடுஞ்சாலைத் துறையில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். தாயார் சாந்தி அரசு பள்ளியில் ஆசிரியை. அண்ணா பல்ககலைக்கழகத்தில் இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார் சகோதரர் ரவி சங்கர். மாணவன் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது : எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி நாட்டுக்காக பணி புரிய வேண்டும் என்பதை லட்சியம். இந்த வெற்றி தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். தன்னை எப்போதும் பெற்றோர்கள் படி என்று நிர்பந்திப்பதில்லை , படிப்பு மட்டும் இல்லாமல் பொழுதுபோக்குக்கும் திட்டமிட்டு நேரம் ஒதுக்குவேன். மணப்பாடம் செய்வது தனக்கு கைவந்த கலை என்றும் அப்படி படித்தது தேர்வில் மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார். பாண்டியனின் பாடவாரியான மதிப்பெண்கள் பின்வருமாறு : தமிழ் : 194, ஆங்கிலம் : 193, கணிதம் : 200, இயற்பியல் : 200, வேதியியல் : 200, கம்ப்யூட்டர் சயின்ஸ் : 200.
இதில் மாணவர்கள் , மாணவிகள் . பள்ளிகள் மூலமும், இணையதளம் மூலம் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை கொண்ட தினமலர் நாளிதழ் தேர்தல் முடிவுகளை தினமலர் இணையதளம் கல்விமலர்.காம் மூலம் உடனடியாக வெளியிட்டுள்ளது. தினமலர் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கு ரிசல்ட் வெளியான உடன் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ் ., மற்றும் இ மெயில் மூலமும் பறந்தன. கடந்த தேர்வை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகும்.
பாட வாரியாக முதலிடம் பிடித்த மாணவ- மாணவிகள் : பிளஸ் 2 தேர்வில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி.ஜி. மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா, தமிழில் 197 மதி்பபெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். திருப்பத்தூர் மேட்டுக்குளம் வேலூர் சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் எம்.வெங்கடேஷ் ஆங்கிலத்தில் 196 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன், இயற்பியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார்.
தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன், வேதியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். கிருஷ்ணகிரி, உத்தங்கரை எஸ்.வி.மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.தினேஷ், உயிரியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். தக்கலை, மடத்துவிளை செயின்ட் லாரன்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி வி.ஜெனிஷா, தாவர இயல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
குழித்துறை, மார்த்தாண்டம் கிறிஸ்துவ ராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனிதா எட்வின், விலங்கியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார். தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன், கணிதத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். கரூர் எம்.பி.எல்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.கார்த்திகா, வரலாற்று பாடத்தில் 199 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார்.
பொருளாதாரப் பாடத்தில் பாண்டிச்சேரி குளூனி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்வப்னா சாரா குருவில்லா, 200 மதிப்பெற் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். வர்த்தகம் பாட்த்தில் பெரம்பலூர் டி.எஸ்.மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.ஜெயலட்சுமி, 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். சிறப்பு தமிழ்ப் பாடத்தில் திருவாரூர் ஸ்ரீ ஜி.ஆர்.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.கீர்த்தி பிரியா 191 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.
கணித பாடத்தில் 1762 பேர் 200க்கு 200 : கணித பாடத்தில் 1762 பேர் 200க்கும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணித பாடத்தில் 4060 பேர் 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த ஆண்டு கணிதப் பாடம் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சி: நேரடி ஒளிபரப்பு : உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சி, 'தினமலர்' இணையதளத்தில் இன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை முன்னிட்டு , 'தினமலர்' நாளிதழ் தங்கள் வாசகர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை வழங்கியது. இணையதளத்தில், இன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்தது. இதில், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, சென்னை செயின்ட் ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளி நிர்வாக இயக்குனர் கிஷோர் குமார், சியோன் பள்ளி நிறுவனங்களின் தாளாளர் விஜயன் ஆகியோர் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். மாணவர்கள் பலர் தங்களுடைய சந்தேகங்களை போன் மூலம் கேட்டு பயன்பெற்றனர்.
0 comments:
Post a Comment