தலைமறைவான இந்திய பெண் திரும்ப வந்தார்

ஐக்கிய அரபு எமிரேட்டின் அஜ்மான் பகுதியில், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல், 25 ஆண்டுகளாக தங்கியிருந்த இந்திய பெண் தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.பெங்களூரை சேர்ந்த பாத்திமா மன்சூர்கான் (60) என்ற பெண் கடந்த 85ம் ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்டிலுள்ள அஜ்மான் பகுதிக்கு வீட்டு வேலை செய்வதற்காக வந்தார். அங்கு எஜமானரின் தொல்லைக்கு பயந்து தலைமறைவாகி விட்டார். மாஸ்பவுத் என்ற இடத்தில், அக்பர் என்ற பாகிஸ்தானிய நபருடன் இவர் வசித்து வந்துள்ளார்.எந்தவித ஆவணங்களும் இல்லாமலிருந்த இவர், தாயகம் திரும்புவதற்காக இந்திய தூதரகம் உதவியுள்ளது. ஏர் இந்தியா இவருக்கு டிக்கெட் வழங்கியுள்ளது. இதையடுத்து பாத்திமா மும்பை புறப்பட்டு சென்றுள்ளார்.விரைவில் அவர் பெங்களூரூவிலுள்ள தனது குடும்பத்தினருடன் இணைய உள்ளார்.

0 comments: