பேஷன் டிசைனிங் கோடை கால பயிற்சி முகாம்: 10ம் தேதி துவக்கம்

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், வரும் 10ம் தேதியில் இருந்து, கோடை கால பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.


ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், இந்தியா முழுவதும், கோடை கால பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பேஷன் டிசைனிங் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், அத்துறையின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையிலும், பல்வேறு பயிற்சிகள், இப்பயிற்சி மையங்கள் மூலம் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டும் கோடை கால பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சி முகாம்களில் சிறப்பாக செயல்படுவோருக்கு, பிரபல ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். இதற்காக, பிரபல நிறுவனங்களால் வளாகத் தேர்வும் (கேம்பஸ் இன்டர்வியூ) நடத்தப்பட்டு, வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.


சென்னை கிண்டியில், வரும் 10ம் தேதி முதல், கோடை கால பயிற்சி முகாம் துவங்குகிறது. இந்த முகாமில், நகை வடிவமைப்பு, எம்ப்ராய்டரி, மெஹந்தி, க்ளாஸ் பெயின்டிங், பொம்மை செய்தல், பூ செய்தல் மற்றும் கணினி பயிற்சி, குழந்தைகள் ஆடைகள், சுடிதார் ஆடைகள், ஜாக்கெட் வடிவமைப்பு குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது. சிறு வியாபாரிகள், வீட்டிலிருந்து வியாபாரம் செய்வதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கார்மென்ட் மற்றும் பேஷன் வடிவமைப்பு பயிற்சி, கோரல் ஓவியம் மற்றும் போட்டோஷாப் குறித்த பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.தொடர்பு கொள்ள:044-2250 0121, 2250 1221.

0 comments: