நியூசிலாந்து அணிக்கு எதிரான "டுவென்டி-20' உலககோப்பை, சூப்பர்-8 சுற்றுப் போட்டியில், அபாரமாக ஆடிய தென் ஆப்ரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசில் மூன்றாவது "டுவென்டி-20' உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த சூப்பர்-8 சுற்றுப் போட்டியில், குரூப் "இ' பிரிவில் இடம் பெற்ற தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த தென் ஆப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
ஸ்மித் ஏமாற்றம்: தென் ஆப்ரிக்கா அணிக்கு காலிஸ், ஸ்மித் துவக்கம் தந்தனர். வெறும் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சோதி வேகத்தில் வீழ்ந்தார் ஸ்மித். 2 சிக்சர்களை விளாசிய காலிஸ், 31 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அடுத்து வந்த கிப்ஸ், தனது பங்கிற்கு 30 ரன்கள் (2 சிக்சர், ஒரு பவுண்டரி) எடுத்தார்.
சூப்பர் ஜோடி: பின்னர் டிவிலியர்ஸ், ஆல்பி மார்கல் இணைந்தனர். இந்த ஜோடியின் அபார ஆட்டம், தென் ஆப்ரிக்காவின் ரன் குவிப்புக்கு உதவியது. இந்த ஜோடியை அவுட்டாக்க முடியாமல் திணறியது நியூசிலாந்து. சோதி வீசிய ஆட்டத்தின் 19 வது ஓவரில் 3 சிக்சர்களை விளாசினார் ஆல்பி மார்கல். இவர் 40 ரன்களுக்கு (5 சிக்சர்) அவுட்டானார். டிவிலியர்ஸ் (47*), ஆல்பி ஜோடி 4 வது விக்கெட்டு 72 ரன்கள் குவிக்க, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்க அணி, 170 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் நாதன் மெக்கலம், சோதி, ஓரம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ரைடர் ஆறுதல்: கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி, பிரண்டன் மெக்கலம் (6) விக்கெட்டை விரைவில் இழந்தது. ரைடர் 33 ரன்கள் (2 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்து அசத்தினார். கப்டில் (18), டெய்லர் (19), ஸ்டைரிஸ் (13) பெரிய அளவில் சோபிக்க தவறினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓரம், டக்-அவுட்டானார். பின்வரிசையில் நாதன் மெக்கலம் (26*), வெட்டோரி(10*) ஆகியோர் வெற்றிக்குப் போராடினர். இருப்பினும் பலன் கிடைக்க வில்லை. 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
---------
ஸ்கோர் போர்டு
தென் ஆப்ரிக்கா
காலிஸ் (கே) சோதி (ப) ஓரம் 31 (26)
ஸ்மித் (கே) கப்டில் (ப) சோதி 14 (12)
கிப்ஸ் (கே) பிரண்டன் மெக்கலம் (ப) நாதன் 30 (24)
டிவிலியர்ஸ் -அவுட் இல்லை- 47 (39)
ஆல்பி மார்கல் -ரன் அவுட் (ஹாப்கின்ஸ்) 40 (18)
பவுச்சர் -அவுட் இல்லை- 0 (1)
உதிரிகள் 8
மொத்தம் (20 ஓவரில் 4 விக்., இழப்பு) 170
விக்கெட் வீழ்ச்சி: 1-40 (ஸ்மித்), 2-55 (காலிஸ்), 3-97 (கிப்ஸ்), 4-169 (ஆல்பி மார்கல்).
பந்து வீச்சு: நாதன் மெக்கலம் 4-0-35-1, பாண்ட் 4-0-33-0, சோதி 3-0-39-1, ஓரம் 3-0-22-1, வெட்டோரி 4-0-21-0, ஸ்டைரிஸ் 2-0-14-0.
நியூசிலாந்து
பிரண்டன (கே) கிப்ஸ் (ப) லாங்கிவெல்ட் 6 (5)
ரைடர் (கே) டிவிலியர்ஸ் (ப) போத்தா 33 (28)
கப்டில் (கே) ஆல்பி மார்கல் (ப) போத்தா 18 (19)
டெய்லர் (கே) கிப்ஸ் (ப) மோர்ன் 19 (16)
ஸ்டைரிஸ் (கே) கிப்ஸ் (ப) லாங்கிவெல்ட் 13 (12)
ஹாப்கின்ஸ் (கே) ஸ்டைன் (ப) மோர்ன் 18 (13)
ஓரம் எல்.பி.டபிள்யு., (ப) ஸ்டைன் 0 (2)
நாதன் -அவுட் இல்லை- 26 (17)
வெட்டோரி -அவுட் இல்லை- 10 (10)
உதிரிகள் 14
மொத்தம் (20 ஓவரில் 7 விக்., இழப்பு) 157
விக்கெட் வீழ்ச்சி: 1-7 (பிரண்டன்), 2-51 (கப்டில்), 3-67 (ரைடர்), 4-87 (டெய்லர்), 5-109 (ஸ்டைரிஸ்), 6-110 (ஓரம்), 7-123 (ஹாப்கின்ஸ்).
பந்து வீச்சு: லாங்கிவெல்ட் 4-0-39-2, ஸ்டைன் 4-0-25-1, மோர்ன் மார்கல் 4-0-27-2, காலிஸ் 4-0-23-0, போத்தா 3-0-23-2, ஆல்பி மார்கல் 1-0-13-0.
0 comments:
Post a Comment