எட்டாம் வகுப்பு படித்தால்'டிரைவிங் லைசென்ஸ்'
'எட்டாம் வகுப்பு படித்திருந்தால் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு அறிவித்தார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின்போது, அ.தி.மு.க., உறுப்பினர் வேலுமணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் குறிப்பிட்டதாவது:மத்திய அரசு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும் என சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால், 10ம் வகுப்பு படித்த ஓட்டுனர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, எட்டாம் வகுப்பு படித்திருந்தாலே, ஓட்டுனர் உரிமம் வழங்கலாம் என, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment