Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

என் படங்கள் தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே அமையும்


நான் எந்தப் படம் நடித்தாலும் அது தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே இருக்கும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .
ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள எந்திரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை
சத்யம் தியேட்டரில் சனிக்கிழமை காலை நடந்தது.
தயாரிப்பாளர் கலாநிதிமாறன் முன்னிலையில் படத்தின் ட்ரெய்லரை ரஜினி வெளியிட்டார். படத்தின்
இயக்குனர் ஷங்கர் மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிபாளர்கள், இயக்குனர்கள் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
ட்ரைலரை வெளியிட்ட பிறகு ரஜினி பேசியது:

"எந்திரன்' சம்பந்தமாக இன்னும் நிறைய விழாக்கள் நடக்கப் போகிறது. அவற்றில் நான் பேச வேண்டும். அதனால் இங்கே கொஞ்சமாக பேசுகிறேன்.

எல்லா புகழும் இறைவனுக்கே. இந்த டிரெய்லரை மலேசியாவில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவிலேயே திரையிடுவதாக இருந்தோம். 'ரிலீசுக்கு இன்னும் நாள் இருக்கிறது பின்னர் வெளியிடலாமே' என்று ஷங்கர் கேட்டார். கலாநிதி மாறனும் அதற்கு சம்மதித்தார். அவர் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு திறம்பட செய்து வருகிறார்.

ஷங்கரின் பெரிய கனவை நனவாக்கிஇருக்கிறார் கலாநிதி மாறன். அவர் இல்லாவிட்டால் படம் இந்த அளவுக்கு வந்திருக்காது. 'படத்துக்கு 3 செட் போட வேண்டும். அதற்கு சென்னையில் வசதி இல்லை. ஐதராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டிக்குதான் போக வேண்டும்' என்று சொன்னோம்.

'அப்படியா… உங்களுக்கு எவ்வளவு பெரிய ஃப்ளோர் வேண்டும்' என கலாநிதி கேட்டார். சொன்னோம். ஆறே மாதத்தில் பெருங்குடியில் சிறப்பாக மூன்று ஏசி ஃப்ளோர்களை உருவாக்கிக் கொடுத்தார்.
இரண்டு வருஷம் முன்பு இந்த படம் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, 'தென்னிந்தியாவில் பட புரமோஷனை நான் பார்த்துக் கொள்கிறேன். வட இந்தியாவில் மட்டும் மீடியாவுக்கு நீங்க பேட்டி கொடுத்தால் உதவியாக இருக்கும்', என்று கலாநிதி மாறன் சொன்னார்.
'என் மேல் நம்பிக்கை வைத்து நீங்கள் இவ்வளவு பெரிய படத்தை தயாரிக்கிறீர்கள். கண்டிப்பாக அதை செய்வேன்' என்று சொன்னேன்.

இப்போது படம் முடிந்துவிட்டது. எந்திரன் சம்பந்தமாக பேட்டி வேண்டும் என்று எல்லா மீடியாவில் இருந்தும் கேட்கிறார்கள்.

'ஒரே படத்தை பற்றி திரும்பத் திரும்ப நான் என்ன பேட்டி கொடுப்பது' என்று கலாநிதி மாறனிடம் கேட்டேன்.

அதற்கு அவர் 'நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுங்கள். மற்ற விழாக்களுக்கு சும்மா வந்தால் போதும். ரெட் கார்பெட் எப்போதும் உங்களுக்காக விரிக்கப்பட்டிருக்கும்' என்று பதில் சொன்னார்.

படம் பற்றி முதலில் பேச்சு வந்தபோது, 'நான் பஸ்சில் டிக்கெட் கொடுத்தவன். எனக்கு ஆட்டோ டிரைவர், ரவுடி கேரக்டர்தான் பொருத்தமாக இருக்கும். விஞ்ஞானி கேரக்டருக்கு நான் எப்படி பொருந்துவேன்?' என ஷங்கரிடம் கேட்டேன். நாலு நாள் செட்டுக்குப் போனேன். அதன்பின் அந்த கேரக்டருடன் ஒன்றிவிட்டேன்.

அடுத்தது ரோபோவாக நடிக்க வேண்டும் என்றார். ஒரு இயந்திரமாக எப்படி நடிப்பது என்றேன். அவரே ஹோம் வொர்க் செய்து என்னை நடிக்க வைத்தார். இதில் நான் நடிக்கவில்லை. எல்லாமே ஷங்கர்தான்.

எளிமை ஏன்?

இங்கே வைரமுத்து பேசும்போது, 'நூறடி தாண்டிவிட்டார் ரஜினி. அடுத்தது என்ன?’ என்று கேட்டார்.

அடுத்த படம் பற்றி நான் சிந்திப்பது என் வேலையில்லை. திறமையான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிந்தித்து எனக்கு தரும் வேலையைச் செய்வேன்.

என் எளிமை பற்றி பெருமையாக பேசினார்கள். சிறு உயரத்திலிருந்து விழுந்தால் அடிபடாது. ஆனால் நீங்கள் என்னை பெரிய சிகரத்தில் அமர வைத்துவிட்டீர்கள். இங்கிருந்து விழுந்தால் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவேன். அதனால் எளிமையாக இருந்தாகணும்.

இளமையாக இருக்க…

ஸ்டைலாக இளமையாக இருக்கிறேன் என்றும் சொன்னார்கள். கொஞ்சம் உடல்பயிற்சி, கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் சாப்பாடு, கொஞ்சம் பணம் சம்பாதிப்பது என்று இருந்தால் இளமையாக இருக்கலாம்.

இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் எந்த படத்தில் நடித்தாலும் அது தமிழர்களை பெருமைப்படுத்தும் படமாகவே இருக்கும். ‘எந்திரன்’ அத்தகைய படம்தான்…" என்றார் ரஜினி.

நடிகை உயிர் தப்பினார் !

நடிகை சோனா சோக்காலி படத்தில் நடித்து வருகிறார். சரணா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவில் நடந்து வருகிறது. சோனா நடித்த காட்சிகள் அங்குள்ள நீச்சல் குளத்தில் படமாக்கப்பட்டன.

கோடீஸ்வரியான சோனா டி.வி. நடிகருடன் காதல் வயப்படுவது போலவும், அவரை தனது வீட்டுக்கு வரவழைத்து விருந்து படைப்பது போலவும் காட்சிகள் எடுத்துள்ளனர்.

சோனா நீச்சல் உடையில் ஆடி அசைந்து வந்தார். அவர் அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்குவது போன்று காட்சி எடுக்க படப்பிடிப்பு குழுவினர் தயாராகினர் கேமராமேன் மோகன் தயாராகும் முன்பு சோனா அந்த குளத்தில் இறங்கினார். அது ஆழமாக இருந்ததால் திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டாராம்.

ஆனால் யாரும் அவரை கவனிக்கவில்லை. குளத்தில் இருந்து கைகளை மட்டும் மேலே உயர்த்தி சோனா உயிருக்குப் போராடினாராம். அதை ஒளிப்பதிவாளர் திடீரென பார்த்து பதறிப் போய், படப்பிடிப்புக் குழுவினருடன் ஓடிப்போய் காப்பாற்றினாராம்.

கமல் புதிய படம்!

உன்னைப்போல் ஒருவன் படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் ச‌ரித்திரப் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. படத்தின் கதை மற்றும் ஸ்கி‌ரிப்ட் உருவாக்கும் பணி நீண்டுகொண்டே செல்வதால் அதற்குமுன் குறுகியகால தயா‌ரிப்பில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த புதிய படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயா‌ரிக்கிறது. காமெடி‌‌ப் படமான இதனை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.
கமல் ஜோடியாக தமன்னா நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

மும்தாஜ் வேடத்தில் ஐஸ்வர்யா!

ராணி மும்தாஜ் வேடத்தில் நடிக்கிறார் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். பென் கிங்ஸ்லி ஹீரோவாக நடிக்கிறார்.


ஜோதா அக்பர் என்ற பெயரில் மாமன்னர் அக்பர் வாழ்க்கையின் ஒரு பகுதி படமாக்கப்பட்டு, அது உலக அளவில் பெரிதும் பேசப்பட்ட படமானது. இந்தப் படத்தில் அக்பரின் இந்து ராணி ஜோதாவாக நடித்து அந்தப் பாத்திரத்துக்கே உயிர் கொடுத்தார் ஐஸ்வர்யா ராய்.


அடுத்து மொகலாய சக்கரவர்த்தி ஷாஜகானின் வரலாறு இப்போது திரைவடிவம் பெறுகிறது. சரித்திரப்படி அக்பரின் பேரன்தான் இந்த ஷாஜகான். அவருக்கும் அவரது மனைவி மும்தாஜுக்கும் இடையிலான காதல் வாழ்க்கை சரித்திரப் பிரசித்தி பெற்றது. மனைவியின் மீதிருந்த அளவற்ற காதலைக் காட்டவே, தாஜ் மஹால் என்ற உலக திசயத்தை எழுப்பினார் ஷாஜகான்.


இந்தக் காதல்தான் மும்தாஜ் மஹால் என்னும் பெயரில் படமாகிறது.


ஹாலிவுட் நிறுவனம் பல கோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில் ஷாஜகான் வேடத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பென் கிங்ஸ்லி நடிக்கிறார். இவர்தான் காந்தி படத்தில் மகாத்வாகவே வாழ்ந்தவர். அதற்காக ஆஸ்கர் விருதினையும் வென்றவர்.

கில்லி.. இந்தியில் பிரபுதேவா ரீமேக்!

விஜய் நடித்து பெரும் வெற்றி பெற்ற கில்லி படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் பிரபு தேவா. ரீமேக் கிங் என்ற பட்டம் ஜெயம் ராஜாவுக்குப் பிறகு, இன்றைய தேதிக்கு பிரபு தேவாவுக்குதான் சரியாகப் பொருந்தும். தமிழ் அல்லது தெலுங்கி்ல் வெற்றி பெற்ற படங்களை அப்படியே ரீமேக்கி பெரிய இயக்குநராகிவிட்டார். தெலுங்கு போக்கிரியை தமிழ்ப் போக்கிரியாக்கி, இந்தியிலும் சல்மான் கானை வைத்து வான்டட்-ஆக மாற்றி வெற்றி பெற்றார். இதே பாணியில் இப்போது தமிழில் விஜய் நடித்து வெற்றி பெற்ற கில்லியை இப்போது இந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து ரீமேக் செய்கிறாராம் (அபிஷேக் அங்கேயும் கபடிதான் ஆடுவாரா... அதாவது செமி பைனலில் தோற்றுவிட்டு பைனலுக்கு வரும் சூப்பர் கபடி!!) தமிழில் ஜெயம் ரவியை வைத்து பிரபுதேவா இயக்கும் 'பாரீஸ்' படம் முடிந்த பிறகு, 2010-ல் இந்தி கில்லி தொடங்குமாம்.

சினிமாவில் தோன்றும் அப்துல் கலாம்!

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். ஆனால் ஏதோ பொழுதுபோக்கிற்காகவும், பப்ளிசிட்டிக்காகவும் இதை அவர் செய்யவில்லை.


இளைஞர்களின் கனவு மேம்படவும், அந்தக் கனவு செயல் வடிவம் பெற என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவும் இந்தப் படத்தில் நடிக்கிறார் கலாம்.


மாதவ் பண்டா இயக்கும் இந்தப் படத்துக்கு நான் அப்துல் கலாம் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. யுனிசெப் உதவியுடன், இந்திய - பிரான்ஸ் கூட்டுத்தயாரிப்பாக உருவாகிறது இந்தப் படம்.


'இளஞர்களே கனவு காணுங்கள்' என்று அடிக்கடி கூறும் கலாமின் பேச்சை ஒரு நிகழ்ச்சியில் கேட்கும் இளம் சிறுவன் ஒருவன், அவனது கனவை விவரிக்கும் சினிமாவாக இது தயாராகிறது.

கதையைக் கேட்டதும், மன நிறைவுடன் நடிக்க சம்மதித்துள்ளார் கலாம். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தாராம். அது- பணம் வேண்டாம் என்பது தான்!

இது புதுசுமா...

வருகிற 27 ந் தேதி யோகி, நான் அவனில்லை 2 ஆகிய இரு படங்கள் ரிலீசாகின்றன. டைரக்டர் அமீர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் யோகி. படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. குடிசைப் பகுதியில் வசிக்கும் இளைஞன் கதை. ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் உயர் தொழில் நுட்பத்துடன் படமாக்கப்பட்டு உள்ளது. சுப்ரமணியசிவா இயக்கியுள்ளார்.

மதுமிதா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏற்கனவே ரிலீசான நான் அவனில்லை படத்தின் 2 ம் பாகமே நான் அவனில்லை 2. இதில் கதாநாயகனாக ஜீவன் நடித்துள்ளார். 5 கதாநாயகிகள். ஒவ்வொரு பெண்ணையும் மணந்து ஏமாற்றி பணத்துடன் தப்பி ஓடுவதே கதை. செல்வா இயக்கியுள்ளார். இரு படங்களும் எல்லா ஏரியாக்களிலும் நல்ல விலைக்கு வியாபாரமாகியுள்ளது.

நட்சத்திரங்கள் அளித்த உறுதி!

ஆஸ்கர் விருதுகளை குவித்த ஸ்லம்டாக் மில்லினர் பட‌த்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரூபியானா அலி, அசார் ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் இனிமேல் தொடர்ந்து பள்ளிக்கு ‌செல்வோம் என உறுதியளித்துள்ளனர்.
இப்படத்தின் இயக்குநர் டேனி பாயிலின் அடுத்த படத்திலும் இந்த குழந்தைகள் ஒப்பந்தமாகியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் படிப்புக்கு எந்த பாதகமும் வந்து விடக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் டேனி பாயில் ஒழுங்காக பள்ளிக்கும் செல்ல வேண்டும் என கட்டளையிட்டிருகக்கிறார்.
இதனை ஏற்றுக் கொண்ட சிறுவர்களும் நடிப்புடன் படிப்பையும் இனி கவனிப்போம் என உறுதியளித்துள்ளனர்.