ஆஸ்ட்ரேலியா செல்ல முயன்று இப்போது இந்தோனேஷிய தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளை, அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்போவதாக இந்தோனேஷியா மிரட்டல் விடுத்துள்ளது. ஆஸ்ட்ரேலியாவுக்கு வரமுயன்று இந்தோனேஷியாவிலேயே வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என ஆஸ்ட்ரேலிய செனட் தலைவர் பார்னபி ஜாய்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்ட்ரேலியா வர முயன்ற கப்பல் வழிமறிக்கப்பட்டு அதிலிருந்த இலங்கை அகதிகள் 78 பேர்,நீண்ட நாட்களாக இந்தோனேஷிய கடற்கரையில் ஓஷியானிக் வைக்கிங் என்ற கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தங்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்காதவரை தாங்கள் கப்பலில் இருந்து இறங்கப்போவதில்லை என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே தமிழ் அகதிகள் ஆஸ்ட்ரேலிய கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்வதையே வலியுறுத்தி வந்த நிலையில்,அவர்கள் அங்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஆஸ்ட்ரேலியா.
இந்நிலையில்,கப்பலிலிருந்தும் இறங்கி வர மறுக்கும் தமிழ் அகதிகளை ஏற்க ஆஸ்ட்ரேலியா மறுத்தால் அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்புமாறு ஐஓஎம் - ஐ ( இடம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பை கேட்டுக்கொள்ளப்போவதாக இந்தோனேஷிய அயலுறவுத் துறை அமைச்சக மூத்த அதிகாரி சுஜாட்மிகோ தெரிவித்துள்ளார்ர்.
Showing posts with label மிரட்டல். Show all posts
Showing posts with label மிரட்டல். Show all posts
தமிழகத்தில் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு
கல்பாக்கம் அணு மின்நிலையம் உள்ளிட்ட முக்கிய அணுமின் நிலையங்களை தகர்க்கப் போவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து தமிழக அதிகாரிகள் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பது பற்றி செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம் அணு மின்நிலையம், கூடங்குளம் அணு மின்நிலையம் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி தலைமையில் நேற்றிரவு ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கடற்படை அதிகாரிகள், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
Labels:
மிரட்டல்
Subscribe to:
Posts (Atom)