இலங்கை தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவோம்

ஆஸ்ட்ரேலியா செல்ல முயன்று இப்போது இந்தோனேஷிய தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளை, அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்போவதாக இந்தோனேஷியா மிரட்டல் விடுத்துள்ளது. ஆஸ்ட்ரேலியாவுக்கு வரமுயன்று இந்தோனேஷியாவிலேயே வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என ஆஸ்ட்ரேலிய செனட் தலைவர் பார்னபி ஜாய்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்ட்ரேலியா வர முயன்ற கப்பல் வழிமறிக்கப்பட்டு அதிலிருந்த இலங்கை அகதிகள் 78 பேர்,நீண்ட நாட்களாக இந்தோனேஷிய கடற்கரையில் ஓஷியானிக் வைக்கிங் என்ற கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தங்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்காதவரை தாங்கள் கப்பலில் இருந்து இறங்கப்போவதில்லை என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே தமிழ் அகதிகள் ஆஸ்ட்ரேலிய கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்வதையே வலியுறுத்தி வந்த நிலையில்,அவர்கள் அங்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஆஸ்ட்ரேலியா.

இந்நிலையில்,கப்பலிலிருந்தும் இறங்கி வர மறுக்கும் தமிழ் அகதிகளை ஏற்க ஆஸ்ட்ரேலியா மறுத்தால் அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்புமாறு ஐஓஎம் - ஐ ( இடம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பை கேட்டுக்கொள்ளப்போவதாக இந்தோனேஷிய அயலுறவுத் துறை அமைச்சக மூத்த அதிகாரி சுஜாட்மிகோ தெரிவித்துள்ளார்ர்.

0 comments: