ஜெய்ன் டெலிகாமின் ஆப்பிரிக்க பிரிவை வாங்கும் ஏர்டெல்

எப்படியாவது ஆப்பிரிக்க தொலைபேசி மார்க்கெட்டைப் பிடித்துவிடுவதில் தீவிரமாக உள்ளது பார்தி ஏர்டெல்.

தெனனாப்பிரிக்காவின் எம்டிஎன் தொலைபேசி நிறுவனத்தை வாங்க தீவிர முயற்சி மேற்கொண்டது பார்தி. இருமுறை முயன்றும் அந்த பேச்சுவார்த்தையில் வெற்றி கிட்டவில்லை.

இதற்கிடையே வங்கதேசத்தில் இயங்கி வந்த வாரிட் தொலைபேசி நிறுவனத்தை வாங்கியது. இப்போது மீண்டும் ஆப்ரிக்க மார்க்கெட் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளது.

குவைத்தைச் சேர்ந்த ஜெய்ன் (Zain Telecom) நிறுவனத்தின் ஆப்பிரிக்க பிரிவை வாங்க பார்தி பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது. ஆனால் மொராக்கோ மற்றும் சூடானில் மட்டும் ஜெய்ன் தனித்து இயங்கும் என்று கூறப்படுகிறது.

10.7 பில்லியன் டாலருக்கு இந்த டீல் பேசப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்துக்குள் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

0 comments: