ஷாரூக்கின் மை நேம் ஈஸ் கான்!

இதற்கு முந்தைய இந்தியப் படங்களின் வசூல் சாதனையை ஜஸ்ட் லைக் தட் முறியடித்து பெரும் சாதனைப் படைத்துள்ளது ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான்.

இந்திப் படங்களுக்கு பெரிய மார்க்கெட் இல்லாத தமிழகத்தில்கூட அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போடுகிறது மை நேம் ஈஸ் கான்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவுக்கு வந்து விளையாடினால் நன்றாக இருக்கும் என்ற ஒரு கருத்தைச் சொன்னதற்காகவே, ஷாரூக்கானை தேசத் துரோகி என்று குற்றம்சாட்டி, பெரும் கலவரத்தைத் தூண்டப் பார்த்தது பால்தாக்கரேயின் சிவசேனை.

கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் ரிலீசான போது மும்பை நகரம் முழுவதும் சிவசேனா கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல தியேட்டர் அதிபர்கள் பயந்து போய் படத்தை நிறுத்தினார்கள். ஆனால் மராட்டிய அரசும், ரசிகர்களும் ஷாரூக்கானுக்கு ஆதரவாக களம் இறங்கியதும் மறுநாள் பல தியேட்டர்களில் படம் ரிலீசானது. தற்போது 80-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ஓடுகிறது.

இந்தி திரையுலகில் சமீபத்திய படங்களின் வசூல் சாதனைகள் அனைத்தையும் மை நேம் இஸ் கான் படம் முறியடிக்கும் என்கின்றனர். தியேட்டருக்கு வெளியே பிளாக்கில் ஒரு டிக்கெட் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகின்றது. பெர்லின் திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு ஒரு டிக்கெட் ரூ.60 ஆயிரம் என விற்கப்பட்டு சில நிமிடங்களிலேயே முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலும் இந்தப் படம் சக்கைபோடு போடுகிறது. அந்த படம் ரிலீசான 3 நாட்களில் 1.86 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது.

சென்னையில் 5 தியேட்டர்களில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது. காதலர் தினத்தையொட்டி நேற்று இளைஞர்களும், இளம் பெண்களும் தியேட்டர்களில் நிரம்பி இருந்தனர். இதை சாதகமாக்கி பிளாக்கில் டிக்கெட் விற்பனை நடந்தது. அங்கும் கூட சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது டிக்கெட்.

பொதுவாக ரிப்பீட்டட் ஆடியன்ஸ் எனும் திரும்பத் திரும்ப படம் பார்க்கும் ரசிகர்கள் [^] படம் வெளியான மூன்றாவது அல்லது நான்காவது வாரம்தான் வருவார்கள். ஆனால் இந்தப் படத்துக்கு இப்போதே ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வருகை அதிகரித்துள்ளதால், டிக்கெட் கிடைக்காமல் உள்ளதாகவும், இதனால் இன்னும் சில வாரங்களுக்கு ரசிகர்கள் வருகை ஏராளமாக இருக்கும் என்றும் மும்பை பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

0 comments: