மனைவியிடம் மன்னிப்பு கேட்டதாம் ஜாக்சன் 'ஆவி

வரவர இந்த ஆவிகள் தொல்லை தாங்க முடியலப்பா...

'ஆவி' அமுதா-கனகா சண்டை பேய் பட ரேஞ்சுக்குப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு ஆவி விவகாரம்.

மறைந்த மைக்கேல் ஜாக்சனின் ஆவி, அவரது முன்னாள் மனைவி லிசா மேரி பிரஸ்லியிடம் மன்னிப்பு கேட்டதாக ஜாக்சனின் தோழி பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஜாக்சனின் ஆத்மா இன்னும் சாந்தி அடையாமல் தவித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் அவர். ஒரு மீடியம் மூலமாக ஜாக்சனின் ஆவியுடன் இவர்கள் பேசினார்களாம்.

ஜாக்சனின் தோழி கரேன் பேஹஸ். இவர் ஜாக்சனின் மேக்கப் கலைஞராகவும் இருந்தவர். ஜாக்சன் ஆவிக் கதை குறித்து பேஹஸ் கூறுகையில், நானும், லிசாவும் ஒரு மீடியம் மூலமாக கடந்த வாரம் ஜாக்சனின் ஆவியைத் தொடர்பு கொண்டோம். அப்போது நான் உனக்கு செய்த தவறுகளுக்காக என்னை மன்னித்து விடு என்று கேட்டுக் கொண்டார் ஜாக்சன்.

மேலும் தனது வாழ்க்கையில் தான் சந்தித்த மனிதர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் ஜாக்சன் தெரிவித்தார். தனது தவறுகளை விவரித்த அவர், அவற்றுக்கெல்லாம் மன்னிப்பு வேண்டும் என்று கேட்டார். அவரது ஆத்மா இன்னும் சாந்தி அடையவில்லை என்று தெரிகிறது.

நாங்கள் தொடர்பு கொண்ட மீடியத்திற்கு, நாங்கள் யார் என்பது குறித்துத் தெரியாது. மேலும் அந்த மீடியம், ஜாக்சன் வாழ்க்கையில் யாருக்குமே தெரியாத பல உள் விஷயங்களையும் சொன்னன் மூலம் ஜாக்சன்தான் பேசியதாக நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.

சரி, ஜாக்சனை அவரது டாக்டர் கான்ராட் முர்ரேதான் கொன்றார் என்று கூறப்படுவது குறித்து 'ஜாக்சனிடம்' கேட்டீர்களா என்ற கேள்விக்கு பேஹஸ் பதிலளிக்கையில், அதுபற்றியெல்லாம் ஜாக்சன் ஆவி எதுவும் சொல்லவில்லை. அதை முற்றிலும் தவிர்த்து விட்டது என்றார் பேஹஸ்.

1994ம் ஆண்டு மேரியை மணந்தார் ஜாக்சன். பின்னர் 18 மாத மண வாழ்க்கைக்குப் பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். மறைந்த பாப் மாமேதை எல்விஸ் பிரஸ்லியின் மகள்தான் லிசா மேரி என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: