டிவி ரியாலிட்டி ஷோவில் எலியைக் கொன்று சாப்பிட்டதால் சர்ச்சை......

லண்டன் இங்கிலாந்தின் ஐடிவி குழும டிவியில், நடந்த ரியாலிட்டி ஷோவின்போது எலியைப் பிடித்து கொன்று அதை சமைப்பது போன்ற காட்சி வந்ததற்காக அந்த டிவிக்கு 1400 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

I'm A Celebrity ...Get Me Out of Here! என்ற பெயரில் ஐடிவியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட இத்தாலி நாட்டு சமையல் கலைஞரான கினோ டிஅக்காம்போ என்பவர் காட்டில் நடந்த நிகழ்ச்சியின்போது ஒரு காட்டு எலியைப் பிடித்து அதைக் கொன்று சமையல் செய்தார்.

பின்னர் அந்த எலிக் கறியை அவரும், நடிகர் ஸ்டூவர்ட் மேனிங் என்பவரும் சாப்பிட்டனர்.

இது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது. இதையடுத்து விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி குரல் எழுப்பினர். இதையடுத்து தற்போது அந்த டிவிக்கு 1400 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஐடிவியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் இவ்வாறு நடந்தது தவறான செயல் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

0 comments: