மோட்டாரோலா நிறுவனம் 2 ஆக பிரிக்கப்படுகிறது

செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோட்டாரோலா நிறுவனம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.

பிரிக்கப்பட்ட பிறகு இரு நிறுவனங்களுமே இரண்டு தனி வர்த்தக அடையாளங்களாகத் திகழும் வகையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று மோட்டாரோலா அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கு நிறுவனத்தின் இயக்குநர் குழுவும் முழுமையான சம்மதம் தெரிவித்துள்ளது.

முதல் நிறுவனம் மோட்டாரோலாவின் மொபைல் கருவிகள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இதன் சிஇஓவாக சஞ்சயா ஜா பணியாற்றுவார்.

இரண்டாவது நிறுவனம் மோட்டாரோலாவின் நெட்வொர்க் வர்த்தகத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும்.

இந்த இரு நிறுவனங்களும் மொபைல் மற்றும் சர்வீஸ் சார்ந்த அனைத்துத் தேவைகளுமே பூர்த்தி செய்வதாக அமையும் என்கிறார் மோட்டாரோலா சேர்மன் டேவிட் டார்மன்.

வீடியோ படங்கள் தருவது, ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பது என மோட்டாரோலாவின் விரிவாக்கப் பணிகள் வேகமாக நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments: