இரண்டு நாட்களுக்கு மழை

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை இருக்கும். குறிப்பாக, கடலோர மாவட் டங்களில் பலத்த மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அரபிக் கடலுக்கு சென்ற பின், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்வது படிப்படியாக குறைந்தது. ஆனாலும், பருவமழை சீசன் என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடியற்காலை பனிமூட்டமாக காணப்பட்டாலும், பகலில் சுள்ளென வெயில் அடித்தது. இதற்கிடையே, வங்கக் கடலில் நேற்று முன்தினம் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் படிப்படியாக மழை பெய்வது அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, வல்லத்தில் 7 செ.மீ., மழை பெய்தது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, சிவகிரி, தூத்துக்குடியில் 5 செ.மீ., செங்கல்பட்டு, பேராவூரணியில் 4 செ.மீ., பாம்பன், சங்கரிதுர்க், பவானிசாகர், திருச்சுழி, துறையூரில் 3 செ.மீ., மழை அளவு பதிவாகியது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,"தென்மேற்கு வங்கக் கடலுக்கும், தென்கிழக்கு வங்கக் கடலுக்கும் இடையே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நேற்று முன்தினம் உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரைக்கிடையே நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களிலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக இருக்கும். நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்யும்' என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் மழை: நீலகிரி மாவட்டத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 77.4 செ.மீட்டர் அளவிற்கு, வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 10 மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 77.4 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இங்கு இதுவரை இயல்பான மழையளவு 27.8 செ.மீட்டராக இருந்துள் ளது. நாகப்பட்டினத்தில் 70.8 செ.மீட்டர், கடலூரில் 62.2 , திருநெல்வேலியில் 47.2, விழுப்புரத்தில் 48.4, திருவாரூரில் 47.8, திண்டுக்கலில் 35.8, திருவாரூரில் 47.8, ராமநாதபுரத்தில் 41.8, தூத்துக்குடியில் 34.4 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. சென்னை, அரியலூர், கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்டங்களில், இயல்பான அளவிற்கே மழை பெய்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், வேலூர் மாவட்டங்களில் வழக்கமான அளவிற்கு குறைவாக மழை பெய்துள்ளது.

0 comments: