கின்னஸ் புத்தகத்தில் பிரதீபா பாட்டீல் பெயர்!

இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், முப்படைகளின் தலைவர் ஆவார். அந்த வகையில் அவர் இன்று (25.11.2009) போர் விமானத்தில் பறக்க முடிவு செய்து இருக்கிறார். அவர் புனேயில் உள்ள லோஹேகான் விமான தளத்தில் இருந்து அதிநவீன சுகோய் 30 ரக விமானத்தில் பறந்து செல்கிறார்.

இரண்டு சீட்டுகள் கொண்டு சுகோய் போர் விமானத்தில் உதவி பைலட் இருக்கையில் அமர்ந்து அவர் தனது பயணத்தை மேற்​கொள்கிறார். விமானத்தை விங் கமாண்டர் எஸ்.அஜன் ஓட்டுகிறார்.

பிரதிபா பாட்டீலின் பயணத்துக்காகவே இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளத். மணிக்கு 1000 கி.மீட்டருக்கும் சற்று குறைவான வேகத்தில் இந்த போர் விமானம் பறந்து செல்லும். வானில் சுமார் அரை மணி நேரம் விமானத்தில் அவர் வட்டமிட உள்ளார்.

போர் விமானத்தில் பறந்த முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்தான். எனவே அவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும்.

0 comments: