ச ம க சாதி கட்சியா?


மக்கள் நலனுக்காக செயல்படாமல் ஜாதிக் கட்சி போன்று அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சி செயல்படுகின்றது. அதனால் நான் அந்த கட்சியில் இருந்து எனது பதவியை ராஜினாமா செய்கின்றேன் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கோவை மாநகர் செயலாளர் உபைதூர் ரகுமான் தெரிவித்துள்ளார். இது குறித்து உபைதூர் ரகுமான் கூறுகையில்,

சரத்குமார் திரையுலகிற்கு வந்த போது அவருக்காக ரசிகர் மன்றம் வைத்து கடந்த 18 வருடமாக பணியாற்றினேன். அவர் திமுகவில் இணைந்த போது திமுகவில் இணந்தோம். அதில் இருந்து அவர் விலகி அதிமுகவில் சேர்ந்த போது நாங்களும் அதிமுகவில் இணைந்தோம்.

அவர் தனிக் கட்சி தெடங்கி பிறகு அதில் கடந்த 2 வருடமாக பணியாற்றி வருகின்றேன். பிறகு தேர்தலில் அவர் பாஜக கூட்டணி என்ற போதும் கூட அவருடன் தான் இருந்தோம் . கட்சியின் பெயரில் தான் சமத்துவம் உள்ளதே தவிர உண்மையில் அங்கு சமத்துவம் இல்லை. அந்த கட்சியில் நாடார் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்குத் தான் உரிய பதவிகளும், மரியாதைகளும் அளிக்கப்படுகின்றது.


மற்றவர்களை அவர்கள் தங்களது நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் நான், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கோவை மாநகர் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன் என்றார்.

0 comments: