சோதனை மேல் சோதனை


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சரக்கு (கார்கோ) பிரிவு உள்ளது. இங்கிருந்துதான் வெளிநாடுகளுக்கு பொருட்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன.

அதே போல் வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பொருட்களும் இங்கு வந்து சோதனை செய்த பிறகு வெளியே அனுப்பப்படும். இந்த கார்கோ பிரிவில் முறைகேடுகள் நடப்பதாக புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். 18 அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து அங்கிருந்த பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். இரவு முழுவதும் சோதனை செய்யப்பட்டது.

2-வது நாளாக அதிரடி சோதனை நடந்தது

இந்த சோதனையின்போது அனைத்து போன்களும் துண்டிக்கப்பட்டது. வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஊழியர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறக்குமதியான எந்த பொருட்களையும் வெளியே கொண்டு செல்ல சி.பி.ஐ. அதிகாரிகள் தடைவிதித்தனர்.


இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.15லட்சம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 11 பேரை மேல் விசாரணைக்காக சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

0 comments: