கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரம்பிக்குளம், டாப்சிலிப், கோவை குற்றாலம் பகுதிகளுக்கு சாகஸ சுற்றுலா செல்ல விரும்புவோர் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டாப்சிலிப், பரம்பிக்குளம், கோவை குற்றாலம் போன்ற பகுதிகளுக்கு சாகஸ சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கிறது. டிசம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, டிசம்பர் 25ஆம் தேதி பரம்பிக்குளம் சென்றடையும். டிசம்பர் 25ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை மலையேற்ற பயணம் தொடரும்.
இரவு பரம்பிக்குளம் தங்கி மறுநாள் காலை, டிசம்பர் 26ஆம் தேதி, டாப்சிலிப்பில் இருந்து காட்டுவழி பயணம் தொடங்கும். அன்றிரவு கோவையில் தங்கலாம். மறுநாள், கோவை குற்றாலம் கண்டுகளித்தபிறகு, கோவையில் இருந்து மாலை புறப்பட்டு, மறுநாள் காலை சென்னை வந்தடையலாம். இதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரம். இதில், தங்குமிடம், உணவு, போக்குவரத்து வசதி ஆகியவை அடக்கம்.
தங்கள் பெயரை பதிவு செய்ய விரும்புவோர், பொது மேலாளர், சுற்றுச்சூழல் சுற்றுலா பிரிவு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சென்னை- 2, என்ற முகவரியை தொடர்பு கொள்ளவேண்டும்.
இதில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் கால்சட்டை, பனியன், டிரெக்கிங் காலணிகள், தொப்பி, குளிர் கண்ணாடி போன்ற பொருட்களையும், பைனாகுலரையும் கொண்டு வரலாம். இப்பயணத்தில் பங்கு பெறுவோர் 6 முதல் 7 மணி நேரம் வரை நடக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள், சென்னையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகங்களை 25383333, 25384444, 25389857 அல்லது 25384356, 25382916 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment