வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2009ம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருது வவங்கப்படவுள்ளது.இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் இந்த விருதுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான சர்வதேச தேர்வுக் குழு, ஹசீனாவைத் தேர்வு செய்துள்ளது.வங்க தேச மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வு வளம்பெற ஏழ்மையை ஒழித்து, ஜனநாயகம் தழைத்தோங்கும் விதத்தில் பாடுபட்டதற்காக ஷேக் ஹசீனாவுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது ரூ. 25 லட்சம் ரொக்கப் பரிசும், சான்றிதழும் கொண்டது.1996-2001 வரை பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா.கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டாவது முறையாக பிரதமரானார்.வங்க தேசத்தில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், ஏழைளுக்கு வீடு, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல திட்டங்களை ஷேக் ஹசீனா அமலாக்கி வருகிறார்.வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நடந்து வந்த ஊடுருவல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், இரு நாடுகள் இடையே அமைதியை நிலைநாட்டவும் இவர் பல முயற்சிகள் எடுத்தார் என இந்திரா காந்தி அறக்கட்டளை கூறியுள்ளது.
0 comments:
Post a Comment