பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக லிபரான் கமிஷன் வெளிட்டுள்ள அறிக்கையில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவையும் சேர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
லிபரான் அறிக்கையில் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த நரசிம்மராவ் அரசையும் இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்காதது அறிக்கையில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தவறை சரிசெய்ய வேண்டும்.
மசூதி இடிக்கப்படும் வரை ராவ் அமைதியாக இருந்தார். இதனால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் அவரது பெயரையும் சேர்க்க வேண்டும்.
அதே நேரத்தில் பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய் குற்றமற்றவர் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment