பெரும் கடனில் சிக்கித் தத்தளிக்கிறது துபாய். இதன் விளைவு, உலகம் முழுக்க எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.
சர்வதேச பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
துபாய் அரசுக்குச் சொந்தமான துபாய் வேர்ல்டு கார்ப்பரேஷனின் கடன் அளவு 80 பில்லியன் டாலர்களைத் தாண்டி நிற்கிறது. இந்தத் தொகை மற்றும் வட்டியை அந்த நாட்டால் உடனடியாகக் கட்ட முடியவில்லை. அடுத்த மே மாதம் வரை அவகாசம் வேண்டும் என சர்வதேச நாடுகளிடம் கேட்டுள்ளது துபாய்.
இந்தச் செய்தி பரவியதும் உலகப் பங்குச்சந்தைகள் ஆட்டம் காணத் துவங்கியுள்ளன. காரணம், சர்வதேச அளவில், அதுவும் செல்வம் கொழிக்கும் நாடு என வர்ணிக்கப்படும் துபாய்க்கு 80 பில்லியன் டாலர் என்பது சுமாரான தொகைதான்.
இந்தத் தொகை மற்றும் அதற்கான வட்டியைக்கூட கட்ட முடியாத மோசமான நிலையில் துபாய் அரசு இருக்கிறதா? என்ற கேள்வியின் விளைவு, துபாய்க்கு கடன் தந்துள்ளவர்களை துணுக்குற வைத்துவிட்டது.
இதனால் பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்கத் துவங்க, தடதடவென ஆரம்பித்துவிட்டது சரிவு.
சர்வதேச நாணயங்களின் மதிப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது இந்த துபாய் சரிவு.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
வட்டியை கொண்டு ஆரம்பிக்கப்படும் எந்த தொழிலும் கடைசியில் நஷ்ட்டத்தில் முடிவதை நாம் கண் கூடாக காண முடிகிறது . இதற்க்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு .
Post a Comment