சிங்கப்பூரில் வண்ணமிகு தீபாவளி


சிங்கப்பூரில் தீபாவளி வந்து விட்டதற்கு முக்கிய அடையாளம் லிட்டில் இந்தியாவில் ஒளி வெள்ளம், கேம்பல் லேன் தீபாவளி கிராமம், சிராங்கூன் பிளாசா எதிரே தீபாவளி வர்த்தகச் சந்தை.

இவை மூன்றும் இம்மாதம் 7ம் தேதி வியாழக்கிழமையன்று செயல்படத் தொடங்கிவிட்டது.

கேம்பல் லேன் தீபாவளி கிராமும், சிராங்கூன் பிளாசா எதிரே தீபாவளி வர்த்தகச் சந்தையும் வியாழக்கிழமை காலை யிலேயே செயல்படத் தொடங்கி விட்டன.

தீபாவளிக்கு முதல் நாள் நவம்பர் 4ம் தேதி இரவு வரை இந்தச் சந்தைகள் செயல்படும்.

கேம்பல் லேன் விழாக் கிராமத்தில் விற்பனைச் சந்தையுடன் இந்தியாவிலிருந்து சிறப்பாக வரவழைக்கப்பட்டுள்ள இந்தியப் பாரம்பரிய கைவினைக் கலை கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிராங்கூன் பிளாசா எதிரே அமைக்கப்பட்டுள்ள வர்த்தகச் சந்தையில் பல்வேறு பொருட்களும் விற்பனைக்கு உள்ளன.

தீபாவளி ஒளியூட்டு பெரிய விழாவாக வியாழன் இரவு இடம் பெற்றது.

இவ்வாண்டு ஒளியூட்டு, செல்வச் செழிப்பை மையமாகக் கொண்டுள்ளது.

இதில் விளக்குத் தோரணங்களின் வடிவமையமாக இவ் வாண்டு விளக்குகளே இடம் பெற்றுள்ளன.

பொருளியல் மந்தத்தில் இருந்து வெற்றிகரமாய் சிங்கப்பூர் மீண்டதைக் கொண்டாடும் விதத்திலும், இன¬ வரும் நாட் களிலும் வளமை கொழிக்க வாழ்த்தும் விதத்திலும் செல்வச் செழிப்பை மையமாய்க் கொண்டதால், முகப்பில் யானைகள் குளிர்விக்கும் { மகாலட்சுமி அருள் வழங்கியபடி வீற்றிருக் கிறாள்.

இந்த ஒளியூட்டின் ஏற்பாட் டாளர்களான இந்து அறக் கட்டளை வாரியத்தினரும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கத்தி னரும் இவ்வாண்டு ஒளியூட்டில் வளமையுடன் பசுமையையும் முக்கியமாய்க் கருத்தில் கொண்டு உள்ளனர்.

இதற்காகச் சுற்றுப்புறச் சூழ லுக்குகந்த வகையில் மின்சக்திச் சேமிப்பு விளக்குகளை ஒளியூட்டுக்குப் பயன்படுத்தி உள்ளனர்.

அதிக மின்சக்தி இழுக்கும் மஞ்சள் விளக்குகளுக்கு பதில் வெள்ளை விளக்குகள் பயன்படுத்தியுள்ளதில் துவங்கி, ஏற் கனவே இருக்கும் தெரு விளக்குக் கம்பங்களையே பயன்படுத்தியுள்ளது வரை மின்சக்திச் சிக்கன நடவடிக்கைகள் பளிச்சிடுகின்றன.

மேலும் அக்டோபர் 30ம் தேதி ‘தீபாவளி உற்சவ்’ எனப் படும் சாலை ஊர்வலம் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இரவு 7.00 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த ஊர்வலம் நடைபெறும்.

இந்நிகழ்ச்சில் பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

நிதி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் ‘தீபாவளி உற்சவ்’ நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்கிறார்.

நவம்பர் 4ம் தேதி வசந்தம் - எம்1 தீபாவளி ‘கவுன்டவுன்’ சிறப்பு நிகழ்ச்சி. ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபெறும் உள் ளூர் -மலேசிய கலைஞர்களின் ஆடல், பாடல் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அதிபர் எஸ். ஆர். நாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். அனைவரும் பங்கேற்று மகிழலாம்.

"இந்துக்களுக்குத் தீபாவளி ஒரு முக்கியமான உன்னதமான பண்டிகை. இந்த மகிழ்ச்சிமிகு பண்டிகை மூலம் இந்திய மக்க ளின் வலுவான பாரம்பரிய மற்றும் வரலாற்றுப் பண்புகளைப் பறைசாற்ற நாங்கள் எண்ணி உள்ளோம்.

"அதற்காக பற்பல நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடு செய்து உள் ளோம்," என்றார் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு எஸ் நல்லதம்பி.

0 comments: