மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிங்பிஷர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று விமான நிலையத்தில் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தது.
மும்பையில் இருந்து மஸ்கட் செல்லும் ஜெட் ஏர்வேஷ் விமானம் ஒன்று கிங்கிஷர் விமானம் நின்று கொண்டிருந்த தடத்தில் இருந்து புறப்பட தயாராகி கொண்டிருந்தது.
அப்போது ரன்வேயில் பின்புறமாக வந்த ஜெட் ஏர்வேஷ் விமானத்தின் இறக்கைகள் நின்று கொண்டிருந்த சரக்கு விமானத்தின் பின்புறம் உரசி உள்ளது.
இதனால் இரண்டு விமானங்களும் பயங்கர சத்தத்துடன் அதிர்ந்துள்ளது. ஜெட் ஏர்வேஷ் விமானம் கிங்பிஷர் விமானத்துடன் உரசிய சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டதால் பெரிய அளவில் நிகழ இருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெட் ஏர்வேஷ் விமானத்தின் இறக்கைகள் இலேசாக சேதம் அடைந்துள்ளது. ஜெர் ஏர்வேஷ் விமானத்திற்குள் சுமார் 100 பயணிகள் உள்பட சிப்பந்திகள் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர்.
விமானங்கள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்ட நிகழ்வு குறித்து மும்பை விமான நிலைய பொறுப்பு ஆணையம் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

0 comments:
Post a Comment