சச்சினுக்குத் தடை வருமா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபராதம் - 2வது முறை அபராதம் விதிக்கப்பட்டதால் சச்சினுக்குத் தடை வருமா?

மும்பை: மெதுவாக பந்து வீசியதால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கருக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக சச்சினுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு போட்டியில் ஆட தடை வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பவுலிங் செய்தது மும்பை அணி. அப்போது மெதுவாகப் பந்து வீசியதாக போட்டி நடுவர் புகார் கூறினார்.

இதையடுத்து சச்சினுக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வீரருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

சச்சினுக்கு அபராதம் விதிக்கப்படுவது இது 2 வதுமுறையாகும். ஐபிஎல் விதிமுறைப்படி 3 முறை அபராதம் விதிக்கப்பட்டால், அந்த வீரருக்கு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும். எனவே சச்சினுக்கு அந்தப் பிரச்சினை வருமோ என்ற கவலையில் மும்பை அணியும், அதன் ரசிகர்களும் உள்ளனர்.

0 comments: