கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த கப்பல் இன்ஜினியர் ஒருவர் நெதர்லாந்தில் மாயமானதாக கூறப்படுவது குறித்து அவரது பெற்றோர் சென்னையில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக இணை செயலகத்தில் புகார் கொடுத்துள் ளனர்.
இது குறித்து கூறப்படுவதாவது: கிழக்கு தாம்பரம், வாசுகி தெருவைச் சேர்ந்தவர் ஜூலியஸ் சிரோன் பெர்னாண்டோ. இவர், சோத்துப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி டெனி. இவர்களுக்கு மூன்று மகன், ஒரு மகள் உள்ளனர். இரண்டாவது மகன் நிக்சன் (24). பி.இ., மெரைன் இன்ஜினியரிங் படித்துவிட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
அந்த நிறுவனம், கடந்த 9ம் தேதி நிக்சனை நெதர்லாந்தில் உள்ள தங்களின் நிறுவனத் துக்கு அனுப்பியது. நெதர்லாந் துக்கு சென்ற நிக்சன், கடந்த 11ம் தேதி பணியில் சேர்ந்துவிட்டதாக பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பினார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி நிக்சனின் பெற்றோருக்கு, சென்னையில் உள்ள கப்பல் நிறுவனம் மூலமாக, நிக்சன் நெதர்லாந் தில் மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த நிக்சனின் பெற்றோர், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு, 'நெதர்லாந்தில் இருந்து கொலம்பியா புறப்பட்ட கப்பலில் நிக்சன் பணியில் இருந்தார். கப்பல் புறப்படும் போது இருந்த நிக்சன், அதன் பின் மாயமாகிவிட்டார்,' என்று கூறிய அந்நிறுவனத்தினர், வேலை பிடிக்காமல் தற்கொலை செய்வதாக நிக்சன் எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தின் நகலை நிக்சனின் பெற்றோரிடம் கொடுத்தனர்.
நிக்சன் கடலில் விழுந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் தேடியதாகவும், இது தொடர்பாக பெல்ஜியம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி, நிக்சனின் உடைமைகளை கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, நிக்சனின் பெற்றோர் சென்னையில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக இணை செயலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த நிக்சனின் தந்தை ஜூலியஸ் சிரோன் பெர்னாண்டோவிடம் கேட்டபோது, 'என் மகன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
'எனவே, மகனை மீட்டுத் தருமாறு சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க சென் றோம். ஆனால், வெளிநாடுகளில் காணாமல் போனால் நாங்கள் புகார் வாங்கக்கூடாது என போலீசார் தெரிவித்துவிட் டனர். 'இதனால், சென்னையிலுள்ள வெளியுறவுத்துறை அமைச்சக இணை செயலகத்தில் புகார் கொடுத் துள்ளோம்' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment