நாகூர் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிராக்கி : ஒரே நாளில் 16 நாள் டிக்கெட்டுகள் முன்பதிவு

கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு, 16 நாட்களுக்கான இரண்டாம் வகுப்பு மற்றும் 'ஏசி' மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகளிடம் உள்ள அமோக வரவேற்பால், மேலும் இரண்டு பெட்டிகள் இணைத்து இயக்கப்பட ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர்.


சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம் - மயிலாடுதுறை - தஞ்சை வழியாக நாகூருக்கு, கடந்த 23ம் தேதியிலிருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு நாளுக்கு நாள் மக்கள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த ரயில், சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி)'ஏசி' மூன்றாம் வகுப்பு மற்றும் 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் இரவு நிலவரப்படி, மே 8ம் தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ரயிலில் சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு பயணம் செய்ய இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) மற்றும் 'ஏசி' மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் வரும் 24ம் தேதி வரை (16 நாட்களுக்கு) நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் மே 17ம் தேதி வரை 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.


இந்த ரயிலில் நாகூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு வரும் மே 12 மற்றும் 13ம் தேதிகளைத் தவிர வரும் மே 27ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) டிக்கெட்டுகளும், வரும் மே 12, 13 மற்றும் 14ம் தேதிகளைத் தவிர வரும் மே 17ம் தேதி வரை 'ஏசி' மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் வரும் மே 6ம் தேதியைத் தவிர வரும் மே 10ம் தேதி வரை அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.


இந்த ரயிலில் சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சைக்கு வரும் மே 24ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) டிக்கெட்டுகளும், மே 18ம் தேதி வரை 'ஏசி' மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகளும், வரும் மே 17ம் தேதி வரை 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்கு மக்களிடம் கிடைத்துள்ள அமோக வரவேற்பையொட்டி கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைத்து இயக்கவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

0 comments: