தஞ்சையில் ஏப்., 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் பிரதான கட்டிட கூட்ட அறை முதல் மாடியில் காலை 10.30 மணிக்கு கலெக்டர் சண்முகம் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள், விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தோட்டக்கலைத்துறை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் தெரிவிக்குமாறு கலெக்டர் சண்முகம் கேட்டுக் கொண்டார்.

ஐம்பொன் சிலை திருட்டு மன்னை அருகே பரபரப்பு மன்னார்குடி: மன்னார்குடி அருகே உள்ள இளவனூர் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட அம்மன் உற்சவர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மகாமாரியம்மன் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். 1992ல் இங்கு கும்பாபிஷேகம் நடந்தது.

இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள், கிராமத்தில் உள்ள மின்வசதியை துண்டித்துவிட்டு கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலையை திருடிச் சென்றனர்.

இக்கோவிலில் பூசாரியாக அகோரமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சித்ரா தினமும் கோவிலுக்குச் சென்று சுத்தம் செய்வது வழக்கம். அதுபோல, நேற்று காலை கோவிலுக்கு சென்றபோது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்று ஊர்மக்களுக்கு தெரிவித்தார். தகவலறிந்த திருமக்கோட்டை போலீஸார் சம்பவ இடம் சென்று டி.எஸ்.பி., குணசேகரன் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இச்சிலையின் மதிப்பு ஐந்து லட்சமாகும்.

0 comments: