கொரடாச்சேரி பேரூராட்சி இடைத்தேர்தலில் திமுக , அதிமுகவினர் தீவிர பிரசாரம் செய்தனர்.
கொரடாச்சேரி பேரூராட்சி இடைத்தேர்தல் நாளை (19ம் தேதி) நடக்கிறது. இதை ஒட்டி நேற்று (17ம் தேதி) மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதில் திமுக, அதிமுகவினர் தீவிர பிரசாரம் செய்தனர். திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் கட்சியினர் தீவிர ஓட்டு சேகரித்தனர்.
ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர் மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வட்டத்தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் பலர் வீடு வீடாக சென்ற ஓட்டு சேகரித்தனர். இதேபோல் அமைச்சர் மதிவாணன், எம்.பி. விஜயன் ஆகியோரும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.
இதேபோல் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.காமராஜ் தலைமையில் முன்னாள் எம்.பி. செல்வராஜ், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ராமகுணசேகரன், இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் வீரசேனன், மா.கம்யூ மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வை.செல்வராஜ் மற்றும் கட்சியினர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். பிரசாரம் நிறைவடைந்த நிலையில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 21ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது.
ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் நந்தகுமார், உதவி தேர்தல் அலுவலர்கள் ராஜன்பாபு, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., பிரவின் குமார் அபினபு தலைமையில் திருவாரூர் டி.எஸ்.பி. சீனிவாசன், கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment