தொண்டியில் மேடான பகுதிக்கு குடிநீர் சப்ளை: கலெக்டர் உறுதி

தொண்டியில் மேடான பகுதிகளுக்கு குடிநீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஹரிஹரன் உறுதி அளித்தார்.
தொண்டியில் நேற்று முன்தினம் கலெக்டர் ஹரிஹரன் குடிநீர் சம்பந்தமாக ஆய்வு செய்தார். தொண்டியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் காவிரி நீர் ஏற்றுவது குறித்தும் கிராமங்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது குறித்தும் ஆய்வு செய்தார்.

அப்போது பேரூராட்சி தலைவர் பாலுச்சாமி கலெக்டரிடம் ,''தொண்டியில் மகாசக்திபுரம், பயணியர் விடுதி போன்ற இடங்கள் மேடான பகுதியாக உள்ளது. இப்பகுதிக்கு தண்ணீர் சீராக செல்வதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிபடுகிறார்கள். இப்பகுதிக்கு தனியாக பைப் லைன் பதித்து தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கவேண்டும் ,''என்றார். ''இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கபடும்,'' என, கலெக்டர் உறுதியளித்தார்.

0 comments: