சர்வதேச போதை கடத்தல்: இந்தியர்களுக்கு பிரிட்டனில் சிறை

போதை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேர் பிரிட்டனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பிரிட்டன் சிறையின் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர் ஜோகிந்தரநாத் ராஜ்கூமர் (57). இவரது மகன் சுனில் ராஜ்கூமர் (25). சர்வதேச போதை கடத்தலில் கைதேர்ந்தவன் அந்தோணி ஸ்பென்சர். ஹாலந்திலிருந்து பிரிட்டனுக்கு போதை கடத்துவதில் ஸ்பென்சருடன் ஜோகிந்தர், ராஜ் உள்ளிட்ட ஏழு பேர் உடந்தையாக இருந்து செயல்பட்டுள்ளனர்.


சிமென்ட் கலவை இயந்திரம் என்ற பெயரில் அத்துடன் உயர் ரக போதை பொருட்களையும் இவர்கள் பிரிட்டனுக்கு கடத்தி வந்துள்ளனர்.ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள போதைக் கிடங்கை ராஜ் பராமரித்து வந்தார். இங்குள்ள தோட்டத்தில் குழி தோண்டி 140 கிலோ எடையுள்ள உயர் ரக அபின் போதை மருந்தை இவர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றம் தொடர்பாக, கடந்த ஆண்டு நெதர்லாந்திலிருந்து ஸ்பென்சர், பிரிட்டனிடம் ஒப்படைக்கப்பட்டான்.


இந்த வழக்கை, பிர்மிங்காம் கோர்ட் விசாரித்து, ஏழு பேருக்கும் சிறை தண்டனை அளித்துள்ளது. இதில், ஜோகிந்தரநாத்துக்கு 3.9 ஆண்டு சிறையும், ராஜ்கூமருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.

0 comments: