நாகை மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கூடுதலாக கோதுமை வழங்க 30 டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாகை மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 220 டன் கோதுமை வழங்க அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில் 2010 ஏப்ரல் மாதத்திற்கு மட்டும் கூடுதலாக 30 டன் கோதுமை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கூடுதல் கோதுமை அனைத்து தாலுகாவிற்கும் ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. எனவே அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் ஏப்ரல் மாதத்தில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கோதுமையை கார்டு ஒன்றுக்கு 5 கிலோ வீதம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பெற்று பயன்பெறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment