ராஜஸ்தான் அணிக்கு ஷில்பா ஓனரா அல்லது பினாமியா? வருமான வரித்துறை சந்தேகம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களாக உள்ள நடிகை ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் வேறு யாருக்கோ பினாமியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் விவகாரத்தில் வசமாக சிக்கிக் கொண்டுள்ள மோடிக்கு பெரிதும் வக்காலத்து வாங்கி வருபவர் ஷில்பா ஷெட்டி. இப்போது இந்த ஆதரவின் பின்னணியில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷில்பாஷெட்டியும் அவருடைய கணவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முதலீடு செய்துள்ள பணத்தின் ஒரு பகுதி கேய்மான் தீவில் இருந்து வந்துள்ளது. இந்த பணம் உண்மையிலேயே ஷில்பாஷெட்டியின் பணமா? அல்லது வேறு யாரோ முதலீடு செய்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேறு யாரோ தங்களின் கறுப்புப் பணத்தை ஷில்பாஷெட்டி மூலம் வெள்ளையாக்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே அந்த பணம் எப்படி வந்தது என்பது பற்றி வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

எனவே ஐ.பி.எல்.லில் ஷில்பாஷெட்டி முதலீடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்த நோட்டீஸும் ஷில்பாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுபற்றி ஷில்பா ஷெட்டி கூறுகையில், "வருமான வரித்துறை எங்களிடம் சில ஆவணங்களை பெற்று சென்று இருப்பது உண்மைதான்.
ஆனால் இதுபற்றி பத்திரிகையிடம் எந்த தகவலும் சொல்ல முடியாது.
தேவையான அனைத்து ஆவணங்களையும் அவர்கள் எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் முழு விசாரணையும் முடிக்கட்டும். அதன் பிறகு மற்ற விஷயங்களை தெரிவிக்கிறேன்" என்றார்.

0 comments: