முஷாரப்பை கைது செய்ய தயார்

பலூசிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டால், முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்ய தயாராக உள்ளோம் என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அதிபராக முஷாரப் இருந்த போது, பலூசிஸ்தான் மாகாணத்திற்கு அதிக அதிகாரம் கோரி, அக்பர் பக்டி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இதற்கு சில பிரிவினைவாதிகளும் ஆதரவளித்தனர். இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக, 2006ம் ஆண்டு முஷாரப் உத்தரவின் பேரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் அக்பர் பக்டி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் தலைவர் அக்பர் பக்டியை கொலை செய்ய உத்தரவிட்ட முஷாரப் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரி, பக்டியின் பேரன் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முஷாரப்புக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.



இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் குறிப்பிடுகையில்,

"பக்டி குடும்பத்தினரின் புகாரை பரிசீலித்து வருகிறோம். இருப்பினும் பலூசிஸ்தான் மாகாண அரசு முறைப்படி முஷாரப்பை கைது செய்யக்கோரினால், அவரை கைது செய்யத் தயாராக உள்ளோம்' என்றார்.

0 comments: