அண்ணா நகர் டவர் பூங்காவில், நீச்சல் குளம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அண்ணா நகர் டவர் பூங்காவை மூன்று கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் அழகுபடுத்தும் பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பூங்காவில், குழந்தைகள் விளையாட்டுத் திடல், தியான மேடை, திறந்தவெளி கலையரங்கம், ஸ்கேட்டிங் விளையாட்டு மையம், நடை பாதை மற்றும் புல்தரைகள் அமைக்கப்பட உள்ளன.
பூங்காவில் மேம்பாட்டு பணிகள் அனைத்தும் முடிந்து, மூன்று மாதங் களில் பொதுமக்கள் பயனுக்கு வரும் நிலையில் உள்ளது. பூங்காவில் மேம் பாட்டுப் பணிகள் நடை பெறுவதை, மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மேயர் சுப்ரமணியன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அப்போது, "16 ஏக்கர் பரப்பளவு கொண்ட டவர் பூங்காவில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும்' என மின்துறை அமைச்சர், மேயரிடம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து மேயர், டவர் பூங்காவில் நீச்சல் குளம் அமைக்கப்படும் என கூறினார். அமைச்சருடன் ஆளுங் கட்சித் தலைவர் ராமலிங்கம், மண்டல அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment